44 வயதில் ஒற்றை கையால் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்த ஜோதிகா

April 30, 2023 at 10:20 pm
pc

ஒற்றை கையில் தலைகீழாக நின்று கடுமையாக உடற்பயிற்சி செய்த ஜோதிகாவின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

நடிகை ஜோதிகா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதியா. இவர் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, அர்ஜூன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவருடைய குறும்புத்தனமான நடிப்பாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி நடித்து மக்கள் மனதில் நீங்கா பிடித்தவர்.

2007ம் ஆண்டு ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சூர்யாவுடன் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரில் கலந்தது’, ‘பேரழகன்’, ‘சில்லுனு ஒரு காதல்’ படங்களில் இணைந்து நடித்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பு முழுக்குப்போட்டார். இத்தம்பதிகளுக்கு தியா, தேவ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஜோதிகா நடித்து வருகிறார்.

கடுமையாக உடற்பயிற்சி செய்த ஜோதிகா

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நடிகை ஜோதிகா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், தலைகீழாக நின்று கடுமையாக உடற்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் அடடா.. என்ன ஒரு எனர்ஜி… பெண்கள் அனைவருக்கும் ஜோதிகா ஒரு முன்னுதாரணம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website