ஹோட்டல் அறையில் பிணமாக மீட்கப்பட்ட இளம் நடிகை: இன்ஸ்டாவில் வெளியான வீடியோ.!

March 27, 2023 at 9:04 am
pc

போஜ்புரி படங்களில் நடித்தவர் ஆகன்ஷா துபே. 25 வயதே ஆன இவர் உத்தரபிரதேசம் மாநிலம் மிர்சாபூரில் பிறந்த வளர்ந்தவர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பிரபலமானவராக வலம் வருகிறார். இந்நிலையில் ஆகன்ஷா துபே உயிரிழந்த நிலையில் ஹோட்டல் அறையிலிருந்து மீண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஆகன்ஷா, அடிக்கடி ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். படப்பிடிப்பிற்காக வாரணாசி சென்றிருந்த இவர், அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் ஹோட்டலில் இருந்தபடி ஆகன்ஷா ஹோட்டல் ஒன்றில் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அதே ஹோட்டலில் தூக்கில் தொங்கியபடி இவர் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான போஜ்புரி நடிகை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகன்ஷா உடலை கைப்பற்றியுள்ள போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி சமரசிங் என்பவரை காதலித்து வருவதாக அறிவித்தார் நடிகை ஆகன்ஷா.

தனது காதலருடன் எடுத்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். ஆகன்ஷாவின் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோஷியல் மீடியாவில் பிரபலமாக திகழும் ஆகன்ஷாவை இன்ஸ்டாகிராமில் 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இவரது திடீர் தற்கொலை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website