3 நாளில் 200 கோடி… பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ரிலீஸ் எப்போது?

October 4, 2022 at 1:18 pm
pc

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தயாரான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் ரிலீஸ் ஆன 3 நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

முதல் பாகத்தை படமாக்கும்போதே இரண்டாம் பாகத்துக்கான முழு படப்பிடிப்பையும் சேர்த்து மணிரத்னம் எடுத்து முடித்துவிட்டார். தற்போது 2-ம் பாகம் படத்துக்கு கிராபிக்ஸ், ரீ ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. இந்நிலையில், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website