இந்தியா

அதிர்ச்சி! தீராத வயிற்று வலியால் துடித்த சிறுவன் – தேங்காய் அளவிலான கல்வயிற்றில்..

Quick Share

தேங்காய் அளவிலான கல்லை 17 வயது சிறுவனின் சிறுநீர்ப்பையில் இருந்து மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையானது சிறுவன் அனாதை என்பதால் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ரூபன் ஷுக்லா என்ற 17 வயது சிறுவன் பிறக்கும் போதே Exstrophy-Epispadias Complex (EEC) என்ற விசித்திர நோயுடன் பிறந்தான்.

இந்த பிரச்சினை உடையவர்களின் சிறுநீர்ப்பையில் சிறுநீரை சேமிக்கவோ அல்லது சாதாரணமாக செயல்படவோ முடியாது.

இதன் விளைவாக அதிகமாக சிறுநீர் கசிவு ஏற்படும். இந்த EEC என்ற அரிய நிலையானது 1 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே காணப்படும். ரூபனுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவர் ராஜீவ் ரெட்கர் என்பவர் சிகிச்சையளித்திருக்கிறார்.

அப்போது ரூபனின் சிறுநீர்ப்பையின் அளவை அதிகரிக்க சிறுநீர்ப்பை பெருக்குதல் மற்றும் ஒரு வடிகுழாயைப் பயன்படுத்தி சிறுநீர் கழிக்க அவரது வயிற்றில் ஒரு குழாயை உருவாக்க மிட்ரோஃபனோஃப் செயல்முறை ஆகியவற்றை அவர் செய்திருந்தார்.

ஆனால் இதன்பின்னர் ரூபன் அவரிடம் வந்து சிகிச்சை பெறவில்லை. இந்நிலையில் தான் சமீபத்தில் ரூபனுக்கு கடுமையான வலி மற்றும் சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தன்னை பராமரிக்கும் நபருடன் மருத்துவர் ராஜீவிடம் ரூபன் வந்தான். அங்கு இரண்டாவது முறையாக அவனுக்கு சிகிச்சையளித்து புதிய வாழ்க்கையை ராஜீவ் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

அதன்படி மருத்துவர்கள் குழு ரூபனுக்கு அறுவை சிகிச்சை செய்து 13.4 அங்குலங்கள் கொண்ட 1 கிலோ கிராம் எடையில் உள்ள கல்லை சிறுநீர்ப்பையில் இருந்து அகற்றியுள்ளனர்.

இதன் பின்னர் அவனது வளர்ந்த சிறுநீர்ப்பையை மருத்துவர்கள் புனரமைத்தனர்.

மருத்துவர் ராஜீவ் கூறுகையில், ரூபன் அறுவை சிகிச்சைக்கு மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார். அவரது சிறுநீரகங்கள் நன்கு பாதுகாக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகின்றன.

இது போன்ற பிரச்சினையை கொண்டவர்கள் விடாமல் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

யாருகிட்ட -மத்திய அரசிடம் மண்டியிட்ட வாட்ஸ் அப் நிறுவனம்!

Quick Share

வாட்ஸ் அப் நிறுவனம் சமீபத்தில் கொண்டு வந்த தனியுரிமை கொள்கை சட்டம் மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வாட்ஸ் அப் தங்களது புதிய தனியுரிமை கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. மேலும் தனியுரிமை கொள்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் வாட்ஸ் அப் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், வாட்ஸ் அப் தனது புதிய கொள்களைகளை தற்போதைக்கு அமல்படுத்தாது என தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய கொள்கைகளுக்கு அனுமதி வழங்காத பயனர்களின் வாட்ஸ் அப் செயலி எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தனி நபர் தகவல் பாதுகாப்பு மசோதா சட்டம் ஆகும் வரை புதிய தனியுரிமை கொள்கைகளை அமல்படுத்த மாட்டோம் என வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இருப்பினும் அடிக்கடி வாட்ஸ் அப்பில் கொள்கையை ஏற்றுக்கொள்ள நினைவூட்டல் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது மக்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.

மக்களே பெருமை தகவல் -விண்வெளி பயணம் மேற்கொள்ளும் 2-வது இந்திய வம்சாவளி பெண்!

Quick Share

விர்ஜின் கேலடிக் என்பது ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமாகும், இந்த நிறுவனம் சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக இன்று தனது விண்கலமான யூனிட்டி 22-ஐ அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம் நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு இன்று விண்வெளிப் பயணம் மேற்கொள்ள உள்ளது. பிரான்சனுடன் ஸ்ரீஷா பண்ட்லா, பெத் மோசஸ் மற்றும் கொலின் பென்னட் ஆகியோர் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

விர்ஜின் கேலடிக் நிறுவனத்தில் அரசு விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் துணைத் தலைவராக ஸ்ரீஷா பாண்ட்லா இருக்கிறார். விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள 2-வது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீஷா பாண்ட்லா பெற்றுள்ளார்.

31 வயதான ஸ்ரீஷா பாண்ட்லா இந்தியாவில் பிறந்த இரண்டாவது நபராகவும், தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராகவும் இருப்பார். ஆந்திராவின் தெனாலியில் தனது முன்னோர்களைக் கொண்ட விண்வெளி பொறியாளர் ஆவார்.

நியூ மெக்சிகோ ஏவுதளத்தில் இருந்து விண்கலம் இன்று புறப்பட உள்ளது. விர்ஜின் கேலக்டியின் இரட்டை விமானங்களுக்கு மத்தியில் ‘யூனிட்டி 22’ விண்கலம் பொருத்தப்பட்டுள்ளது. உடனடியாக, யூனிட்டி விண்கலத்தில் உள்ள ஹைபிரிட் ராக்கெட் மோட்டார் இயங்கத் தொடங்கி, விண்வெளி நோக்கி பயணத்தை தொடங்கும். 50,000 அடி உயர இலக்கை இரட்டை விமானங்கள் அடைந்ததும், அங்கிருந்து யூனிட்டி விண்கலம் விடுவிக்கப்படும். இந்த விண்கலம் மூலம் அடுத்தாண்டு முதல் விண்வெளிக்குச் சுற்றுலா செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடுமை ..கொடுமை கேரளாவை உலுக்கும் ஜிகா வைரஸ்: தமிழகத்திலும் ஊடுருவ வாய்ப்பு?

Quick Share

கேரளாவில் ஜிகா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து, குமரி எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச்சாவடி மற்றும் எல்லைப்புற கிராமங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கரோனா பாதிப்பு கேரளாவில் அதிகரித்துள்ள வேளையில், தற்போது ஜிகா வைரஸ் பரவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்துள்ள, கேரள பகுதியான பாறசாலையைச் சேர்ந்த 13 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அப்பகுதியில் கேரள மாநில சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தமிழக எல்லையை ஒட்டி ஜிகா வைரஸ் தாக்கம் இருப்பதால், குமரி மாவட்டத்திலும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியை மும்முரப்படுத்தியுள்ளனர். கேரள எல்லையில் உள்ள குமரி மாவட்ட சோதனைச் சாவடிகளான களியக்காவிளை, காக்காவிளை, நெட்டா சோதனைச்சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கின்றனர்.

மேலும், குமரி மாவட்ட சுகாதாரத் துறையினர் 25 பேர் அடங்கிய குழுவினர் கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள பளுகல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் அறிகுறி தென்பட்டவர்கள் குறித்து சோதனை மேற்கொண்டனர். ஜிகா வைரஸ் கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு பரவாமல் தடுக்கும் வகையில் எல்லைப் பகுதிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மிகவும் ஆபத்தான லாம்ப்டா வைரஸ் இந்தியாவில் இல்லை: மத்திய சுகாதாரத்துறை!

Quick Share

கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று வரை இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் உருமாறும் தன்மை கொண்டிருப்பதால் பாதிப்பில் இருந்து முழுமையாக மீள முடியவில்லை. இது டெல்டா கொரோனா, டெல்டா பிளஸ் கொரோனா என அடுத்தடுத்து உருமாறிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் கடந்த ஜூன் 14ம் தேதி உலக சுகாதார நிறுவனம் லாம்ப்டா வகை வைரஸ் உருவாகி இருப்பதாக அறிவித்தது.

இந்த வகை வைரஸ் உலகின் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருப்பதாகவும், கொரோனா வைரஸை விட அதிகளவில் பரவக்கூடிய மிகவும் ஆபத்தான வைரஸ் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இது குறித்த போதுமான ஆய்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை. லாம்ப்டா வகை வைரஸ் புதிதாக பரவிய வைரஸ் அல்ல; இது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே இருப்பதாக சொல்லப்படுகிறது.

கொரோனோவால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு 80% நோய்த் தொற்று ஏற்பட இந்த வைரஸ் காரணமாக அமைவதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வைரஸ் தடுப்பூசியின் மூலம் உருவாகியுள்ள ஆன்டிபாடிகளுக்கு எதிரான மேம்பட்ட சக்தியை கொண்டிருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் லாம்ப்டா வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை தகவல் -இந்தியாவில் 3-வது அலைக்கு “லாம்ப்டா” வைரஸ் காரணமாக இருக்க...

Quick Share

கொரோனா வைரஸ் முடிவுக்கு வருகிறது என மருத்துவ உலகமும், மக்களும் நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக உறுமாறி பரவி வரும் கொரோனா வகையான “லாம்ப்டா” வேரியண்ட், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸைவிட கொடியது என மலேசிய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

கடந்த 4 வாரங்களில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் “லாம்ப்டா” கொரோனா வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த லாம்ப்டா வேரியண்டானது, உலகிலேயே அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நாடான பெருவில் தோன்றியதாகவும், தற்போது ப்ரிட்டன், தென் அமெரிக்கா, அர்ஜெண்டீனா போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை வேரியண்டானது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே பெருவில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், தற்போது தான் அதன் வீரியத்தை உலகம் நாடுகள் உணர்ந்திருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

எனினும், லாம்ப்டா வேரியண்ட் இதுவரை இந்தியாவிலோ அல்லது இந்தியாவின் அண்டை நாடுகளிலோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆசிய கண்டத்தில் இஸ்ரேலில் மட்டுமே இந்த வகை வேரியண்ட்டின் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் மூன்றாவது அலை தொடக்கத்திற்கு லாம்ப்டா வகை கொரோனா காணமாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்கள் தளர்வுகள் அளித்துள்ளதால் மக்கள் அலை அலையாய் குவிந்து வரும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே லாம்ப்டா வகை கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதும், தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிப்பது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 7 லட்சம் பேர் பலி -எதற்கு தெரியுமா ?

Quick Share

உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்ப நிலை காரணம் ஆகலாம். 2000-2019 ஆண்டுகளில் எல்லா பிராந்தியங்களிலும் சுட்டெரிக்கும் வெப்ப நிலை அதிகரித்து வந்துள்ளது. இது உலக வெப்பமயமாதல், எதிர்காலத்தில் அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாகும் என காட்டுகிறது.

* இந்தியாவில் அசாதாரண குளிரானது ஆண்டுக்கு 6 லட்சத்து 55 ஆயிரத்து 400 பேர் இறக்கவும், சுட்டெரிக்கும் அதிக வெப்பம் 83 ஆயிரத்து 700 பேர் உயிரிழக்கவும் காரணம் ஆகலாம்.

* உலகளவில் நிகழப்போகிற இறப்புகளில் 9.43 சதவீதம் அதிக குளிர் மற்றும் மிதமிஞ்சிய வெப்பத்தால் நிகழும்.

* இது ஒவ்வொரு ஒரு லட்சம் பேரிலும் 74 கூடுதலான இறப்புகள் நேர்வதற்கு சமமானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடாமல் தொடரும் வைரஸ் – கேரளாவில் கால்பதித்த அடுத்த வைரஸ்!

Quick Share

கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றாக கேரளா திகழ்கிறது. அங்கு கொரோனா 2ஆவது அலை கட்டுப்படுத்தப்பட்டாலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், சில முக்கியமான கட்டுப்பாடுகள் தொடர்கிறது. இந்த நிலையில் அங்கு சிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவர் காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனிடையே அவருக்கு கடந்த 7ஆம் தேதி குழந்தை பிறந்தது.

எனினும் உடல்நலக்குறைவால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அந்த பெண்ணின் ரத்த மாதிரிகளை சேகரித்து புனேயில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மருத்துவத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன் மூலம் கேரளாவில் இந்த தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டு இருக்கிறது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். கேரளாவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளே இன்னும் மறையாமல் இருக்கும் நிலையில், சிகா வைரசும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது மாநில அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.

சிகா வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடியது ஆகும். இதனையடுத்து அங்கு சுகாதார பணிகள், கொசு ஒழிப்பு பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

தொடரும் போராட்டம்: பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு!

Quick Share

“வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச, மத்திய அரசு தயாராக உள்ளது,” என, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களின் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், டில்லி எல்லையில் எட்டு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுடன் மத்திய அரசு, 11 முறை பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.இந்நிலையில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று கூறியதாவது: விவசாய சட்டங்களை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச, மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை ரத்தாகும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

விவசாயிகள் போராட்டத்தை துவக்கிய பின், விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்யப்படுவது அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் தான் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால் போராட்டத்தை கைவிட்டு, மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமாக பேச விவசாய அமைப்புகள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பூசி விவகாரத்தில் அரசுக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் இடையே கடும் மோதல்!

Quick Share

கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கும், பிரேசில் அரசாங்கத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பில், தென்னமெரிக்க நாடான பிரேசிலுக்கு 2 கோடி (20 மில்லியன்) டோஸ் தடுப்பு மருந்து முன்னதாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.

324 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இந்தத் தடுப்பு மருந்தை பிரேசில் அரசு கொள்முதல் செய்தது.

தற்போது பிரேசில் அரசுக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் இந்த தடுப்பு மருந்து விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.

பிரேசிலின் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு (ANVISA) பாரத் பயோடெக் தடுப்பு மருந்துகளுக்கு அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை என பிரேசில் அரசு கூறியுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்த பாரத் பயோடெக் தலைமை, கடந்த ஜூன் 4-ஆம் தேதி பிரேசிலிய சுகாதாரத்துறை தங்கள் தடுப்பு மருந்துக்கு அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளதாக கூறியுள்ளது.

பாரத் பயோடெக்கின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, பிரேசிலிய சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு ஓர் தகவலை வெளியிட்டது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்புமருந்தான கோவாக்சினின் அவசர தேவை பயன்பாட்டுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் 4-ஆம் தேதி பாரத் பயோடெக் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கப்பட வில்லை என்றும் கோவாக்சின் தடுப்புமருந்து “குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு விநியோகிக்கப்படவேண்டும்” என்றும் பிரேசிலிய சுகாதாரத்துறை-ANVISA தெரிவித்திருந்ததாக கூறியுள்ளது.

இது பாரத் பயோடெக் மற்றும் பிரேசில் அரசுக்கு எதிரான மோதலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தப்புமா இந்தியா – கோவிட் 3-வது அலையை தடுக்க மத்திய அரசு போட்ட திட்டம்.

Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 3-வது அலையை தவிர்க்க வேண்டுமானால், ஒவ்வொரு நாளும் 86 லட்சம் தடுப்பூசி போட வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. கோவிட்டின் மூன்றாவது அலை நாடு முழுவதும் பரவக்கூடாது என்று இந்தியா கடுமையாக வேண்டிக்கொண்டு இருக்கிறது. நிர்வாகிகள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்கள் இதுபோன்ற ஒரு நிகழ்வைத் தடுக்க கடுமையாக உழைத்து வருகின்றனர்.

இருப்பினும், தற்போது இருக்கும் தடுப்பூசி போடும் விகிதம் இந்தியாவில் மூன்றாவது அலையை தடுப்பதற்கு போதுமானதாக இல்லை என்பது தான் உண்மை.

இந்த நிலையில், இந்தியாவில் மூன்றாவது கோவிட் அலைகளைத் தடுக்க வேண்டும் என்றால், இந்தியா தனது 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையில் குறைந்தது 60 சதவீத மக்களுக்கு, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக தடுப்பூசி (இரண்டு டோஸ்) செலுத்தபட வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக, அடுத்த ஒவ்வொரு நாளும் 86 லட்சம் (8.6 மில்லியன்) தடுப்பூசி போட வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆயினும்கூட, இப்போது ஒரு வாரத்திற்கும் மேலாக, இந்தியாவில் ஒரு நாளைக்கு சுமார் 4 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதனை ஒப்புடும்போது 4.6 மில்லியன் பற்றாக்குறையாக உள்ளது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை, வெறும் 1.5 மில்லியன் மக்கள் மட்டுமே தடுப்பூசி பெற்றனர், இது இலக்கை விட 7.1 மில்லியன் குறைவு.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் பற்றாக்குறை ஏற்படுமெனில், டிசம்பருக்குள் 60 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடவேண்டும் என்ற இலக்கு பாதிக்கப்படுகிறது. இதனால் ஒரு நாளைக்கு 8.6 மில்லியன் என்கிற கணிப்பை தாண்டி அதிக துடுப்புசிகளை செலுத்த வேண்டும் என்ற சுமை ஏற்படும்.

மூன்றாம் அலை எதிரொலி: தளர்வுகளை திரும்ப பெற போகும் அரசு ..

Quick Share

நாட்டில் கொரோனா இரண்டாம் அலை குறைந்த போதிலும், மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை இருப்பதால் அனைத்து மாநிலங்களும் தளர்வுகள் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் நடமாட்டம் இருப்பதாக இன்றைய சுகாதாரத்துறையின் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கூறியதாவது;

“நாட்டில் கொரோனாவால் சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே 10 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு விகிதம் பதிவாகி வருகிறது.

இன்னும் சில பகுதிகளில் இரண்டாம் அலை குறையவில்லை. மலைப் பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்றால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்” என்றார்.




You cannot copy content of this Website