வேலூர்

காதல் மனைவியை உயிருடன் மண்ணில் புதைத்த கணவன் !2 மாதங்களுக்கு முன்பே திட்டம் போட்டு குழ...

Quick Share

தமிழகத்தின் வேலூரில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காதல் திருமணம்

வேலூரின் கே.வி. குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் என்கிற விநாயகம் (வயது 24), கூலித்தொழிலாளி.

இவருக்கு குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்த சுப்ரஜா(வயது 24) என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது.

இதுகுறித்து இருவரின் வீட்டாருக்கும் தெரியவர, வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

எனினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியே வந்த சுப்ரஜா, காதல் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது.

மாயமான சுப்ரஜா

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுப்ரஜா மாயமாகி விட்டதாக விநாயகம், அவர்களது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் கேவி குப்பம் போலீசில் புகார் அளித்தனர், போலீசாரின் விசாரணையில் விநாயகம், அவரது தம்பி விஜய், 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து சுப்ரஜாவை உயிருடன் புதைத்து கொன்றது தெரியவந்தது.

இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர், விநாயகம் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு,

நானும், சுப்ரஜாவும் காதல் திருமணம் செய்து கொண்டோம், இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக திருமணமான பெண் ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அது தகாத உறவாக மாற சுப்ரஜா என்னை கண்டித்தார், இதனால் கோபமடைந்த நான் அவளை அடித்தேன்

சதித்திட்டம் தீட்டிய விநாயகம்

இதில் சுப்ரஜாவின் உடல்நிலை பாதிப்படைந்தது, அவள் இல்லாமல் இருந்தால்  தான் நான் சந்தோஷமாக வாழ முடியும் என நினைத்தேன்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது தம்பி விஜய் மற்றும் உறவினர் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து சர்க்கார் தோப்பு வனப்பகுதியில் சவக்குழி தோண்டினோம்.

அதற்கு மறுநாள் எனக்கும் சுப்ரஜாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கைகளால் தாக்கியதில் அவர் காயம் அடைந்தார்.

உயிருடன் புதைத்தோம்

அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறினேன். அதை நம்பி அவரும் என்னுடன் வந்தார். அவரை சர்க்கார் தோப்பு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றேன். 

அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி விஜய் மற்றும் 17 வயது சிறுவன் இருவரும் தயாராக இருந்தனர். 3 பேரும் சேர்ந்து சுப்ரஜாவை தாக்கினோம் அவர் மயங்கி விழுந்தார்.

ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் அவரை உயிருடன் புதைத்துக் கொன்றோம். பின்னர் எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.

தாலி கட்டிய சில மணி நேரத்திலேயே இளம்பெண் ஓட்டம்..

Quick Share

வேலூர் அருகே தாலி கட்டிய சில மணி நேரத்திலேயே இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இவருக்கு அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் உறவு முறை சரியில்லை என்பதால் பெற்றோர்கள் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்து பேசி முடித்தனர்.

கடந்த 14-ந் தேதி காலை இளம்பெண்ணுக்கும் நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் அங்குள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதனையடுத்து மணமக்கள் பெண் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

அங்கிருந்த இளம்பெண் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் இளம்பெண்ணை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

தாலி கட்டிய சில மணி நேரத்திலேயே இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஓட ஓட விரட்டி விவசாயி வெட்டிக் கொலை!

Quick Share

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கடப்பந்தங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிதரன் (45). விவசாயியான இவருக்கு இரண்டு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் சினேகாவிற்க்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அருகே உள்ள கீராம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவருடன் காதல் திருமணம் ஆன நிலையில் இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

சசிதரனுக்குச் சொந்தமான விவசாய நிலம் கீராம்பாடி கிராமத்தில் உள்ளது. மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் சசிதரனின் மகளைக் காதல் திருமணம் செய்து கொண்டதால் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில் நேற்று இரவு சசிதரன் அவரது மகன் சுரேந்தர் ஆகியோர் விக்னேஷ்வரன் வீட்டிற்குச் சென்று வாய் தகராறு செய்துள்ளனர். மேலும் இன்று அதிகாலை சசிதரன் நிலத்திற்குப் போகும்போது வேலைக்குச் செல்வதற்காக பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த விக்னேஷிவரன் தந்தை மணியைப் பார்த்து கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் தெரிகிறது. 
இதை அறிந்த மணியின் மகன்களான விக்னேஷ் மற்றும் பசுபதி ஆகிய இருவரும் சசிதரனைத் துரத்திச் சென்று கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்திலிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்குச் சிகிச்சை அளித்த சிறிது நேரத்திலேயே சசிதரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி (50), இவரது மகன்களான பசுபதி (27), விக்னேஷ் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

17 லட்சம் கடன் வாங்கி தலைமை ஆசிரியர் மோசடி !

Quick Share

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் வேப்பனேரியை சேர்ந்தவர் லோகேஸ்வரி(வயது37). இவர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்து உள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறுயிருப்பதாவது,
எனது கணவர் சரவணகுமார் தேவரிசி குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கடந்த 2017-ம் ஆண்டு எனது கணவனை கடன் வாங்குவதற்காக அழைத்து சென்று உள்ளார். அங்கு ரூ.17 லட்சம் கடன் வாங்கி தலைமை ஆசிரியர், எனது கணவரிடம் கையெழுத்தை வாங்கிள்ளார். 
பணத்தை பெற்ற தலைமை ஆசிரியர் திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகிள்ளார். இதனால்  கடன் கொடுத்தவர்கள் எனது கணவனை தொந்தரவு செய்வது மட்டுமின்றி மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். 
இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்து உள்ளோம்.
மேலும் கடன் வாங்கி மோசடி செய்த தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தெரிவித்திருந்தார்.

சொந்த மகளிடமே அத்துமீறிய தந்தை …கள்ளக்காதலியுடன் ..நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்

Quick Share

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கஞ்சா போதையில் மகள் என்றும் பாராமல் அத்துமீறிய தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரம் டோபி கானா தெருவை சேர்ந்தவர் குமரன் (வயது37). மெக்கானிக் வேலை செய்து வந்தார். மேலும் திருட்டிலும், கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்தார்.

இவர் மீது சென்னை அம்பத்தூர், காஞ்சிபுரம் ரத்தினகிரி, வாலாஜா, வேலூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இவரது மனைவி செல்வி பேபி. இத்தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். செல்வி பேபிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதில் அவர் இறந்துவிட்டார்.

இதனை தொடர்ந்து அவரது 6 வயது மகள் வாலாஜா அடுத்த மேல குப்பத்தில் உள்ள அவரது தாத்தா பாதுகாப்பில் இருந்தார். குமரனும் அங்கேயே தங்கியிருந்தார்.

அப்போது குமரனின் நடவடிக்கை சரியில்லாததால் அவரது மாமனாருடன் தகராறு ஏற்பட்டது. குமரன் அவரது மகளை அழைத்துக்கொண்டு காட்பாடி பிரம்மபுரம் டோபிக்கானா தெருவில் குடியேறினார்.

அங்கு வைத்து மகள் என்றும் கூட பாராமல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும் பக்கத்து வீட்டிலும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பழைய காட்பாடி ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.

அடிக்கடி கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

மேலும் மகளிடமும் அத்துமீறுல் தொடர்ந்தது. இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது எனக் கூறி சிறுமியை பலமுறை அடித்துத் தாக்கி உள்ளார். அடிக்கடி கள்ளக்காதலியை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு குமரனின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. மனைவி இல்லாத இவரது வீட்டிற்கு அடிக்கடி ஒரு பெண் வந்து போவதை அவர் கவனித்தார். இதுபற்றி குமரனின் மகளை தனியாக அழைத்து விசாரித்தார்.

அப்போது சிறுமி எனது தந்தை வீட்டுக்கு பெண் ஒருவரை அழைத்து வருவார். இருவரும் துணி இல்லாமல் ஒன்றாக இருப்பார்கள்.

தந்தை என்னிடமும் தவறாக நடந்து கொள்வார். இதுபற்றி வெளியே சொன்னால் என்னை அடிப்பார். என்னை எனது தாத்தா வீட்டில் கொண்டு போய் விடுங்கள் என கூறி கதறி அழுதார்.

அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் காஞ்சனா மற்றும் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதில் குமரன் அவரது கள்ளக்காதலியை வீட்டிற்கு அடிக்கடி அழைத்து வந்ததும், சிறுமியிடம் அத்து மீறியதும் தெரியவந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குமரனை கைது செய்தனர். அவரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர். 6 வயது சிறுமியை வாலாஜாவில் உள்ள அவரது தாத்தா வீட்டில் ஒப்படைத்தனர்.

கஞ்சா போதையில் மகள் என்று கூட பாராமல் அத்துமீறல் நடந்துள்ளது.

பெண் குழந்தைகளை அடிக்கடி கவனித்து கொள்ள வேண்டும். எங்கேயும் தனிமையில் அனுப்பக்கூடாது. அவர்களுடைய நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். ஏதேனும் தவறு நடக்காமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது

பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி

Quick Share

வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட சித்தூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு 09.01.2021 அன்று வேலூர் மாவட்ட காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இதில் காவல் துறையினருடன் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இப்பேரணியில் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஏழை மாணவியின் படிப்புக்காக விஜய் மக்கள் இயக்கம் செய்த உதவி !!

Quick Share

தமிழகத்தில் விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக இயற்கை பேரிடர் காலத்தில் வெள்ளம் புயல் போன்ற கஷ்டத்திலிருந்து களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்

வேலூர் ராணிப்பேட்டை தனது கல்வியை தொடர முடியாமல் கஷ்டப்பட்டு வந்த அஸ்வினி என்ற மாணவிக்கு தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி செய்துள்ளனர.

அஸ்வினி என்ற மாணவி தனது குடும்ப வறுமை காரணமாக தனது கல்வி இயல் படிப்பை தொடர முடியாமல் இருந்ததை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், அந்த மாணவிக்கு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்தனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. இதனை அடுத்து விஜய்க்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்களுக்கும் மாணவி அஸ்வினியும் அவருடைய
பெற்றோர்களும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

மாஸ் காட்டிய கோட்டாட்சியா்.., கைவிடப்பட்ட முதியவருக்கு கோட்டாட்சியா் தலையிட்டு எடுத்த அ...

Quick Share

வேலூா் மாவட்டம் காட்பாடி பொன்னை கிராமத்தைச் சோ்ந்தவா் வேணுகோபால் வயது 82. கடந்த 2008-ஆம் ஆண்டு இவரது மனைவி கோமளேஸ்வரி இறந்து விட்டாா். ரூபசுந்தரி, மலா்விழி, லலிதா ஆகிய 3 மகள்கள், கருணாகரன், வெங்கடேசன், வேல்முருகன் ஆகிய 3 மகன்கள் உள்ளனா்.

அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. அரிசி ஆலை நடத்தி வந்த வேணுகோபால். வயதாகி வேலை செய்ய இயலாததால் கடந்த 2013-ஆம் ஆண்டு தனக்குச் சொந்தமாக அதே கிராமத்திலுள்ள ரூ. 1 கோடி மதிப்புள்ள 3 சொத்துகளையும் தனது மூன்று மகன்களுக்கும் எழுதிக் கொடுத்துள்ளாா்.

தந்தையிடம் சொத்துகளைப் பிடிங்கிவிட்டு மகன்கள் சரிவர உணவு கொடுக்காமலும், துன்புறுத்தியும் கைவிட்டுள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்ட வேணுகோபால், மகன்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்துகளை ரத்து செய்து மீண்டும் தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கடந்த ஜனவரி மாதம் வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தாா்.

வருவாய்க் கோட்டாட்சியா் கணேஷ் தலைமையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், சொத்துகளை பெற்றுக்கொண்ட பிறகு மகன்கள் 3 பேரும் தந்தையை உரிய வகையில் கவனிக்காதது தெரியவந்தது. இதையடுத்து அவரது 3 மகன்களுக்கும் எழுதிக் கொடுக்கப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புடைய 3 சொத்து பத்திரங்களையும் ரத்து செய்து மீண்டும் தந்தை வேணுகோபால் பெயரிலேயே மாற்ற வருவாய்க் கோட்டாட்சியா் கணேஷ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

SSC ஆட்சேர்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 15

Quick Share

ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) நிலையிலான தேர்வு, 2020″ மூலம் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை இம்மாதம் ஆறாம் தேதியன்று பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, கட்டணம், இணையம் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது உள்ளிட்ட தகவல்கள் விரிவான முறையில் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் (https://ssc.nic.in/) உள்ள ஆட்சேர்ப்பு அறிவிப்பில் உள்ளது.

ssc.nic.in என்னும் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2020 டிசம்பர் 15 ஆகும். இணையம் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 2020 டிசம்பர் 17 ஆகும்.

மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட தங்களது வண்ண புகைப்படத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படம் எடுத்த தேதி புகைப்படத்தின் மீது தெளிவாக அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் காரணமாக இந்த விதிகள் இணைக்கப்பட்டுள்ளன. தேதி அச்சிடப்படாத புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

பணியாளர் தேர்வாணயத்தின் தெற்கு மண்டலத்தில், 2021 ஏப்ரல் 12 முதல் 2021 ஏப்ரல் 27 வரை கீழ்க்கண்ட நகரங்களில் முதல்நிலை கணினி சார்ந்த தேர்வு நடத்தப்படும்: தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசத்தில் சிராலா, குண்டூர், காக்கிநாடா, கர்னூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரம், தெலுங்கானாவில் ஹைதராபாத், கரீம் நகர் மற்றும் வாரங்கல்.

மேற்கண்ட தகவல்களை, சென்னை பணியாளர் தேர்வாணையத்தின் (தென் மண்டலம்), இணை செயலாளரும், மண்டல இயக்குநருமான திரு கே நாகராஜா செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் இல்லாம என்னால வாழ முடியாது” – 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த இளம் பெண்…

Quick Share

வேலூர் தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோவில் தெருவில் நரேஷ்குமார்(32) என்பவர் அவரது மனைவி கோமதி(27), மகன் நித்தில்குமார் (5), மகள் ரியாஸ்ரீ (3) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் நரேஷ்குமார் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். நரேஷ்குமாரின் திடீர் மரணத்தால் அவரது இழப்பை தாங்க முடியாமல் குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொள்ள கோமதி முடிவு செய்துள்ளார்.

நேற்று இரவு கடிதம் எழுதி வைத்து விட்டு, வீட்டிலிருந்த கொசு மருந்தை குழந்தைகளுக்கு கொடுத்து கோமதியும் குடித்திருக்கிறார். இதனையறிந்த அவரது குடும்பத்தினர் மயங்கிக் கிடந்த மூவரையும் மீட்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 3 வயது மகள் ரியாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். கோமதிக்கும் அவரது மகன் நித்தில்குமாருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவறிந்து வந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார். கோமதி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், “அப்பா, அம்மா, அத்தை, மாமா எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க. என்னால அவர் இல்லாம வாழ முடியல, சின்ன சின்ன விஷயமும் அவர மட்டும் தான் ஞாபகப்படுத்துது. அவர் இல்லாத வாழ்க்கைய என்னால சத்தியமா வாழ முடியாது. அவர்தான் எங்க உலகமே. அவர் யாருக்கும் கஷ்டம் கொடுக்காம வாழனும்னு சொல்லுவாரு. அதனால நானும் என் ரெண்டு புள்ளைங்களும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காம சந்தோஷமா 4 பேரும் மேலோகத்தில் வாழ போறோம்” என்று கோமதி உருக்கத்துடன் எழுதியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிக வயதுள்ள நபரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய பெற்றோர்…மனமுடைந்து இளம்பெண்...

Quick Share

வேலூரில் 33 வயது நபரை திருமணம் செய்து கொள்ளும் படி பெற்றோர் வற்புறுத்தியதால், இளம்பெண் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த புதூர் மேடு பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.அதில், மூத்த மகளின் பெயர் கல்பனா. இவர் வேலூரில் இருக்கும் டிகேஎம் பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கு கடந்த ஒரு ஆண்டுகளாகவே திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். அதன் படி கடந்த வாரம் ஒரு மாப்பிள்ளை வந்து இவரை பார்த்து சென்றுள்ளார்.அவருக்கு 33 வயது .பேங்க் ஒன்றில் வேலை பார்ப்பதாகவும், பெண்ணை பிடித்துவிட்டதாகவும், திருமணத்திற்கு சம்மதம் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் கல்பனாவோ மாப்பிள்ளைக்கு வயது அதிகமாக உள்ளது .இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் கல்பனாவின் பெற்றோர் இவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதனால் கல்பனா மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்றிரவு வழக்கம் போல் கல்பனா தன்னுடைய அறைக்கு தூங்க சென்றுள்ளார்.

அதன் பின் சில மணி நேரங்களில் அவரின் அறையில் இருந்த பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரின் அறைக்குள் சென்று பார்த்த போது, போர்வையால் உடலை மூடிக் கொண்டு தன் கழுத்தை பிளேடால் கல்பனா வெட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து கதறி கூச்சலிட்டனர்.

இந்த சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து, கல்பனாவை அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இரத்தம் ஏற்கனவே அதிகம் வெளியேறியதால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிக வயதுள்ள நபரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் வற்புறுத்தியதால் பரிதாபமாக இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலிரவின்போது கணவன் கேட்ட கேள்வி: மனமுடைந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

Quick Share

திருமணமான முதல் நாள் இரவிலேயே மனைவி பற்றி கணவன் தவறாக பேசி துன்புறுத்தியதால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தின் கோவிந்தரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சந்திரலேகா. பட்டதாரியான இவருக்கும் முனைவர் பட்டம் பெற்ற பாலாஜி என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 23 ஆம் திகதி திருமணம் நடந்தது.

திருமணமான முதலிரவில் மனைவியிடம், நீ கற்புடன் தான் இருக்கிறாயா? இவ்வளவு அழகாக இருக்கும் நீ இதற்கு முன்னர் யாரையும் காதலிக்கவில்லையா? யாருடனும் உறவு வைத்துக்கொண்டதில்லையா பாலாஜி கேட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத சந்திரலேகா அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் சந்திரலேகாவின் ஆண் நண்பர் ஒருவர் சந்திரலேகா வீட்டிற்கு சென்று அவருக்கும் அவரின் கணவர் பாலாஜிக்கும் திருமண வாழ்த்துகளை கூறி சந்திரலேகாவின் நற்குணங்கள் குறித்து சநதிரலேகாவின் கணவர் பாலாஜியிடம் எடுத்து கூறியுள்ளார்.

சந்திரலேகாவைப்பற்றி உயர்வாக பேசிவிட்டு சென்றபிறகு கணவன்-மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதோடு சந்திரலேகா மீது பாலாஜிக்கு சந்தேகம் அதிகமானது.

இதனால் மனமுடைந்த சந்திரலேகா சில தினங்களுக்கு முன்னர் தனது தாய் வீட்டிற்கு சென்று தன் மனதில் உள்ளதையெல்லாம் கடிதமாக எழுதி வைத்துவிட்டு உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் சந்திரலேகாவின் கணவர் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.




You cannot copy content of this Website