கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி கடை வீதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது.. இந்த நிறுவனத்தின் மாடிப்படிக்கட்டில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சென்று பார்த்ததில் அந்த பெண்ணின் உடல் நிர்வாணமாக உடல் அழுகி போய் கிடந்தது.
பின்னர், சடலத்தை மீட்டு விசாரணையை ஆரம்பித்தனர். சம்பந்தப்பட்ட பெண் புதுச்சேரி மாநிலம் திருபுவனையை
சேர்ந்த சத்யா என்பது தெரியவந்தது.. சத்யாவுக்கு 36 வயசாகிறது. கணவன் பெயர் ராஜேந்திரன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.
சத்யாவை நிர்வாண நிலையில் கொன்றார்கள் என்ற சந்தேகம் வலுத்தது. சிசிடிவி கேமிரா அதனால், அந்த
நிதி நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கடந்த 29-ந்தேதி இரவு 7 மணிக்கு சத்யா அந்த மாடியில் செல்வது பதிவாகி இருந்தது. சத்யாவுடன் இன்னொருவரும் சென்றார்.
முரசொலி மாறன் 29 என அடையாளம் காணப்பட்டார். புவனகிரியில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்க்கிறார்.அவர்தான் சத்யவை மாடிக்கு அழைத்து செல்வது பதிவாகி இருந்தது. இரவு 10 மணி அளவில் முரசொலிமாறன் மட்டும் தனியாக கீழே இறங்கி வந்ததும் தெரிந்தது. கொலை இதனால் அவர்தான் சத்யாவை கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.
பிறகு, முரசொலி மாறனை பிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. தேடுதல் வேட்டைக்கு பிறகு முரசொலி மாறன் அவினாசியில் பதுங்கி இருப்பது தெரியவரவும், அங்கு சென்று அவரை கைது செய்ய போலீசார் விரைந்தனர்..
போலீசார் வருகிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட முரசொலி மாறனோ, திடீரென தற்கொலைக்கு முயன்றார்.. அதாவது தன்னுடைய காதில் பால்டாயில் விஷத்தை ஊற்றி கொண்டார். அதை பார்த்த போலீசார் அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் முரசொலி மாறனிடம் விசாரணை நடந்தது.. அப்போது
அவர் வாக்குமூலத்தில் சொன்னதாவது:
இருவரும் ஒரு நூல் கம்பெனியில் வேலைபார்த்தோம். நட்பு உருவானது காதலானது.. அடிக்கடி தனிமையில்
சந்தித்து பேசி வந்தோம்.. எனக்கு புவனகிரியில் வேலை கிடைத்து வந்துவிட்டேன். ஆனாலும் சத்யாவுடன் பழக்கம் தொடர்ந்தது.. சம்பவத்தன்று சத்யா, என்னை பார்க்க ஆபீசுக்கு வந்தார்.
கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சத்யா தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.. நான் மறுத்துவிட்டேன்.. உடனே தகராறு செய்தார்.அதனால், கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன். அங்கிருந்த படிக்கட்டில் சடலத்தை கொண்டு போய் போட்டுவிட்டு தப்பிவிட்டேன்” என்றார்.
குடும்பத்துக்காக உழைக்கும் கணவர் வெளிநாட்டில் இருக்க கள்ளகாதலுக்காக 2 குழந்தைகளையும் மறந்த சத்யாவின் வாழ்க்கை கொடூரமாக முடிந்துவிட்டது