ஹைப்போதைராய்டு சரி செய்யும் வல்லாரை மாத்திரை, தயாரிக்கும் முறை பற்றி தெரியுமா …?

January 29, 2023 at 8:48 am
pc

வல்லாரை கீரை சக்திவாய்ந்த மூலிகை. வல்லாரை துவையல், வல்லாரை சட்னி, வல்லாரை பொடி என்று விதவிதமாக தயாரிக்கும் இவை அபாரமான மருத்துவ குணங்களை கொண்டவை. இது தைராய்டு சுரப்புக்கும் உறுதுணையாக இருக்கும் என்பது தெரியுமா? தைராய்டு சுரப்பு குறைபாடு, வல்லாரை எப்படி அதற்கு உதவுகிறது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.வல்லாரை மூளையின் செயல்பாடு மற்றும் நரம்பு செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், மூட்டு வலியை குறைக்கவும், மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றை குறைக்கவும் பெரும் நன்மைகளை அளிக்கிறது. அதே போன்று தைராய்டு சுரப்புக்கும் இவை உதவுகிறது. வளர்சிதை மாற்ற வேகத்தை கட்டுப்படுத்தும் தைராய்டு சுரப்பு ஹார்மோன் ஆரோக்கியத்துக்கு இந்த வல்லாரை உதவுகிறது.

தைராய்டு என்றால் என்ன?

தைராய்டு உங்கள் தோலின் கீழ் உங்கள் கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. இது நாளமில்லா அமைப்பின் ஒரு பகுதியாகும். சில ஹார்மோன்களை உற்பத்தி செய்து வெளியிடுவதன் மூலம் உங்கள் உடலின் பல முக்கிய செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது.
குறிப்பாக வளர்சிதை மாற்றங்கள். உடல் எடுத்துகொள்ளும் உணவை ஆற்றலாக மாற்றும் செயல்முறை இது. உடலில் அனைத்து செல்களும் செயல்பட ஆற்றல் தேவை. தைராய்டு சரிவர வேலை செய்யவில்லை என்றால் அது முழு உடலையும் பாதிக்கும். அதனால் தைராய்டு சுரப்பை ஆரோக்கியமாக வைத்துகொள்ள வேண்டும். அதற்கு உதவும் மூலிகையில் வல்லாரயும் ஒன்று.

ஹைப்போ தைராய்டு குறைபாடு அறிகுறிகள் :

தொண்டைகமறல்
கழுத்துவலி
தோள்பட்டை வலி
குதிகால் வலி
தலைவலி
முக வீக்கம்
கால் வீக்கம்
அஜீரண கோளாறு
தலைமுடி கொட்டுதல்
கோபம்,
மன அழுத்தம்
வயிறு உப்புசம்
கோபம்
வெப்பநிலை குறைதல்
ஒழுங்கற்ற மாதவிடாய்
இப்படி பெரும்பாலான அறிகுறிகள் தைராய்டு பிரச்சனையால் உண்டாகிறது. இந்த ஹைப்போதைராய்டு பிரச்சனைக்கு வல்லாரை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

தைராய்டு பிரச்சனைக்கு வல்லாரை ஏன்?

தைராய்டு பிரச்சனையாகும் போது எடுக்கும் மூலிகைகள் துவர்ப்பு மற்றும் கசப்பு சுவை கொண்டவை. இதில் வல்லாரை கசப்புத்தன்மை கொண்டது.
வல்லாரை ஹைப்போதைராய்டில் உண்டாகும் மலச்சிக்கலை சரி செய்யக்கூடியது.
முகம் கை, கால் வீக்கம் தைராய்டில் இருக்கும். வல்லாரை சிறுநீர்பெருக்கியாக செயல்படும் என்பதால் இது சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரித்து வீக்கத்தை அதிகரிக்கும் தன்மையை குறைக்கும்.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை சமநிலை செய்யும் குணங்களும் வல்லாரைக்கு உண்டு.
ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது தைராய்டின் முக்கியமான அறிகுறிகள் கொண்டிருக்கும். வல்லாரை ருது உண்டாக்கி செய்கை பண்புகளை கொண்டுள்ளது.
வல்லாரை மலமிளக்கியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், ருது செய்கை ஊக்கியாகவும் செயல்படுகிறது.
மேலும் தைராய்டு பிரச்சனை இருக்கும் போது மூளையின் செயல்பாடுகள் மந்தமாக இருக்கும். இது சிந்திக்கும் திறனை மந்தப்படுத்தும். இது brain fog என்றழைக்கப்படுகிறது.
வல்லாரை யோசனை வல்லி என்றழைக்கப்படுகிறது. இது மூளை, தண்டுவடம், மனம் மூன்றும் இணைந்து ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் ஒரு விஷயத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும். இந்த மூன்றையும் ஒருங்கிணைக்கும் தன்மை வல்லாரைக்கு உண்டு.

வல்லாரையில் என்ன இருக்கு?

வல்லாரையில் உயிர்வேதியியல் பொருள்கள் அதிகமாக உள்ளது. இதில் acetic acid,acetamide,brahminicide போன்ற வேதியியல் பொருள்கள் இதில் உண்டு. இது t4 synthesis உதவுகிறது. இந்த t4 synthesis ஹார்மோன் தான் தைராய்டின் ஆக்டிவ் ஹார்மோன். இரத்தத்தில் இந்த ஹார்மோன் அளவை அதிகரிக்க செய்கிறது. இந்த வல்லாரையை எப்படி எடுப்பது என்பதை பார்க்கலாம்.

வல்லாரை மாத்திரைகள் எப்படி தயாரிப்பது?

வல்லாரை கீரையை சுத்தம் செய்து
தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து கொள்ள வேண்டும். இதை 130 கிராம் அளவு அதாவது கடலைப்பருப்பு அளவு மாத்திரைகளாக உருட்டி வெயில் படாமல் நிழலில் உலர்த்தி கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமித்துகொள்ள வேண்டும். இது குன்றிமணி அளவு என்று சித்தமருத்துவத்தில் சொல்லப்படுகிறது. மாதம் ஒரு முறை தயாரித்து கொள்ளலாம்.

இந்த மாத்திரை மூன்று வேளையும் உணவுக்கு முன்பு வெந்நீரில் ஒரு மாத்திரை எடுக்க வேண்டும். இதை தொடர்ந்து எடுக்கும் போது இரத்தத்தில் t4 ஹார்மோன் அளவு அதிகரித்து ஹைப்போதைராய்டு சுரப்பு கட்டுக்குள் வரும்.

மேலும் யோசனைத்திறன், நினைவுத்திறன், அறிவுக்கூர்மை அனைத்தும் சிறப்பாக குணமாகும்.
தைராய்டுக்கு மருந்துகள் ஏதேனும் எடுத்துவந்தாலும் இந்த வல்லாரை மாத்திரையை தொடர்ந்து எடுத்துவந்தால் இரத்தத்தில் t4 ஹார்மோன் தைராய்டு சுரப்பும் அதிகரிக்கும் தைராய்டு அளவும் கட்டுப்படும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website