57 குழந்தைகளுக்கு தந்தை.! நிஜ வாழ்க்கை ‘தாராள பிரபு’வுக்கு வந்த பிரச்சினை

January 26, 2023 at 7:45 pm
pc

தமிழில் வெளிவந்த ‘தாராள பிரபு’ திரைப்படத்தைப் போல, நிஜ வாழ்க்கையில் விந்தணு தானம் செய்து, 57 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் நபர் ஒருவர், தன்னுடன் நீண்டகால உறவில் இருக்க ஆர்வமுள்ள ஒரு பெண்ணை கண்டுபிடிக்க முடிவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

விந்தணு தானம் 

விந்தணு தானம் பொதுவாக அநாமதேயமானது மற்றும் நன்கொடையாளர்கள் பொதுவாக தங்களின் தான விந்தணுவைப் பயன்படுத்தி கருத்தரிக்கப்பட்ட குழந்தையின் சட்ட அல்லது உயிரியல் தந்தைகளாக கருதப்பட மாட்டார்கள். 

விந்தணு தானம் செய்தவர்கள் பொதுவாக மரபணு மற்றும் உடல்நிலை பற்றி அறிய பரிசோதிக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களது விரிவான தனிப்பட்ட மற்றும் மருத்துவ தகவல்களை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அவர்கள் குழந்தை அல்லது குழந்தையின் குடும்பத்துடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள்.

இருப்பினும், சில விந்தணு வங்கிகள் அறியப்பட்ட நன்கொடையாளர்களை அனுமதிக்கின்றன. இதில் நன்கொடையாளர் யார் என்பது பெறுநருக்குத் தெரியும் மற்றும் அந்தக் குழந்தையின் வாழ்க்கையில் சில அளவிலான ஈடுபாட்டை அவர் கொண்டிருக்க முடியும்.

57 குழந்தைகளுக்கு தந்தை

அப்படி ஒருவர் தான் கைல் கோர்டி (Kyle Gordy), இவர் ஒரு தொழில்முறை விந்தணு தானம் செய்பவர். இதுவரை 57 குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்கிறார், மேலும் அவர் தனது குழந்தைகளுடன் தொடர்பில் இருக்க விரும்புகிறார்.

இப்போது, கைல் ஒரு உண்மையான மற்றும் நீண்டகாலம் நீடித்து இருக்கும் ஒரு உறவுக்கு பெண்ணைக் கண்டுபிடிப்பது கடினமாகி வருகிறது என்று கூறியுள்ளார்.

விந்தணு தானம் பற்றி பேசும்போது, ​​தமிழில் வெளியான ‘தாராள பிரபு’ திரைப்படம் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். விந்தணு கொடுத்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள குடும்பங்களுக்கு உதவிய ஒரு இளைஞனின் கதையை இப்படம் கூறுகிறது. 

கைல் கோர்டி ஒரு தொழில்முறை விந்தணு தானம் செய்பவர். அவர் தனது விந்தணு தானம் செய்யும் பயணத்தைப் பற்றிப் பேசுகையில், “இரண்டு வருடங்கள் தானம் செய்த பிறகு நான் அதிக கவனம் பெற்றேன், அப்போதுதான் நான் தீவிரமாக தானம் செய்தேன். என்னால் சில வெற்றிகரமான கர்ப்பங்கள் ஏற்பட்டன, அதனால் எனது இன்ஸ்டாகிராமில் பல பெண்கள் தொடர்பு கண்டனர், இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.” என்றார்.

ஒரு தீவிர உறவைக் கண்டுபிடிப்பது கடினம்

30 வயதான கோர்டி, தீவிரமான உறவைக் கண்டுபிடிப்பது கடினமாகி வருவதாக ஒப்புக்கொண்டார். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த அவர், தான் பல பெண்களைப் பார்ப்பதாகக் கூறினார், ஆனால் அவர்களில் யாரும் அவருடன் நீண்ட கால உறவில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, பெரும்பாலான பெண்களிடமிருந்து அவர் பெறும் கவனமானது அவரது விந்தணுவைப் பயன்படுத்தி அம்மாவாக மாறுவது மட்டுமே அவர்களது விருப்பமாக இருந்தது.

நன்கொடையாளர் குழந்தையின் வாழ்க்கையில் ஒரு உயிரியல் தந்தையாக இருக்க வேண்டும் என்று விரும்புவதால், பல பெண்கள் அவரை விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார். இருப்பினும், ஏற்கனவே 57 குழந்தைகளைப் பெற்ற அவரால் இனி பிறக்கும் குழந்தைகளில் ஆர்வம் காட்டவில்லை.

தனது வாழக்கையில் பின்னோக்கிப் பார்த்தால் கோர்டிக்கு எந்த வருத்தமும் இல்லை. இருப்பினும், தனக்கென பிடித்தமான ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பது சவாலான முயற்சியாக இருக்கும் என்பதை அவர் உணரத் தொடங்கியுள்ளார். மேலும், அவர் தொடர்ந்து நன்கொடை அளிப்பது போல் டேட்டிங் என்பது இனி இருக்காது .

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website