11 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தாயின் கையிலிருந்து தவறி ஆற்றில் விழுந்த கொடுமை! பரிதவிக்கும் குடும்பம் ..

மலப்புரத்தில் 11 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தாயின் கையிலிருந்து தவறி ஆற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு விசித்திரமான விபத்தில், 11 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை தனது தாயின் கையிலிருந்து நழுவி ஆற்றில் விழுந்தது. இச்சம்பவம் செவ்வாய்கிழமை இரவு 11.00 மணியளவில் ஏலம்குளம் பகுதியில் நடந்துள்ளது. உறவினர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் தேடியும், புதிதாகப் பிறந்த குழந்தை குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாய், வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரயில் பாலத்திற்கு குழந்தையை தூக்கிச் சென்றதாக தெரிய வந்துள்ளது. நிலம்பூரில் இருந்து ஷோரனூர் செல்லும் ரயில் பாலத்தின் வழியாக சென்ற சரக்கு ரயிலின் முன் விழாமல் தப்பிக்க முயன்றபோது குழந்தை கையிலிருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இரவு 9.00 மணி முதல் தாயும் குழந்தையும் காணவில்லை என உறவினர்கள் அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் அவர்களை தேடிய நிலையில், பெண் திரும்பி வந்தார்.
குழந்தையைப் பற்றி அவரிடம் கேட்டபோது, அவர் நடந்த விஷயத்தை விளக்கினார். பாலத்தின் மீது ரயில் வந்துகொண்டிருந்ததால் ஏற்பட்ட அதிர்வுகளால் குழந்தை தனது கைகளில் இருந்து தவறி விழுந்ததாக அந்த பெண் கூறினார்.
இரவு முதல் குழந்தையை தேடும் பணி நடந்து வருகிறது. இருப்பினும், குழந்தைக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து எந்த துப்பும் இல்லை. ஆற்றில் அதிக தண்ணீர் சென்றால் குழந்தை உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
பச்சிளம் குழந்தை ஆற்றில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.