18 வயது இளைஞர் போல மாற பல மில்லியன்களை செலவிடும் 45 வயது தொழிலதிபர்…

January 27, 2023 at 2:15 pm
pc

அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் 18 வயது இளைஞர் போல மாற பல மில்லியன்களை செலவிட்டு வருகிறார்.

தலைமை செயல் அதிகாரி 

லாஸ் ஏஞ்செல்ஸை தளமாக கொண்ட நியூரோடெக்னாலஜி நிறுவனமான Kernel-லின் தலைமை செயல் அதிகாரி பிரையன் ஜான்சன். 45 வயதாகும் இவர் 18 வயது இளைஞரைப் போல மாற முயற்சி செய்து வருகிறார். 

இவர் ‘Project Blueprint’ எனப்படும் தொடர்ச்சியான சோதனைகள் மூலம் தனது உடலை 5.1 ஆண்டுகளாக குறைத்ததாக கூறுகிறார். 30 மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கொண்ட குழுவுடன் இணைந்து, ஜான்சன் தனது ஒவ்வொரு உறுப்புகளின் வயதையும் மாற்றியமைப்பதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

தினசரி அடிப்படையில் தனது எடை, உடல் நிறை குறியீட்டெண், குளுக்கோஸ், இதய துடிப்பு மாறுபாடுகள் மற்றும் விழித்திருக்கும் உடல் வெப்பநிலையை Biomarkers மூலம் ஜான்சன் கண்காணிக்கிறார். 

பயிற்சிகள் 

அவர் 18 வயது இளைஞரின் மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், தசைநாண்கள், பற்கள், தோல், முடி, சிறுநீர்ப்பை, ஆண்குறி மற்றும் மலக்குடல் ஆகியவற்றை பெற விரும்புகிறார் என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஆனால் அவர் தினசரி சில பழக்க வழக்கங்களை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். அதாவது காலையில் 5 மணிக்கு எழுவது, ஒரு நாளைக்கு சரியாக 1,977 சைவ கலோரிகளை உட்கொள்வது மற்றும் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகள் போன்றவற்றை செய்ய வேண்டும்.

ஆண்டுக்கு 2 மில்லியன் டொலர்கள் 

மேலும் அவர் கூடுதல் ரத்த பரிசோதனைகள், Ultrasounds, MRIs மற்றும் Colonoscopies ஆகியவற்றின் மூலம் முடிவுகளை மதிப்பீடு செய்கிறார். 

பிரையன் ஜான்சன் இந்த ஆண்டில் மட்டும் இந்த சோதனைகள் மூலம் சுய தீங்கு மற்றும் சிதைவு ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க சுமார் 2 மில்லியன் டொலர்களை செலவழிக்க உள்ளார். அதே போல் ஒவ்வொரு ஆண்டும் அவர் இதே தொகையை செலவழிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website