15 வருடங்களுக்கு பிறகு குடும்பத்தை பார்க்க வந்த தந்தை! அரிவாளால் வெட்டி கொலை செய்த மகன் ..அதிர்ச்சி பின்னணி
தஞ்சாவூர் நாஞ்சிகோட்டை சாலை ஈ.பி. காலனி அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் ஏ. கரும்பாயிரம் (46). திருப்பூரில் கட்டடத் தொழிலாளியான இவருக்கு ராதிகா (38) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஜீவா (23), விக்ரம் (20) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மனைவி ராதிகாவை பார்ப்பதற்காக, கரும்பாயிரம் நேற்றிரவு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, கரும்பாயிரத்துக்கும், ராதிகா மற்றும் மகன்களுடன் அதிகாலை குடும்பப் பிரச்னை தொடர்பாக த.க.ராறு ஏற்பட்டுள்ளது. மேலும், இத்தனை ஆண்டுகள் எங்களுக்கு என்ன செய்தாய் என கேட்டு மகன் ச.ண்.டை போட்டுள்ளார்.
இதில் தகராறு முற்றி ராதிகாவை கரும்பாயிரம் ம.ண்வெ.ட்.டியால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து கோபமடைந்த மூத்த மகன் ஜீவா அரிவாளால் கரும்பாயிரத்தை வெட்டியுள்ளார். இதனால் பலத்த கா.ய.மடைந்த கருப்பாயிரம் சம்பவ இடத்திலேயே உ.யி.ரி.ழந்தார்.
தகவறிந்து வந்த தமிழ் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இ.க்கொ.லை தொடர்பாக வழக்குப் பதிந்து ஜீவாவை தேடி வருகின்றனர்.