தஞ்சை

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை சரமாரியாக கத்தியில் குத்திய வாலிபன்

Quick Share

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான பெண் தஞ்சையில் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் மாணவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான அஜித் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில நாள் பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. காதலர்களாக இருவரும் இருந்த நிலையில், அஜித்தின் உண்மை முகம் மாணவிக்குத் தெரியவந்தது.

மதுவிற்கு அடிமையான அஜித் முறையாக வேலைக்குச் செல்லாமல் ஊர்சுற்றிவந்துள்ளார். மேலும் அடிதடி சம்பவங்களிலும் அஜித் ஈடுபட்டு வந்ததால் மாணவி அஜித்தின் காதலை முறித்து கொண்டுள்ளார்.
ஆனால் மாணவியை விடாத அஜித் அவரை தினமும் பின்தொடர்ந்து தொந்தரவு செய்ய தொடங்கியுள்ளார்.

கடந்த புதன்கிழமை காலை மாணவி வழக்கம் போல் பேருந்தில் கல்லூரிக்குச் சென்றுள்ளார். அப்போது அதே பேருந்தில் ஏறிய அஜித் மாணவியிடம் தகறாரில் ஈடுப்பட்டுள்ளார். மாணவி அஜித்திடம் பேசமறுக்கவே அஜித்
தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். அஜித் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில்
சரமாரியாக குத்தியுள்ளார்.

கழுத்தில் அழமான வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டத்தொடங்கியுள்ளது. இதில் நிலைத்தடுமாறிய மாணவி
பேருந்திலேயே மயங்கி சரிந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அஜித்தைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து மாணவியை மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியைத் தாக்கிய அஜித்தைக் கைதுசெய்த தஞ்சை நகர தெற்கு போலீசார், அவரை விசாரித்து வருகின்றனர்.

காதலிக்க மறுத்த மாணவியை இளைஞர் கத்தியால் கழுத்தை வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10-ஆம் வகுப்பு பையனுக்காக பெற்றோரை உதறிவிட்டு திருமணம் செய்து கொண்ட இளம் பெண்!

Quick Share

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு வரை படித்த மாணவனுக்காக, இளம் பெண் ஒருவர் தன்னுடைய பெற்றோர் மற்றும் படிப்பை உதறிவிட்டு வீட்டை வீட்டு ஓடிய சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் பொறியியல் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வந்தவர் மோகனப்பிரியா. சமூகவலைத்தளங்களில் எப்போதும் மூழ்கிடக்கும் இவருக்கு, பெங்களூரைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க சுந்தர் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

சமூகவலைத்தளத்தில் துவங்கிய இவர்களின் நட்பு, நாளைடைவில் காதலாக மாறியது. குடியாத்தத்தை சேர்ந்த சுந்தர் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு பெங்களூரில் சமையல் வேலை செய்து வந்துள்ளார்.

சுந்தர் மீது அளவு கொண்ட காதல் கொண்ட மோகனப்பிரியா, கடந்த 15-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறி, காதலனைத் தேடி சென்னை காட்பாடிக்கு சென்றுள்ளார்.

அதன் பின் அங்குள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்ற மகள் காணவில்லையே என்று பெற்றோர் பதறி போய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து பொலிசார் மோனப்பிரியாவின் செல்போன் சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அங்கு பொலிசார் மற்றும் பெற்றோர் சென்ற போது, மோகன்ப்பிரியா வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளார்.

இதையடுத்து தனது மகளை கடத்தி வந்து விட்டதாக காதலன் சுந்தர் மீது குடியாத்தம் காவல் நிலையத்தில் மோகனப்பிரியாவின் பெற்றோர் மற்றொரு புகார் அளித்தனர்.

இதையடுத்து காதலனுடன் காவல் நிலையத்தில் ஆஜரான மோகனப்பிரியா, தான் மேஜர் என்பதால் காதலனுடன் தான் செல்வேன் என்று பெற்றோர் மற்றும் படிப்பை உதறிவிட்டு காதலனுடன் மோகன்ப்பிரியா சென்றுவிட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத மோகன்ப்பிரியாவின் பெற்றோர், கண்ணீருடன் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

சிவகார்த்திக்கேயன் செய்த மிகப்பெரிய உதவி .!! அப்படி என்ன செய்தார் தெரியுமா.??

Quick Share

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணியை அடுத்த பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த டெய்லர் கணேசன்- சித்ரா ஆகியோரின் மகள் சஹானா. கஜா புயலால் சேதமடைந்த வீட்டில் மின்சார வசதி இல்லாததால் சூரிய வெளிச்சத்திலும், பள்ளி அருகே இரவில் தெருவிளக்கு வெளிச்சத்திலும் படித்த இவர், மருத்துவராக வேண்டும் என்ற உறுதியுடன் நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்திவந்துள்ளார்.

மாணவி சஹானாவின் நிலையை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், சஹானாவை தஞ்சாவூரில் உள்ள தனியார் நீட் பயற்சி மையத்தில் சேர்த்து, கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி பெற உதவி செய்தார். இந்நிலையில், நடந்து முடிந்து நீட் தேர்வில் 273 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்து.

இதனை முன்னிட்டு சிவகார்த்திகேயனுக்கு மாணவி நன்றி தெரிவித்துள்ளார். எனது மருத்துவ கனவிற்கு உயிர் கொடுக்க பலரும் உதவி செய்தனர். நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் எனது கனவு நனவாகியுள்ளது என்றும் நெகிழ்ச்சியியுடன் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வில் வெற்றி பெற செய்து ஏழை மாணவிக்கு மருத்துவ சீட் வாங்கியதார்க்கு சிவகார்த்தியேன் உதவியுள்ளது பலரின் பாராட்டை பெற்று வருகிறது. ஏழை மாணவி ஒருவரின் மருத்துவ கனவை சிவகார்த்திகேயன் நனவாகியுள்ளார் என்பது பாராட்டிற்குரியது.

ஆற்றங்கரையில் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் அழுகிய சடலம்!

Quick Share

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் ஒருவர் புதைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி, வட்டாட்சியர், விஏஓ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அதிகாரிகள் முன்னிலையில் அந்த உடல் தோண்டி எடுக்கப்பட்டது. ஆடை இல்லாமல் அழுகிய நிலையில் இருந்த அந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இளம்பெண் சடலத்தை மருத்துவர்கள் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் , இளம்பெண் யார், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாரா ? கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது 72 வயதில் கொரோனா தொற்றால் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Quick Share

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மூச்சு திணறல் காரணமாக கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி முண்டியபாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக 90 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டதால், உடல்நிலை தொடர்ந்து கவலைகிடமாக இருப்பதாகவும், நிமோனியா பாதிப்பில் உள்ள அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11:15 மணி அளவில் துரைகண்ணு உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.இன்று காலை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனை வர உள்ளதாகவும், அவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் அமைச்சரின் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு தமிழ்நாட்டுக்கும், குறிப்பாக அதிமுகவுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் மறைவு குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அமைச்சர் துரைக்கண்ணு பண்பாளர் என்றும் எளிமையானவர் என்றும் புகழாரம் சூட்டினார்.அமைச்சர் துரைக்கண்ணு 1948ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் பிறந்தவர். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர். 2006, 2011, 2016ஆம் ஆண்டு என தொடர்ந்து பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றிபெற்றவர். அ.தி.மு.க.வில் மாணவரணி, இளைஞரணி உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். பாபநாசம் ஒன்றியத்தின் அ.இ.அ.தி.மு.க செயலராகவும் துரைக்கண்ணு இருந்துள்ளார்

நண்பனின் மனைவியுடன் முறையற்ற உறவு! அதுமட்டுமா? வாலிபர் கொலை வழக்கு 6 பேர் திடுக்கிடும் ...

Quick Share

தமிழகத்தில் வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக நண்பனின் மனைவியுடன் நெருக்கமாக இருந்ததால், கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட 6 பேர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள சேர்மாநல்லூர் நேதாஜி காலனியில் வசிப்பவர் ராஜா(28). நேற்று முன்தினம் மாலை, தனது நண்பர் சதீசுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர், மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்து அவர்களை வெட்ட முயற்சித்துள்ளனர்.

இதனால் ராஜாவும், சதிஷும் அங்கிருந்த ஓட, சித்தமல்லை பகுதியில் இருக்கும் வயலில் வைத்து ராஜாவை அந்த கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றது. இதை தடுக்க வந்த சதிஷுற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், கம்பந்தங்குடி மேட்டுத்தெருவை சேர்ந்த முருகேசன்(42), அம்மாப்பேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்த ஆனந்தபாபு(29), கம்பந்தங்குடி ரோட்டுத்தெருவை சேர்ந்த நந்தகுமார்(20), கம்பந்தங்குடி நடுத்தெருவை சேர்ந்த சுதாகர்(22), அன்னப்பன்பேட்டை விண்ணுக்குடி பகுதியை சேர்ந்த கோபி(27), வலங்கைமான் தாலுகா பாடகச்சேரி சூரக்குடி தெருவை சேர்ந்த அருண்பாண்டி என்ற பிரகாஷ்(30) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

அப்போது அவர்களிடம் ராஜாவை கொலை செய்தது ஏன் என்று பொலிசார் விசாரித்த போது, ராஜாவுக்கும், அம்மாப்பேட்டை அருகே உள்ள சம்மந்தங்குடி கிராமத்தில் உள்ள திருமணம் ஆன பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை தெரிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் பலமுறை ராஜாவை எச்சரித்துள்ளனர். ஆனால் அதைக் கேட்காமல் ராஜா தொடர்ந்து அந்த பெண்ணிடம் தொடர்பில் இருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, மகிமாலை என்ற இடத்தில் கைதான 6 பேரும், மணலை திருடி அதிகவிலைக்கு விற்று வந்துள்ளனர். இதற்கும் ராஜா இடையூறாக இருந்துள்ளார்.

நண்பனின் மனைவியுடன் முறையற்ற உறவு, மணம் திருட்டுக்கு இடையூறு போன்ற காரணங்களால் ராஜாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.

அதன் படி, சம்பவ தினத்தன்று, நண்பர் சதீஷ் உடன் பைக்கில் சென்று மது அருந்திவிட்டு, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தான் ராஜாவை வெட்டி கொலை செய்துவிட்டதாகவும், தடுக்க வந்த சதீஷையும் வெட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

120 கி.மீ சைக்கிளில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கணவன் – பின்னர் நடந்த சம்பவம்!

Quick Share

கணவருடன் 120 கி.மீற்றர் சைக்கிளில் சென்று சிகிச்சை பெற்ற பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த மகாராஜபுரம் மணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(60). கூலித் தொழிலாளியான இவர் மஞ்சுளா(44) என்பவரை இரண்டாம் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு விஷ்ணு என்ற 12 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், மஞ்சுளாவுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன், இடது தாடை அருகே, கன்னத்தில் புற்றுநோய் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த மார்ச் மாதம் 25-ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால், மஞ்சுளா வலியால் துடித்து வந்துள்ளார். மனைவியின் வேதனையை தாங்க முடியாமல், அறிவழகன் அதே மாதம் 29-ஆம் திகதி தன்னுடைய பழைய சைக்கிளில்,மனைவியை அமர வைத்து 120 கி.மீற்றர் தூரமுள்ள புதுச்சேரிக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.

சிகிச்சை முடிந்து, ஆம்புலன்சில் ஊர் திரும்பிய, அறிவழகனின் செயலை பலரும் பாராட்டினர். மேலும், அவருக்கு பலரும் பணம், பொருள் உதவி செய்தனர். இந்நிலையில், வீட்டிலிருந்து மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்த மஞ்சுளா, நேற்று காலை திடீரென உயிரிழந்தார்.

ஊரடங்கால், வேலை இல்லாமல் போன நிலையிலும், போக்குவரத்து தடை செய்யப்பட்ட போதும், வலியால் துடித்த மனைவியை சைக்கிளிலேயே அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும், காப்பாற்ற முடியாமல் பறி கொடுத்து விட்டேன் என்று அறிவழகன் கதறி அழுதுள்ளார்.

எங்க குடும்பத்தோட எதிர்காலமே அவன் தான்’ – ஆடு மேய்க்க சென்ற இளைஞனுக்கு நேர்...

Quick Share

தஞ்சாவூர் மாவட்டம் பொட்டுவாச்சாவடி கிராமத்தில் வசிப்பவர் 22 வயதான வீரமணி. தனியார் கல்லூரியில் பி.இ இறுதியாண்டு படிக்கும் இவர் ஒரு நாள் தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். அப்போது ஆட்டுமந்தையில் இருந்த சில ஆடுகள் தடம் மாறி கால்வாய் அருகே சென்றுள்ளது. அப்போது ஒரு ஆடு தவறி கல்லணைக் கால்வாய் ஆற்றுக்குள் விழுந்துள்ளது.

நீச்சல் தெரியாத நிலையிலும் வீரமணி ஆட்டை மீட்க ஆற்றுக்குள் குதித்து ஆட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஆற்றில் ஏற்பட்ட சுழலில் சிக்கிய வீரமணியும் ஆடும் ஒரு சேர நீருக்குள் மூழ்கினர். இதுகுறித்து கூறிய வீரமணியின் அக்கா, ‘எங்க குடும்பத்தோட எதிர்காலமே அவன் தான். எங்கள இப்படி தவிக்கவிட்டு போய்ட்டான், எங்க குடும்பத்தோட நம்பிக்கையே அவன்தான். அவன் படிச்சி நல்ல நிலைமைக்கு குடும்பத்தை கொண்டு வரணும்னு சொல்லிட்டே இருப்பான்’ என கண்ணீர் மல்கி கூறியுள்ளார்.

மேலும் வீரமணியின் தந்தை மாரியப்பன் கூறும்போது, ‘எனக்கு மூணு பொண்ணு, பேர் சொல்ல ஒரு பையன் இருந்தான், ஆனா இப்ப அவனும் இல்ல. என் மனைவி என்னவிட்டு பிரியும் போதே எனக்கு பாதி உசுரு போயிருச்சு. இப்ப இவனும் போய்ட்டான். என் பையன் வீரமணி சின்ன வயசிலிருந்தே நல்லா படிப்பான். நான் கஷ்டப்படுறத பாத்துட்டு, `அப்பா நான் படிச்சு முடிக்கிற வரைதான் உனக்கு கஷ்டம்.

அதன் பிறகு நீ ராஜா மாதிரி இருப்பன்னு’ என அடிக்கடி சொல்லிட்டு இருப்பான். எங்களுக்கு சொந்தமான 200 குழி விவசாய நிலத்தை அடமானம் வைத்து படிக்க வைத்தேன். ஆனா இப்ப எங்க வாழ்க்கையே கேள்விக்குறியா ஆகிருச்சு’ என கனத்த மனதோடு கூறியுள்ளார். வீரமணி இறந்த சம்பவம் அவரின் குடும்பத்தை மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை ஜோதிகா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ25 லட்சம் நிதியுதவி!

Quick Share

தமிழ் சினிமாவின் நட்சத்திர குடும்பங்களில் ஒன்றான சிவகுமார் குடும்பத்தில் சூர்யா, ஜோதிகா , கார்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர். இந்த குடும்பம் படத்தில் நடிப்பது மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டு சமூகத்திற்கு தேவையான பல உதவிகளை முன் வந்து செய்பவர்கள்.

அதன் ஒரு பகுதியாக பார்க்கப்படுவது தான் “அகரம் அறக்கட்டளை “. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஜோதிகாவிற்கு JFW சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அப்போது பேசிய ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள் அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என்று கூறினார். இது பெரும் சர்ச்சையாகி ஆளாளுக்கு ஜோதிகாவிற்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்ப்போது நடிகை ஜோதிகா தான் பார்வையிட்ட தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ.25 லட்ச ரூபாய் நிதி உதவியை அகரம் அறக்கட்டளை முலம் வழங்கியுள்ளார். இது குறித்து
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த்ராவ், தாய்மார்கள், குழந்தைகள் நலனுக்காக 25 லட்ச ரூபாய் வழங்கிய ஜோதிகாவின் பெருமனதுக்கு நன்றி என்றார்.

தஞ்சாவூரில் இரண்டு பொண்டாட்டி இல்லாத வீடே இல்லை..! வனிதாவுக்கு ஆப்பு வச்ச பாஜக கட்சியினர்!

Quick Share

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் அணைத்து ஊரடங்களிலும் அதிகம் பேசப்படும் ஒரு ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. உலகில் ஆயிரம் விஷயம் நடந்து வருகிறது, கொரோனாவால் 100 க்கணக்கான உயிர்கள் போகிறது, அதையெல்லாம் பற்றி பேசாதவர்கள் இப்போது வனிதாவின் பிரச்னையை ஆன்லைன் மூலம் கூடி விவாதித்து வருகிறார்கள்.

மேலும் வனிதாவும், முறையாக விவாகரத்து வாங்காத ஒருவரை திருமணம் செய்தது தவறு என்று கூட உணராமல் பல்வேறு காரணம் கூறி வருகிறார்.

குறிப்பாக இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தஞ்சாவூர் மக்களை விமர்சிக்கும் விதமாக, சர்ச்சையாக பேசினார்.

தன்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூர் தான் என்றும், அங்கு இரண்டு மனைவிகள் இல்லாத வீடே கிடையாது. தன்னுடைய தந்தைக்கு கூட இரண்டு மனைவிகள் தான் என கூறினார்.

அதே போல், இதனை அங்கு இருப்பவர்களிடம் கூறினால் இதெல்லாம் ஒரு விஷயமா என கேட்பார்கள். இதில் என்ன தவறு உள்ளது என தன்னுடைய தவறை மறைத்து, தன்னை நியாயப்படுத்தினார்.

இவரின் இந்த கருத்துக்கு தான், பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கூட தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம், வனிதாவுக்கே எதிராக திரும்பியுள்ளது.

வனிதா தஞ்சாவூர் மக்களை பற்றி அவதூறாக பேசியுள்ளதாக கூறி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பிஜேபி கட்சியை சேர்ந்த சிலர் வனிதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.

அதே போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களை, அவமதிக்கும் நோக்கத்தில் பேசியுள்ள வனிதா மன்னிப்பு கூறவேண்டும் என்றும், இந்த கருத்தை அவர் திரும்பபெறவில்லை என்றால் அவரை எதிர்த்து, மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

கணவனின் சொத்துக்கு ஆசைப்பட்டு மனைவி செய்த கொடூர செயல்!

Quick Share

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த இலங்கைப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சையை சேர்ந்தவர் ஜோசன் என்கிற யூசுப். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் திருச்சியில் வசித்து வருகின்றனர். குவைத்துக்கு வேலைக்குச் சென்ற யூசுப் அங்கு தன்னுடன் வேலை பார்த்த இலங்கை பெண்ணான அசிலாவை காதலித்து மணந்து கொண்டார். பின்னர் அசிலாவை தஞ்சாவூர் அழைத்து வந்து வீட்டில் தங்க வைத்தவர், தஞ்சை, திருச்சி என இரு மனைவிகளுடனும் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இந்த சூழலில் அசிலாவின் நடவடிக்கை பிடிக்காமல் கருத்து வேறு பாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் யூசுப்.

கடந்த 25ஆம் திகதி யூசுப் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் ஒன்று அவரை அரிவாளால் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொன்றது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் 5 வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்தில் ஆஜரான அசிலா, கணவன் கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என கூறினார். ஆனால் பெண் பொலிசார் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் யூசுப் கொலைக்காண மர்மம் விலகியது

2016 ஆம் ஆண்டில் யூசுப் வெளிநாடு சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த அசிலா, முகநூல் மூலம் ஏராளமான இளைஞர்களோடு நட்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களை வீட்டுக்கு வரவழைத்து தனிமையை கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதோடில்லாமல் யூசுப் வங்கி கணக்கு வைத்திருந்த வங்கியின் மேலாளரை தனது வலையில் வீழ்த்திய அசிலா, யூசுப்பின் வங்கி லாக்கரில் இருந்த 300 சவரன் நகைகள், மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு சொகுசாக வாழ்ந்து வந்தார்.

இந்தத் தகவல் நண்பர்கள் மூலம் யூசுப்புக்குத் தெரியவரவே, கடந்த 2018ஆம் ஆண்டு அவர் குவைத்திலிருந்து தஞ்சை திரும்பியுள்ளார். அசிலாவின் தவறான உறவு தொடர்பாக இருவருக்கும் எழுந்த தகராறில் அவரை பிரிந்துள்ளார். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் யூசுப் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அசிலாவிடம் இருந்து தனது சொத்துக்களை மீட்க யூசுப் சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதாக கூறப்படுகின்றது. இதனால் தான் அபகரித்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் கணவரை தனது நண்பர்கள் மூலம் 10 லட்சம் ரூபாய் கொடுத்து திருச்சியில் இருந்து கூலிப்படையை அழைத்து வந்து யூசுப்பை தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் அடித்துக் கொலை…!!! அதிர்ச்சி சம...

Quick Share

பட்டுக்கோட்டை அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கார்காவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் இவருக்கு சுந்தரி என்ற மனைவியும் சண்முகப்பிரியா, கௌசல்யா, சந்தியா, கௌசிகா என்ற நான்கு மகள்களும், ராஜா வசந்த சேகரன் (15) என்ற ஒரு மகனும் உள்ளனர். இதேபோல் சக்திவேல் வீட்டின் அருகேயே வசித்து வருபவர் குபேந்திரன் – சரோஜா தம்பதியினர். இவர்களுக்கு குருபிரவு (28) என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சக்திவேல் மகன் ராஜா வசந்த சேகரனை, குபேந்திரன் மகன் குரு பிரபுவும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டால் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு குடும்பங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மீண்டும் இன்று சக்திவேல் குடும்பத்திற்கும் குபேந்திரன் குடும்பத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இரண்டு குடும்பத்திற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இந்த கைகலப்பு சண்டையில் சக்திவேலின் மகள் சண்முகப்பிரியாவை, குபேந்திரன், அவரது மனைவி சரோஜா மற்றும் அவர்களுடைய மகன் குருபிரபு ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மண்வெட்டியால் தலையில் தாக்கியதில் சண்முகப்பிரியா சம்பவ இடத்திலிருந்து பரிதாபமாக உயிரிழந்தார். சண்முகப்பிரியாவை காப்பாற்ற சென்ற அவரது இரண்டு சகோதரிகளையும் குபேந்திரன் மற்றும் குரு பிரபு தாக்கியதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து பட்டுக்கொட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீசார் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்த சண்முகப்பிரியாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த சண்முகப்பிரியாவின் சகோதரிகளையும் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் குபேந்திரன் சரோஜா மற்றும் குரு பிரபு ஆகிய மூவரையும் கைது செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு மூவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். கிரிக்கெட் விளையாட்டால் ஏற்பட்ட தகராறில் ஒரு இளம் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You cannot copy content of this Website