33 வருடங்களுக்கு பிறகு இணையும் அமிதாப் .தலைவர் 170 படம் பலமாக அமைகிறது

October 3, 2023 at 7:02 pm
pc

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 170’ என்ற படத்தின் அறிவிப்புகள் நேற்று முதல் வெளியாகி கொண்டிருக்கின்றன. நேற்று துஷாரா விஜயன், ரித்திகா சிங் மற்றும் மஞ்சு வாரியர் ஆகிய மூன்று நடிகைகள் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இன்று இந்த படத்தில் பாகுபலி நடிகர் ரானா டகுபாய் இணைந்து இருப்பதாக காலையில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பகத் பாசில் மற்றும் அமிதாப்பச்சன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் முதல் முறையாக பகத் பாசில் இணைகிறார் என்பதும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 33 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ’ஹம்’ என்ற திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் அமிதாப்பச்சனும் சேர்ந்து நடிக்கும் படம் இதுதான் என்பதும் அதேபோல் அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைவர் 170’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளில் இருந்து இந்த படம் பிரமாண்டமாக உருவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website