53 வயதிலும் கிளாமரில் கலக்கும் ராமராஜன் பட நாயகி நிஷாந்தி…

February 8, 2023 at 12:16 pm
pc

ராமராஜன் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை 53 வயதிலும் கிளாமரில் கலக்கியுள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ராமராஜன் நடித்த ’எங்க ஊரு பாட்டுக்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகி ஆக அறிமுகமானவர் நிஷாந்தி. இவர் அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் ஹிந்தியிலும் இவர் ஒரு சில படங்கள் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிஷாந்திக்கு தற்போது 53 வயது ஆகி வரும் நிலையில் தற்போதும் அவர் கலக்கலாக கிளாமர் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நிஷாந்தி கடந்த 1999 ஆம் ஆண்டு சித்தார்த் ரே என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சித்தாத் ரே கடந்த 2004ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் திரையுலகின் பிரபல நடிகை பானுப்பிரியாவின் சகோதரி என்பது பலர் அறிந்ததே.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website