22 உறுதிமொழிகள் ஏற்று குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகர்! புகைப்படம்

November 9, 2022 at 12:21 pm
pc

புத்த மதத்திற்கு குடும்பத்துடன் மாறிய நடிகர் சாய் தீனா.

புத்த துறவி மௌரியா முன்னிலையில் புத்த மதத்தை தழுவுவதற்காக 22 உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டார்.

பிரபல் நடிகர் சாய் தீனா தனது குடும்பத்தாருடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளார்.

விருமாண்டி, தெறி, எந்திரன், வட சென்னை, பிகில், மாஸ்டர், போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் சாய் தீனா. நேற்று அவர் தனது குடும்பத்தினருடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளார்.

புத்த துறவி மௌரியா முன்னிலையில் புத்த மதத்தை தழுவுவதற்காக 22 உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டு புத்த மதத்திற்கு மாறியுள்ளார். தற்போது, அவர் குடும்பத்தினருடன் புத்த மதத்திற்கு மாறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் தீனா படங்களில் சண்டைக்கலைஞராக நடித்தாலும், தனிப்பட்ட பேட்டிகளில் அவரது பேச்சுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தீனாவின் பேச்சுகளில் சமூகத்தின் மீதான அக்கறை கருத்துகள் அதிகம் வெளிப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website