46 வயதில் உலகின் மிக நீண்ட கூந்தலுக்காக கின்னஸ் சாதனை! நீளமான முடிக்கு பெண் கூறிய ரகசியம்

November 30, 2023 at 10:39 pm
pc

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மிக நீளமான கூந்தல் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா. 46 வயதாகும் இவர் 7 அடி 9 அங்குலத்திற்கு கூந்தலைக் கொண்டிருக்கிறார். 

இதன்மூலம் உலகிலேயே அதிக கூந்தல் கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். தனது 14 வயதில் இருந்து அவருக்கு நீளமாக கூந்தல் வளரத் தொடங்கியுள்ளது. 

பல தசாப்தங்களாக தனது தலைமுடியை வெட்டாமல் வளர்ந்து வந்த ஸ்மிதா, கின்னஸ் சாதனை மூலம் தன் கனவு நனவாகியுள்ளதாக கூறியுள்ளார். 

கூந்தல் பராமரிப்பு 

ஸ்மிதாவின் தலைமுடி நீளத்தைப் போலவே அவரது முடியின் பராமரிப்பு வழக்கமும் ஈர்க்கக்கூடியது. அவர் தனது தலைமுடியை வாரத்திற்கு இரண்டு முறை கழுவி, உலர்த்தி, அகற்றி பின் ஸ்டைல் செய்ய 3 மணிநேர எடுத்துக் கொள்கிறாராம். 

கூந்தலை கழுவதற்கு மட்டும் அவருக்கு 45 நிமிடங்கள் எடுக்கிறதாம். கவனமாக ஒரு துண்டு மூலம் பின் உலர்த்துகிறாராம். 

சுமார் 2 மணிநேரம் ஸ்மிதாவின் தலைமுடியை பிரிக்க ஆகும் என்பதால் அது கடினமான பணியாக இருக்கிறதாம். 

தலைமுடி குறித்து ஸ்மிதா கூறும் விடயம் 

ஸ்மிதா தன்னுடைய நீண்ட கூந்தல் குறித்து கூறுகையில், ‘நான் என்னால் முடிந்த வரை என் தலைமுடியை கவனித்துக் கொள்வேன். என் தலைமுடியை நான் ஒருபோதும் வெட்ட மாட்டேன். ஏனென்றால் என் வாழ்க்கை என் தலைமுடியில் உள்ளது’ என பெருமிதத்துடன் தெரிவிக்கிறார்.

அத்துடன் எவ்வளவு காலம் இந்த கூந்தலை வளர்த்து பராமரிக்க முடியும் என்பதை பார்க்க ஆவலாக இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். தனது அடையாளத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக கூந்தலை கருதும் ஸ்மிதா, அதனை தொடர்ந்து வளர்க்க திட்டமிட்டுள்ளார்.     

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website