ஸ்டண்ட் மாஸ்டர் கே டப் குடுக்கும் கங்குவா நாயகி

October 3, 2023 at 6:18 pm
pc

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி தனது சமூக வலைதளத்தில் அதிரடியாக பறந்து பறந்து ஸ்டண்ட் போடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நாயகி ஆக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி, சமூக வலைதளங்களில் பிரபலம் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் சுமார் 60 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கிளாமர் மற்றும் அதிரடி ஆக்சன் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் ஸ்டண்ட் கலைஞர் ஒருவருடன் ஆக்ஷன் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் பறந்து பறந்து ஸ்டண்ட் கலைஞருடன் மோதும் காட்சியை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இதே போன்ற காட்சிகளில் ‘கங்குவா’ படத்தில் நடித்திருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website