திருப்பதூர்

குடி போதையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை !

Quick Share

திருப்பத்தூர்  மாவட்டம் புது முத்தப்பர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 42).  இவரது மனைவி ஆசிரியர் பணியாற்றி வருகின்றார்.  இந்த தம்பதிகளுக்க  13 வயதில் ஒரு மகள் உள்னனர். இவர் தற்போது 9-ம் வகுப்பு படித்து வருகின்றார். 
கணவர் சரணவன் தினசரி குடித்துவிட்டு மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் தம்பதிகள் இருவரும் பிரிந்து வழ்ந்து வந்துள்ளனர். 
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உறவினர்கள் இவர்களை சமாதானம் செய்துவைத்ததை தொடர்ந்து இவர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 
இருவரும் சோ்ந்து வாழ்ந்து வந்த நிலையில், சம்பவத்தன்று மது போதையில் வீட்டுக்கு வந்த சரணவன் பெற்ற மகள் என்றும் பாராமல் இரவில் தனியா இருந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
 இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த தாய் தனது மகளை இந்த அரக்கனிடம் இருந்த பாதுகாப்பதற்காக  திருப்பத்தூர் அனைத்து மகளிர்  போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சரணவன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை தொடர்நத அவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைந்தனர்

போதைக்கு அடிமையாக்கி கள்ள காதல்.., 35 வயது பெண் செய்த காரியம்

Quick Share

தமிழகத்தில் திருப்பத்தூரை சேர்ந்தவர் தியாகு (36) கழிவறை சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். இவரிடம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மனைவி புவனேஸ்வரி (35) கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தியாகுவுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை புவனேஸ்வரியின் கணவர் வேலாயுதம் கண்டித்துள்ளார். இருவரும் தொடர்பை கைவிடவில்லை. தொடர்ந்து புவனேஸ்வரி மற்றும் வேலாயுதம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர்.

கணவரை பிரிந்த பின்னர் தியாகு மற்றும் புவனேஸ்வரி இருவரும் கணவன், மனைவி போல ஒன்றாக வாழ்ந்தனர், தியாகு மற்றும் புவனேஸ்வரி இருவரும் குடிக்கு அடிமையாகி உள்ளனர். தியாகு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குடியை நிறுத்த மருந்து மாத்திரை சாப்பிட்டுள்ளார். ஆனால் புவனேஸ்வரி குடிப்பதை கைவிட வில்லை. மனநலம் பாதித்தவராக மாறியுள்ளார்.தியாகு மது வாங்கி கொடுப்பதை நிறுத்தி உள்ளார்.

இந்நிலையில் கள்ளக்காதலி புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை போதைக்கு அடிமையாக்கி வாழ்க்கையை சீரழித்து கொண்ட சம்பவம் குடும்பத்திற்கு வேதனையை தந்துள்ளது.

தொல்லை கொடுத்து டீச்சரை வழிமறித்து சீண்டிய மாணவன்…,

Quick Share

திருப்பத்தூர் மாவட்டம் அவ்வை நகரை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்… இந்த இளைஞர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎட் படித்து வருகிறார். இந்நிலையில், ராஜேஷ்குமார் கல்லூரி பேராசிரியர் ஒருவருடன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார். அந்த பேராசிரியருக்கு 29 வயதாகிறது. ராஜேஷ் எல்லை மீறி அநாகரிகமாக பேராசிரியருக்கு வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பி உள்ளார்..

பெரிதுபடுத்த வேண்டாம் என்று அந்த டீச்சரும் அமைதியாக இருந்துள்ளார். ஒருநாள் போன் செய்து, நாம ஜாலியா இருக்கலாம் என்று கூப்பிடவும்தான் அதிர்ந்து போய்விட்டார். அதனால், அந்த பேராசிரியை ராஜேஷூடன் பேசுவதையே நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று காலேஜ் முடிந்து, பேராசிரியை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின் ராஜேஷ் சென்றார். குனிச்சி என்ற பகுதி அருகே வரும்போது, பேராசிரியரை வழி மடக்கி விட்டார். மறுபடியும் அவரை
உல்லாசத்துக்கு அழைத்திருக்கிறார். பேராசிரியை மறுத்து விலகி சென்றுள்ளார். ஆத்திரமடைந்த ராஜேஷ், உன்னை இப்படியே கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.நகர விடாமல் அங்கேயே தடுத்து நிறுத்தியும் உள்ளார்..

பேராசிரியை கத்தி கூச்சலிடவும், அந்த பகுதியில் சென்றவர்கள் ஒன்றுகூடி ராஜேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். பிறகு பேராசிரியை கந்திலி ஸ்டேஷனில் புகார் தந்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேஷை கைது செய்துள்ளனர். படிக்கும் கல்லுரியில் பேராசிரியரை தவறாக அழைத்தது வேதனைக்குரிய செயலக மாறியுள்ளது.

போதையில் 40வயது பெண் !! மொத்த துணிகளை கழட்டி விடுவேன் மிரட்டி அட்டகாசம்

Quick Share

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் திடீரென்று சாலையின் நடுவே கையில் செருப்போடு. நின்று அப்பகுதியில் வரும் பேருந்து லாரி கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்து உள்ளார்.

இதை பார்த்த அப்பகுதி காவல் துறையினர் விரைந்து வந்து அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். “அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பெண்ணை அழைத்துச் செல்ல முயற்சித்தனர் ஆனால் அந்த பெண் கிட்டே வந்தால் மொத்த துணிகளையும் கழட்டி விடுவேன் என மிரட்டி ரகளை செய்துள்ளார்.

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ஒரு வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். இந்த பெண் எந்த ஊர் எந்த பகுதி என்று தெரியவில்லை மனநிலை பாதிக்கப்பட்டு
உள்ளாரா? அல்லது என்ன பிரச்சனை? என்பது குறித்து தெரியவில்லை இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

உல்லாச வாழ்க்கைக்கு தடையாக இருந்த கணவன் மற்றும் பிள்ளைகளை, பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர ...

Quick Share

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் 37 வயதான சசிகுமார். இவருக்கும் அதிபெரமனூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பிரியா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பிரதீப் என்ற 10 வயது மகனும், பிரித்திகா என்ற 8 வயது மகளும் உள்ளனர். குடும்ப வறுமையின் காரணமாக, சசிகுமார் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது, மனைவி மற்றும் பிள்ளைகளிடம் பேசுவதற்காக, விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதை பயன்படுத்தி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் பல ஆண் நண்பர்களுடன் பழகி, கணவன் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தில் அவர்களுடன் உல்லாசமாக வெளியில் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார் பிரியா.

இந்த நிலையில், தாயின் இந்த செயல் பற்றி, மகன் பிரதீப் வெளிநாட்டில் வேலை பார்க்கும் தனது தந்தையிடம் தெரிவிக்க, ஆத்திரமடைந்த அவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து வந்து, பிரியாவிடம் சண்டையிட்டுள்ளார். 4 மாதங்களாக கணவன் வீட்டில் இருப்பதால், வெளியில் எங்கும் சுற்ற முடியாத சூழலில் சிக்கித்தவித்த பிரியா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார்.

அதன்படி, கடந்த 8-ம் தேதி இரவு தூங்கும் போது, கட்டிலில் படுத்து உறங்கிகொண்டிருந்த கணவன் மற்றும் பிள்ளைகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சசிகுமார் முழுவதுமாக எரிந்து, சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்குப் போராடிய சசிகுமாரிடம், நீதிபதி வாக்குமூலம் பெற்றுள்ளார். பின்பு சசிகுமார் உயிரிழக்க, மகனும், மகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கணவன் கொலை தொடர்பாக பிரியாவை கைது செய்த போலீசார், அவரை வேலூர் சிறையில் அடைத்தனர். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட பெண், கணவன் மற்றும் பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You cannot copy content of this Website