5 நாட்களில் 150 கோடியை தாண்டிய வாரிசு…

January 17, 2023 at 8:24 am
pc

அண்மையில் வெளியான விஜய்யின் ‘வாரிசு’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 11 ஆம் தேதி அதிகாலை நான்கு மணியில் இருந்து இந்தப்படத்தின் முதல் காட்சி துவங்கப்பட்டது. இதையடுத்து வாரசுடு படம் ஜனவரி 14 ஆம் தேதி ரிலீசானது. இந்நிலையில் ‘வாரிசு’ படத்தின் ஐந்து நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

வம்சி பைடிபல்லி இயக்கியுள்ள ‘வாரிசு’ படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். விஜய்யின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்தப்படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா ஜெயசுதா, யோகிபாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியான ‘வாரிசு’ படத்தில் விஜய் ஒன்மேன் ஷோவாக கலக்கியுள்ளதாக ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் இந்தப்படம் நெகட்டிவ் விமர்சனங்களையும் குவித்து வருகிறது. மேலும் படம் மிகவும் ஸ்லோவாக இருப்பதாகவும் குறைப்பட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

பொங்கல் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் வாரிசு படத்துக்கு சாதகமாக அமைந்தது. குடும்பம் குடும்பமாக ‘வாரிசு’ படத்தை பார்க்க திரையரங்கிற்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வாரிசு’ படம் வெளியான முதல் நாள் அன்று ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், படம் உலக அளவில் 5 நாட்களில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website