13 வருடங்களுக்கு பிறகு ஹாரிஸ் உடன் இணையும் கமல்

October 6, 2023 at 7:58 pm
pc

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் 233வது படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கமல் 233’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதையை கமல் எழுதியுள்ளார் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சிம்பு நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்று கூறப்படுகிறது. அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வேட்டையாடு விளையாடு’ என்ற திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்த நிலையில் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமல் – ஹாரிஸ் ஜெயராஜ் இணைய இருப்பதால் இந்த படத்திலும் ’வேட்டையாடு விளையாடு’ படத்தில் இடம்பெற்ற மேஜிக் இசை தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்..

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website