38 வயதில் மரணமடைந்த அமெரிக்க மல்யுத்த வீரர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

November 14, 2022 at 5:30 pm
pc

அமெரிக்காவின் UFC மல்யுத்த வீரர் அந்தோணி ஜான்சன் 38 வயதில் மரணமடைந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. UFC எனும் அமெரிக்காவின் கலப்பு தற்காப்பு கலை சண்டையில் பிரபலமானவர் அந்தோணி ஜான்சன்(38). ‘ரம்பிள்’ ஜான்சன் என்று அழைப்பட்ட இவர், பல நாக்-அவுட் வெற்றிகளை பெற்றவர்.

வெல்டர்வெயிட், மிடில்வெயிட், லைட் ஹெவிவெயிட் மற்றும் ஹெவிவெயிட் என பல பிரிவுகளில் ஜான்சன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எந்தவொரு நிமிடத்திலும் நாக்-அவுட் மூலம் போட்டியை முடிக்கும் திறன் கொண்டவர் அந்தோணி ஜான்சன் ஆவார்.

Vadim Nemkov என்ற வீரரை எதிர்கொள்ள ஜான்சன் திட்டமிட்டிருந்த நிலையில், உடல்நல பாதிப்பு காரணமாக அதிலிருந்து விலகினார். குறிப்பிடப்படாத நோயுடன் ரம்பிள் ஜான்சன் தொடர்ந்து போராடினார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது மரணம் சக போட்டியாளர்கள், ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஜான்சனின் சக போட்டியாளரான டேனியல் கார்மிர் வெளியிட்ட உருக்கமான பதிவில்,

‘எளிமையாக ஓய்வெடு சகோதரா. பல மக்களின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்திய அந்தோணி ஜான்சன், ஒரு அக்கறையுடைய நபராகவும் இருந்தார். என்னவொரு மனிதர், ரம்பிள் அவரை தவறவிடும். சில சமயங்களில் வாழ்க்கை நியமானதாக தெரிவதில்லை. இது பயங்கரமான செய்தி. உனது ஆன்மா சாந்தியடையட்டும் ஜான்சன்’ என தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website