350 பெண்களுடன் தொடர்பில் இருந்த சஞ்சய் தத்: பரபரப்பை கிளப்பிய பயில்வான்!

June 12, 2023 at 11:35 am
pc

பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனல் வாயிலாக நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறார். சினிமா பிரபலங்கள் மத்தியில் இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தாலும் கொஞ்சமும் அசராத பயில்வான் தொடர்ந்து இந்த வேலையை செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் பட வில்லனை பற்றி அவர் கூறிய விஷயம் இப்போது பேசு பொருளாக மாறி உள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய படத்தில் நடிக்கும் வில்லன்கள் எப்போதுமே பெரிய அளவில் பேசப்படுவார்கள்.

அந்த வகையில் தற்போது லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் மன்சூர் அலிகான், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் போன்ற பலர் வில்லன்களாக நடிக்கிறார்கள். இதில் முக்கிய வில்லனாக பார்க்கப்படுபவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்.

இவரைப் பற்றி தான் தற்போது பயில்வான் பேசி இருக்கிறார். அதாவது இந்தியில் பிரபல நடிகரான சஞ்சய் தத் பாலிவுட் நட்சத்திரங்களான சுனில் மற்றும் நகரிஸ் தத் ஆகியோரின் மகன். இவர் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி மிகுந்த அவதிப்பட்டு வந்தார். அதன் பிறகு போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்தும் மீண்டு வந்தார்.

சமீபத்தில் சஞ்சய் தத் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது நான் 350 பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளேன் என்று வெளிப்படையாக கூறினார். அதில் நடிகை, விலைமாது என் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை சொல்ல நான் வெட்கப்படவில்லை, ஏனென்றால் நான் ஒரு ஆண்மகன் என்று கூறியிருக்கிறாராம்.

அதுமட்டும்இன்றி சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இது குறித்து செய்தியும் எழுதப்பட்டிருக்கிறதாம். பயில்வான் இந்த விஷயத்தை சொன்னதை கேட்டு விஜய் பட வில்லன் இப்படியா என ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும் லியோ படத்தை தொடர்ந்து சஞ்சய் தத்திற்கு நிறைய பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருக்கிறதாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website