5 நிமித்துல சூப்பரான மொறு மொறு சைடு டிஸ் நீங்களும் செஞ்சி அசத்துங்க ….!!

July 3, 2022 at 1:45 pm
pc

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 4

மிளகு – 1/4 ஸ்பூன்

சீரகம் – 1/2 ஸ்பூன்

சோம்பு – 3/4 ஸ்பூன்

பூண்டு – 5 பல்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

❖ முதலில் உங்க வீட்டில் சிறிய உரல் கல் இருந்தால் அதில் சீரகம், சோம்பு, மிளகு, பூண்டு ஆகியவற்றை போட்டு நன்றாக இடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

❖ பின்னர், உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி வட்டமாகவோ அல்லது உங்களுக்கு வேண்டிய வடிவத்திலோ நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

❖ இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

❖ எண்ணெயில் வதக்கி கொண்டிருக்கும்போதே சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

❖ இப்போது நாம் இடித்து வைத்திருந்த கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும். இந்த கலவை அனைத்து உருளைக்கிழங்கு துண்டுகளிலும் படும்மாறு நன்றாக வதக்கவும்.

❖ மிதமான தீயில் இந்த உருளைக்கிழங்கு மொறு மொறுப்பாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

❖ அவ்வளவு தான் தயிர்சாதத்திற்கு சூப்பரான மொறு மொறு உருளைக்கிழங்கு ரெடி..!!

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website