11 வயதில் கோடிகளில் சம்பாதிக்கும் மகேஷ் பாபு மகள்!

தெலுங்கு சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருந்து வருபவர் மகேஷ் பாபு. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. மகேஷ் பாபு டோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக பல கோடி சம்பளம் வாங்கும் நிலையில் அவரது மகள் சித்தாரா தற்போது 11 வயதிலேயே விளம்பரங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
சமீபத்தில் சித்தாரா நகை கடை விளம்பரம் ஒன்றில் நடித்து இருந்தார். அந்த விளம்பரம் அமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கத்தில் இருக்கும் பெரிய திரைகளில் வந்தது பெரிய அளவில் வைரல் ஆனது. அது பற்றி பெருமையாக மகேஷ் பாபுவும் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் சித்தாரா அந்த விளம்பரத்திற்காக 1 கோடி ருபாய் சம்பளமாக பெற்று இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.