ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி! மக்கள் செல்வனின் வில்லத்தனத்தை பார்த்து மிரளப்போகும் பாலிவுட் ரசிகர்கள்….

August 14, 2022 at 2:55 pm
pc

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றிருக்கிறார் அட்லி. பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். அந்த படம் மூலம் நயன்தாராவும் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். ஷாருக்கானுக்கு ஜோடி நயன்தாரா தான்.

இந்நிலையில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்குமாறு விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் அட்லி. கை நிறைய படங்கள் வைத்திருக்கும் விஜய் சேதுபதி எப்படி டேட்ஸ் ஒதுக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் டேட்ஸ் கொடுத்துவிட்டார்.

ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார். அதனால் ஜவான் படத்தில் விஜய் சேதுபதியின் வில்லத்தனத்தை பார்த்து பாலிவுட் ரசிகர்கள் மிரளப் போகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

இதற்கிடையே அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்று வெளியான தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் நடித்து வருவதில் ஷாருக்கான் ஏக சந்தோஷத்தில் இருக்கிறார். அவர் கூறியதாவது,

இது ஒரு வித்தியாசமான படம். அட்லியின் இயக்கம் எனக்கு பிடித்திருக்கிறது. இந்த ஜானரில் நான் இதுவரை நடித்தது இல்லை. அதனால் தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். எனக்கும், அட்லிக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று நினைக்கிறேன் 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website