வைரலாகும் தளபதி மு .க ஸ்டாலின் வீடியோ..!!

சைஞானி இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என்று பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினியும், கமலும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கமல் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்க வேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம் என்றார்.
தன்னை பலரும் வாழ்த்துவதை பார்த்த இளையராஜா ட்விட்டரில் தெரிவித்ததாவது,
என் மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர் .உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி… from Seattle, USA என்றார்.
இதற்கிடையே இளையராஜாவை சமூக வலைதளங்களில் விளாசவும் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அன்றே சொன்னார் தளபதி என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வலம் வந்து
அந்த வீடியோவை பார்த்த சிலரோ, இளையராஜா மீது ஏன் இந்த அளவுக்கு வன்மம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலரோ, தளபதி சொல்வதில் தவறு இல்லையே என்கிறார்கள்.