1 ஸ்பூன் பேக்கிங் சோடா இருந்தால் இவ்வளவு விஷயங்களை செய்ய முடியுமா..?

March 6, 2023 at 6:40 am
pc

பேக்கிங் சோடா சமையலுக்கு மற்றும் கேக் செய்வதற்கு மட்டுமே பயன்படும் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அது பல்வேறு கிளீனிங் மற்றும் அழகு குறிப்புகளிலும் கூட பயன்படுத்தப்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அந்த வகையில் இந்த 8 வியக்க வைக்கும் விஷயங்கள் பேக்கிங் சோடா இருந்தால் சுலபமாக செய்து அசத்தலாம் என்கிற அழகு குறிப்பு ரகசியங்களை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.


குறிப்பு 1:


மூன்று பங்கு பேக்கிங் சோடாவுடன், ஒரு பங்கு தண்ணீர் சேர்த்து குழைத்துக் கொள்ளவும். இதை சர்குலர் மோஷனில் முன்னிருந்து பின்புறமாகவும் பின்னிருந்து முன்புறமாகவும் வட்ட வடிவில் மெதுவாக சுழற்றிக் கொண்டே முகத்தில் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இப்படி செய்யும் பொழுது அதில் இருக்கும் சொரசொரப்பு தன்மை காரணமாக, இறந்து போன செல்கள் அனைத்தும் நீங்கிவிடும். கண்களை சுற்றி தேய்க்கும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி கொள்ளுங்கள், முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.


குறிப்பு 2:


இதே போல பேக்கிங் சோடாவை தண்ணீரில் சேர்த்து கலந்து கைகள் மற்றும் விரல்களில் லேசாக மசாஜ் செய்து கொள்ளுங்கள், கைகள் மிருதுவாக இருக்கும். நீங்கள் நெயில் பாலிஷ் போடும் பொழுது நகத்திற்கு இது போல மசாஜ் செய்யுங்கள். பின்பு நெயில் பாலிஷ் போட்டதும் ஆங்காங்கே விரல்களில் பட்டுவிட்டால் அதையும் ஒரு பிரஷ்சால் பேக்கிங் சோடாவை தொட்டு தேய்த்தால் சுலபமாக நீங்கிவிடும்.


குறிப்பு 3:


ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை நீங்கள் வேக்சிங் அல்லது ரேசிங் செய்து முடியை அகற்றிய பின்பு அந்த இடத்தில் தேய்த்து கொடுத்தால் எரிச்சல் அடங்கும்.


குறிப்பு 4:


சில வகையான ஷாம்புக்களில் அதிகப்படியான செயற்கை ரசாயனங்கள் கலந்திருக்கும். நீங்கள் ஷாம்பூவுடன் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்து கொள்வதால் இந்த ரசாயனங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறையும். கண்டிஷனர், சீரம் போன்றவற்றிலும் உபயோகிக்கலாம்.


குறிப்பு 5:


நீங்கள் பயன்படுத்தக்கூடிய சீப்பு மற்றும் பிரஷ்களில் இருக்கக்கூடிய விடாப்பிடியான அழுக்குகள் மற்றும் தூசிகளை அகற்ற ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் ஒரு கப் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதனால் எண்ணெய் பிசுக்குகள், அழுக்குகள், தூசுகள் அனைத்தும் எளிதில் அகழும்.


குறிப்பு 6:


அக்குள் பகுதிகளில் இருக்கும் வியர்வை துர்நாற்றத்தை அகற்ற சிறிதளவு பேக்கிங் சோடாவை, இரவு தூங்கும் பொழுது கொஞ்சம் போல தடவிக் கொண்டு தூங்கலாம், இதனால் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.


குறிப்பு 7:


பொதுவாக இயற்கை பற்பசைகளில் பேக்கிங் சோடா கலக்கப்படுவது உண்டு. பற்கள் வெள்ளை வெளேரென பளிச்சுன்னு இருக்க, மஞ்சள் கறை நீங்க சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் டூத் பேஸ்ட்டை கலந்து பற்களை சுத்தம் செய்யலாம். இதனை நீங்கள் உங்களுடைய டென்டிஸ்டிடம் கேட்டு செய்வது நல்லது.


குறிப்பு 8:


தலைமுடியில் அதிகப்படியான எண்ணெயை தடவி விட்டால், சிறிதளவு பேக்கிங் சோடாவை போட்டு மசாஜ் செய்யுங்கள். எல்லா இடங்களிலும் படும்படி பரப்பி விடுங்கள். பிறகு நீங்கள் சீப்பை கொண்டு தலைவாரினால் எண்ணெய் பசை அதிகம் இருக்காது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website