2022ம் ஆண்டில் பலித்து விட்ட பாபா வாங்காவின் 2 கணிப்புகள்… அடுத்தது என்ன?

July 18, 2022 at 10:31 am
pc

நடப்பு 2022ம் ஆண்டில் பாபா வாங்காவின் 2 கணிப்புகள் முன்பே பலித்து விட்ட நிலையில், அடுத்து நடக்க இருப்பது என்ன என காண்போம்.

வடக்கு மாசிடோனியாவில் ஸ்ட்ருமிகா நகரில் கடந்த 1911ம் ஆண்டு பிறந்தவர் பாபா வாங்கா. இவரது இயற்பெயர் வாஞ்ஜெலியா பண்டீவா கஷ்டரோவா. 

தனது 12 வயதில் கடுமையான சூறாவளி ஒன்றால் இவரது பார்வை பறிபோனது. ஒரு பெரிய சூறாவளி புயல் இவரை தரையில் இருந்து தூக்கி வீசியது என அவர் அப்போது கூறினார். அதன்பின்னர், நீண்ட தேடுதலுக்கு பின்னர் அவர் கண்டறியப்பட்டார். 

அப்போது, அச்சம் நிறைந்தவராக காணப்பட்ட அவர் கண்களை மணல் மற்றும் தூசு ஆகியவை படலங்களாக மூடியிருந்தன. அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய குடும்பத்தினருக்கு போதிய நிதி வசதியில்லாத சூழலில், வாங்காவுக்கு பார்வை கிடைக்காமல் போனது. ஆனால், வருங்காலம் பற்றிய பார்வை தனக்கு பரிசாக கிடைத்த ஆற்றல் என வாங்கா கூறினார். 

இவர் தனது 85 வயதில் 1996ம் ஆண்டு காலமானார். இவர் 50 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பலித்தும், நடந்தும் உள்ளன.

2022ம் ஆண்டுக்கான அவரது 6 கணிப்புகளில் 2 முன்பே பலித்து விட்டன. அதன்படி, நடப்பு ஆண்டில் ஆசியாவின் பல நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிப்பு அடைவார்கள் என கணித்துள்ளார். 

இதன்படியே சரியாக பலித்துள்ளது. நடப்பு ஆண்டின் பிப்ரவரி மற்றும் ஏப்ரலுக்கு இடைப்பட்ட காலத்தில், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளம் மிக மோசம் வாய்ந்த பேரிடரில் ஒன்றாக அமைந்தது. தென்கிழக்கு குயின்ஸ்லாந்து, வைடு பே-பர்னட் மற்றும் நியூசவுத் வேல்ஸ், பிரிஸ்பேன் உள்ளிட்ட பகுதிகள் உள்பட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 

வறட்சியால், நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என அவர் தெரிவித்து உள்ளார். இது ஐரோப்பிய நாடுகளில் தற்போது நடந்து வருகிறது. கிடைத்துள்ள தகவல்களின்படி, தண்ணீர் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்கும்படி போர்ச்சுகல் அரசு தனது நாட்டு குடிமக்களை கேட்டு கொண்டுள்ளது. 1950ம் ஆண்டுக்கு பின்னர் இத்தாலியில் தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டு உள்ளது.

இதுவரை, 2022ம் ஆண்டுக்கான அவரது பல்வேறு கணிப்புகளில் 2 சரியாக பலித்திருக்கிறது. இந்த ஆண்டில் அவர் கணித்துள்ள பிற விசயங்களாக, சைபீரியாவில் ஒரு புதிய கொடிய வைரசானது வெளிவரும். 

வேற்றுகிரக வாசிகளின் படையெடுப்பு நடைபெறும். வெட்டுக்கிளி படையெடுப்பு மற்றும் கணினியின் கற்பனையான உலக பயன்பாட்டில் மக்கள் அதிகம் மூழ்கி இருப்பார்கள் என தெரிவித்து உள்ளார். 

இவை தவிர, 2023ம் ஆண்டில் பூமியின் சுற்று வட்டபாதையில் மாற்றம் ஏற்படும். 2028ம் ஆண்டில் விண்வெளி வீரர்கள் வெள்ளி கிரகத்திற்கு பயணப்படுவார்கள். 2046ம் ஆண்டில், உறுப்புமாற்று தொழில்நுட்பம் பயனால், மக்கள் 100 வயதுக்கு கூடுதலாக வாழ்வார்கள் என தெரிவித்து உள்ளார். 

2100ம் ஆண்டில் இரவு மறைந்து போகும் என தெரிவித்திருக்கிறார். பூமியின் மற்றொரு பகுதி, செயற்கை சூரிய ஒளியால் வெளிச்சம் உண்டாக்க செய்யப்படும். இவரது கணிப்பின்படி உலகம் 5079ம் ஆண்டு முடிவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website