15க்கும் மேற்பட்ட இருமல் மருந்துகளுக்கு தடை!

March 16, 2023 at 7:07 am
pc

பிரித்தானியாவில் 15க்கும் மேற்பட்ட இருமல் மருந்துகள் விற்பனையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவற்றிலுள்ள ஒரு உட்பொருள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில இருமல் மருந்துகளில், இருமலைக் கட்டுப்படுத்துவதற்காக pholcodine என்னும் ஒரு பொருள் சேர்க்கப்படுகிறது.

இந்த pholcodine, சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சிலருக்கோ அறுவை சிகிச்சைக்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகலாம்.

ஆகவேதான் இந்த மருந்துகள் திரும்பப்பெறப்படுகின்றன. அவற்றை வாங்கியுள்ள மக்கள் மருந்தகங்களை அணுகி அவற்றிற்கு பதிலாக மாற்று மருந்துகளைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கீழ்க்கண்ட மருந்துகளில் pholcodine உள்ளது:

Boots Night Cough Relief Oral Solution, PL 00014/0230,

Boots Dry Cough Syrup 6 Years+,

Boots Day Cold & Flu Relief Oral Solution,

Cofsed Linctu,

Care Pholcodine 5mg/5ml Oral Solution Sugar Free,

Galenphol Linctus,

Galenphol Paediatric Linctus, Galenphol Strong Linctus,

Covonia Dry Cough Sugar Free Formula,

Pholcodine Linctus Bells Healthcare 5mg Per 5ml Oral Solution,

Numark Pholcodine 5mg per 5ml Oral Solution,

Well Pharmaceuticals Pholcodine 5mg per 5ml Oral Solution,

Superdrug Pholcodine Linctus BP,

Pholcodine Linctus BP,

Strong Pholcodine Linctus BP,

Haleon Day & Night Nurse Capsules,

Haleon Day Nurse Capsules,

Haleon Day Nurse,

ஐரோப்பாவின் மருந்துகள் ஒழுங்கமைப்பும், ஏற்கனவே, pholcodine உள்ள இருமல் மருந்துகளைத் திரும்பப் பெற பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website