58 வயதில் 8வது குழந்தைக்கு தந்தையாகும் போரிஸ் ஜோன்சன்!

May 23, 2023 at 11:38 am
pc

முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் மனைவி கேரி ஜோன்சன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாம் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். 58 வயதாகும் போரிஸ் ஜோன்சனுக்கு பிறக்கவிருக்கும் குழந்தை 8வது ஆகும். வெள்ளிக்கிழமை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேரி ஜோன்சன் தாம் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.

ஜோன்சன் – கேரி தம்பதிக்கு ஏற்கனவே ரோமி என்ற ஒரு வயது மகளும், வில்பிரட் என்ற மூன்று வயது மகனும் உள்ளனர். இவர்கள் மே 2021 ல் திருமணம் செய்து கொண்டனர்.

இன்னும் சில வாரங்களில் குழந்தை பிறப்பு இருக்கும் என்றே கேரி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கேரி உடனான பிள்ளைகளை தவிர்த்து போரிஸ் ஜோன்சனுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.

முன்னாள் மனைவி மெரினா வீலர் என்பவருடன் நான்கு பிள்ளைகள் உள்ளனர். 2009ல் Helen Macintyre என்பவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் போரிஸ் ஜோன்சனுக்கு Stephanie என்ற மகள் உள்ளார்.

2015 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் போரிஸ் ஜோன்சன், 2019 முதல் 2022 வரையில் பிரித்தானிய பிரதமராகவும் சேவை செய்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website