ஸ்ரீமதியை நாசம் செய்தது உண்மையா? அதிகாலை 3.30 மணிக்கு சடலமாக வந்தது அம்பலம்! செவிலியரின் ஆடியோ லீக்

July 31, 2022 at 4:56 pm
pc

கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்த செவிலியரின் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

கடந்த 13ம் தேதி ஸ்ரீமதி பள்ளிக்கூட மாடியிலிருந்து கீழே குறித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்த நிலையில், இதனை மறுத்து தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீமதியின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.

மாணவி இறந்து 4 நாட்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களுக்கு நியாயம் கிடைக்காத நிலையில், திடீரென 17ம் தேதி பெரும் போராட்டமாக வெடித்தது.

இந்த போராட்டத்தில் பொலிசாரின் வாகனங்கள், பள்ளி வாகனங்கள், பள்ளியிலிருந்த பொருட்கள், பள்ளி கட்டிடம் அனைத்தும் அடித்து உடைத்ததோடு தீவைத்து கொளுத்தப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு பின்பு குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, மாணவியை தற்கொலைக்கு தூண்டிதாக பள்ளியில் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா உள்ளிட்ட 5 பேரை சிபிசிஐடி பொலிசார் கைது செய்துள்ளனர்.

மாணவியை முதலில் பார்த்த வாட்ச் மேன்

மாணவி ஸ்ரீமதி இரவு 10.30 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படும் நிலையில், ஆனால் வாட்ச் மேன் காலை 5.30 மணிக்குத் தான் பார்த்து பள்ளி நிர்வாகத்திடம் கூறியதாகவும், பின்பு பள்ளி நிர்வாகம் தங்களது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்பட்டது.

ஆனாலும் மாணவியின் இறப்பு குறித்த உண்மையான தகவல் இரண்டு முறை உடற்கூற ஆய்வு செய்யப்பட்டும் வெளியாகவில்லை. தற்போது பிரபல பத்திரிக்கை மாணவி இறப்பிற்கு பின்பு பள்ளி நிர்வாகியான மாலதி (இவர் சாந்திக்கு உதவியாக இருந்தவர்), மற்றும் மருத்துவமனையின் செவிலியரின் ஆடியோ பதிவினை தற்போது வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

பள்ளி நிர்வாகியும், சாந்தியின் உதவியாளருமான மாலதி கூறுகையில்,  சம்பவம் நடந்த நாளில், தான் அங்கே இருந்ததாகவும், சத்தம் எதுவும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

தான் வெளியிலிருந்து வருவதாகவும், 5.15 மணிக்கு வாட்ச் மேன் கூறி தெரிந்ததாகவும், அதன் பின்பே அனைவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் 4 மணிக்கு ஹாஸ்டல் மாணவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஹாஸ்டல் வார்டனுக்கும் அந்த பெண் மிஸ்ஸாகியுள்ளது தெரிவில்லையா என்று கேட்ட போது, அந்த பெண் கீழே இறங்கி படிக்கும் அறைக்கு சென்றிருக்கலாம் என்று கூறிய அவர், 10.30 மணி படிக்கும் நேரமா தூங்கும் நேரமா என்ற கேள்வி, தூங்கும் நேரம் என்றும் மாணவிகள் அனைவரும் 9.30மணிக்கு மேலே சென்றுவிட்டு 10 மணிக்கெல்லாம் தூங்கிவிட்டதாக மாற்றி மாற்றி பேசியதோடு, சற்று கோபத்துடன் பதில் அளித்துள்ளார்.

மருத்துவமனை செவிலியர் கூறியது

மருத்துவமனை செவிலியர் ஒருவர் தனது உறவுக்காரர் ஒருவரிடம் பேசிய ஆடியோவில், அந்தப் பெண்ணின் உடல் விடியற்காலை 3.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டது.

ஆம்புலன்ஸ் எதுவும் வரவில்லை, பள்ளிக்கூட காரில் தான் கொண்டு வந்தாங்க… இரண்டு பசங்க வந்ததோடு, நிற்காமல் ஹாஸ்பிட்டல்ல போட்டுட்டு, அவங்க பெற்றோர் வருவாங்க என்று வேகமாக சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

அதன் பின்பு தான் ஸ்ரீமதியின் பெற்றோருக்கு தகவல் கூறி 6 மணிக்கும் மேல் வந்ததாகவும், ஸ்ரீமதியை கொண்டு வரும் பொழுது இருந்த மருத்துவர் பார்த்துவிட்டார், எல்லாம் முடிஞ்சு போச்சு 5 மணி நேரத்திற்கு முன்னாடியே  என்றும் கூறியதாக கூறியுள்ளார்.

அந்த பெண்ணிடம் எதிர்முனையில் பேசும் நபர், போஸ்ட்மார்ட்டம் பண்ணும்போதே நேரில் பார்த்தீயாம்மா? உடலில் ஏதாவது தழும்பு காயம் இருந்ததா? நேரடியாக தான் பார்த்தேன்ணா, தழும்பு எல்லாம் இருந்தது.

ஸ்ரீமதியின் சுடிதார் பேண்ட் பின்னே நாடா வருமாறு போடப்பட்டிருந்ததாகவும், நாசம் பண்ணிட்டாங்களா என்று நபர் கேட்டதற்கு ஆமா என்றும் பதில் அளித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website