100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த ரஜினியின் படங்கள்!

April 2, 2023 at 11:55 am
pc

இப்போதெல்லாம் 100 கோடி வசூல் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. படமே 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கின்றனர், அப்படி இருக்கையில் நூறு கோடி வசூல் வந்து தானே ஆக வேண்டும். ஆனால் 15 வருடத்திற்கு முன்னரே ரஜினியின் 6 படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை ஆடி உள்ளது.

முத்து: 1995 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, ரகுவரன், ராதாரவி, செந்தில், வடிவேலு இணைந்து நடித்த படம் முத்து. இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இதில் ரஜினி இரண்டு வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். தமிழில் மட்டுமல்ல இந்த படம் தெலுங்கு, ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் ஜப்பானிய மொழியிலும் வெளியாகி ஹிட் ஆனது. 90களில் வெளியான படங்களில் 100 கோடி வசூலை பாக்ஸ் ஆபிஸில் குவித்த படங்களில் இந்த படமும் முக்கிய இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது .

அருணாச்சலம்: 1997 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் ரஜினியின் ஸ்டைல் மற்றும் ஆக்சன் போன்றவை சூப்பர் ஸ்டார் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படமும் திரையரங்கில் தாறுமாறாக ஓடி 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது.

படையப்பா: 1999 ஆம் ஆண்டு கேஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த சூப்பர் ஹிட் படம் தான் படையப்பா. இந்த படம் 1996ல் வெளியான இந்தியன் படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இந்த படத்தில் ரஜினி சொன்ன ஒவ்வொரு பஞ்ச் டயலாக்கும் இப்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் இந்த படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியது மட்டுமின்றி 210 பிரிண்டுக்கள் மற்றும் 7 லட்சம் ஆடியோ கேசட்டுகள் உலகம் முழுவதும் வெளியான முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.

அண்ணாமலை: 1992 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, குஷ்பூ இணைந்து நடித்த சூப்பர் ஹிட் படம் தான் அண்ணாமலை. இந்தப் படம் வெறும் 45 நாட்களில் மட்டுமே எடுக்கப்பட்டது. உலக அளவில் அண்ணாமலை திரைப்படத்திற்கு 4 மில்லியன் டாலர் வருவாயாக கிடைத்தது. இந்தப் படத்திற்கு திரையரங்குகளில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி 175 நாட்கள் வரை தியேட்டர்களில் ஓடி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

சந்திரமுகி: 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சந்திரமுகி. திரில்லர் திரைப்படமாக வெளியான இந்தப் படத்திற்கும் 100 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்தது. இந்த படம் 1999 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெர்மனி மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் படமும் சந்திரமுகி தான்.

எந்திரன்: 2010 பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எந்திரன் திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். சயின்டிஃபிக் படமாக வெளியான இந்தப் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படம் தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள முக்கிய நகரங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது. உலக அளவில் எந்திரன் திரைப்படம் 500 கோடியை குவித்தது. அது மட்டுமல்ல இந்தப் படம் இதற்கு முன்பு வெளியான அனைத்து தமிழ் படங்களின் வசூலையும் முறியடித்து சாதனை படைத்தது.

இவ்வாறு இந்த ஆறு படங்கள் தான் வசூலில் ரஜினிக்கு கூரையை பிச்சிக்கிட்டு கொட்டிய படங்களாகும். இந்த படங்கள் அனைத்தும் அசால்ட்டாக 100 கோடியை தாண்டி திரையரங்கில் நீண்ட நாட்கள் ஓடிய படங்கள் ஆகும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website