45 வயது நடிகருடன் ஜோடி போடும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

August 8, 2023 at 10:45 am
pc

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சோலோ ஹீரோயினாக பல படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் தான் வெளியாகி கொண்டிருக்கிறது.

பல முன்னணி ஹீரோக்கள் தனக்கு வாய்ப்பு தர முன்வரவில்லை, அதனால் தான் இப்படி கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் காட்டமாக ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

புலிமடா என்ற அந்த படத்தினை பிரபல இயக்குனர் ஏகே. சாஜன் இயக்கி வருகிறார். விரைவில் படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தற்போது புது போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website