83 வயது மூதாட்டியை கரம்பிடித்த 37 வயது நபர்!

July 27, 2023 at 8:44 pm
pc

தம்பதிகளுக்கு இடையே வயது வித்தியாசம் இருப்பது என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். இந்த வயது வித்தியாசம் ஒவ்வொரு தம்பதிக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். சில தம்பதிகளுக்கு 2 வயது இடைவெளி இருக்கும் சிலருக்கு 10 வயது இடைவெளி இருக்கும். 46 வயது வித்தியாசம் கொண்ட ஜோடியை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? நம்பினாலும் நம்பாவிட்டாலும் இப்படி ஒரு ஜோடி உண்டு.

சமீபத்தில் இந்த ஜோடி இன்னொரு பெரிய டுவிஸ்ட் கொடுத்துள்ளனர் இந்த ஜோடி திருமணமான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்து விட்டனர். 2019 ஆம் ஆண்டில், ஐரிஸ் ஜோன்ஸ் என்ற 83 வயதான இங்கிலாந்து பெண் எகிப்தை சேர்ந்த முகமது இப்ராஹிம் என்ற 37 வயது நபருடன் பேஸ்புக் குழுவில் அறிமுகமாகி உள்ளார்.இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. ஐரிஸ் நவம்பர் 2019 இல் எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு வந்தார். 

அவர் அங்கு இப்ராஹிமை சந்தித்தார். இருவரும் ஒருவரையொருவர் விரும்பி ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டனர். எகிப்தில் உள்ள ஷர்ம் எல்-ஷேக் நகரிலும் தேனிலவு கொண்டாடினர். அவர்கள் தங்கள் திருமணத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டபோது, அவர்கள் காதல் விவகாரம் வைரலானது. ஐரிஸ் மற்றும் இப்ராஹிமின் திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் சுமுகமாக சென்றது, ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். 

இந்த அதிர்ச்சி தகவலை ஐரிஸ் சமீபத்தில் பகிர்ந்துள்ளார் இப்ராஹிமை விரும்புவதாகவும் ஆனால்.. தங்கள் உறவு சில காலமாக கடினமாகி வருவதாகவும்.. காதலித்தாலும் ஏதோ ஒரு விஷயத்துக்காக சண்டை போட்டுக் கொள்வதாகவும், இத்துடன்.. பிரிவதே நல்லது என நினைத்து விவாகரத்து செய்து விட்டதாக கூறி உள்ளார். 

மேலும் இந்த வலியில் இருந்து மீள்வதற்காக தான் ஒரு பூனையை வளர்த்து வருவதாகவும், 1993 ஆம் ஆண்டு தனது முதல் கணவரை விவாகரத்து செய்ததாகவும், 26 ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website