கோவை

எலி தொல்லையை கட்டுப்படுத்த வைக்கப்பட்ட விஷ மருந்து தடவிய கேரட் …..சாப்பிட்ட மாணவி...

Quick Share

எலி தொல்லையை கட்டுப்படுத்த வைக்கப்பட்ட விஷ மருந்து தடவிய கேரட்டை சாப்பிட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்தவர் தேவசித்து (வயது 55). இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி கிரேஷி அம்மா (52). இவர்களுக்கு எனிமா ஜாக்குலின் (19), பிராங்குலின் (16) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

இதில் எனிமா ஜாக்குலின் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கிரேஷி அம்மா, செங்குட்டைபாளையத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடைக்கு பின்புறம் அவர்களின் வீடு உள்ளது.

வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் அதனை கட்டுப்படுத்த கேரட்டில் விஷமருந்து தடவி கிரேஷி அம்மா வைத்துள்ளார். இது தெரியாமல் அந்த கேரட்டை எனிமா ஜாக்குலின் சாப்பிட்டு விட்டார்.

உடனே அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி எனிமா ஜாக்குலின் பரிதாபமாக உயிரிழந்தார்.- s

‘அதிர்ச்சி’…ரெயில் மோதி தாய் மற்றும் மகள் யானைகள் பலி… – ...

Quick Share

தமிழகம் – கேரள எல்லைப் பகுதியான கோவை நவக்கரை அருகே ரெயில் மோதிய விபத்தில் 2 குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்தன.

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது கேரளாவில் இருந்து வந்த ரெயில் மோதி 3 யானைகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறை விபத்து குறித்து விசாரணை நடததி வருகின்றனர்.

‘சாலையில் கிடந்த 20,000ரூபாய் செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாட்டி’&...

Quick Share

சாலையில் கிடந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல் போனை காவல் நிலையத்தில் வயதான பாட்டி ஒருவர் ஒப்படைத்த சம்பவம் வியப்பில் ஆழ்த்தியில் உள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த கறுப்பம்மாள் என்ற மூதாட்டி வேலந்தாளாம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது செல் போன் ஒன்று சாலையில் கிடந்துள்ளது.அதனைப்பார்த்த அந்த பாட்டி உடனே அருகில் உள்ள க.க.சாவடி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று அங்குள்ள காவலரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து காவல் அதிகாரிகள் அந்த செல் போனை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.பின்னர் அந்த பாட்டியின் செயலை பாராட்டி போலீசார் அவருக்கு பொன்னாடை போர்த்தி வழியனுப்பி வைத்தனர்.

சிறிதும் யோசிக்காமல் செல் போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாட்டியின் இச்செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மூடி மறந்துவிட்டார்கள் !! லலிதா ஜூவல்லரி விவகாரம் இறுதியில் எப்படி பைசல் செய்தாங்க பாரு...

Quick Share

2018ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் கர்ப்பினியாக இருந்த தன் மனைவியின் வளைகாப்புக்காக நகை எடுத்துகொடுக்க லலிதா ஜூவல்லரிக்கு சென்றுள்ளார் ஹரிஹர ஐயப்பன். வைர நகையை செலக்ட் செய்த தம்பதி அது விலை அதிகம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பின்னர் தங்க நகைகள் வாங்கிச்சென்றுள்ளனர். இத்தம்பதிக்கு ஆண் குழந்தையும் பிறந்து, இப்போது அக்குழந்தைக்கு இரண்டு வயதாகிறது.

வீட்டில் பணத்தேவை இருந்ததால் நகைகளை விற்க சென்றிருக்கிறார். அங்கு வாங்கிய எடையில் பாதி தங்கம்தான் மதிப்பிட்டிருக் கிறார்கள். மீதம் எல்லாம் என்னவானது என்று பார்த்தால் தங்கத்திற்கு பதிலாக மெட்டல் வைத்து மோசடி செய்திருப்பது அம்பலமானது. நகைகளில் உள்ள கற்களுக்கு கீழே கொஞ்சம் வேக்ஸ் வைப்பது வழக்கம். ஆனால், லலிதா ஜூவல்லரி நகைகளில் வேக்ஸ் அதிகமாக வைக்கப் பட்டிருக்கிறது.

மேலும், சில கற்களுக்கு கீழே வேக்ஸுக்கு பதிலாக மெட்டல் வைத்து மோசடி செய்திருக்கிறார்கள். அதாவது 7 சவரண் தங்க நகையில், 56 கிராம் நகையில் 24 கிராம் மெட்டல் இருப்பது கண்டு அதிர்ந்து போனவர், நேரே லலிதா ஜூவல்லரிக்கு சென்று, எல்லா கடையிலும் வாங்க வேண்டாம். நீங்க உழைச்ச காச ஏமாந்துடாதீங்க. இங்க வாங்கன்னு உங்க ஓனர் விளம்பரம் செய்யுறார். நானும் எல்லா நகையையும் இங்கதான் வாங்குனேன். பணம் இல்லாத நேரத்திலும் மனைவியின் வளைகாப்புக்காக கடன் வாங்கி வந்து நகை வாங்குனேன். இப்படி நாங்க கஷ்டப்பட்டு கொண்டு வந்து வாங்குறதுல மோசடி பண்றீங்களே.. நீங்க திங்குற சோறு செரிக்குமா? என்று ஆவேசமாக கத்துகிறார்.

பத்திரிகையாளர்கள் மற்றும் பேஸ்புக்கில் லைவ் போட்டுவிட்டு, அவர் கேள்வி கேட்பதால், கடையில் நிர்வாகி பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்த விசியம் எப்படி பைசல் செய்யப்பட்டது என்பதன் வீடியோ வெளியாகியுள்ளது.




You cannot copy content of this Website