5 படங்களை மட்டும் இயக்கி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த அட்லி!
வெறும் 5 படங்களை மட்டும் இயக்கி சினிமாவில் பிரபலமான இயக்குனர் அட்லியின் சொத்து விபரம் இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இரண்டு மூன்று படங்களிலேயே இயக்கி பிரபல்யமானவர் அட்லி. முதல்முறையாக ராஜா ராணி என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்திருந்தார்.
முதல் படத்தையே ஹிட் படமாக கொடுத்ததால் அடுத்த படத்தை விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கியிருந்தார். அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து மெர்சல், பிகில் என எடுத்தப்படங்கள் எல்லாம் வெற்றியைக் கொடுத்து வந்தது.
தற்போது பொலிவூட் சூப்பர் ஸ்டார் சாருக்கான், நயன்தாராவை வைத்து ஜவான் என்றப் படத்தை இயக்கி இன்று வெளியிட்டிருக்கிறார்.
அட்லி 2014ஆம் ஆண்டு துணை நடிகையாக நடித்த கிருஷ்ண பிரியாவை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு மீர் என்றப் பெயரையும் வைத்திருந்தார்கள்.
அட்லிக்கு இப்போது தான் 36வயதாகின்ற நிலையில் உச்ச நடிகர்களை வைத்து ப்ளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்திருக்கிறார். இந்த வயதில் மிகப் பிரபலமான இவர் தற்போது எவ்வளவு சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார் என்று தெரியுமா?
அட்லி இயக்கும் திரைப்படங்களுக்கு 20 இலிருந்து 40 கோடி வரைக்கும் சம்பளம் பெறுகிறார். அதிலும் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படத்திற்கு 52 கோடி சம்பளம் பெற்றிருக்கிறார்.
ஆனால் இந்த வருட கணக்குப்படி அட்லியிடம் 80 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.