இந்தியா

ராகுல் காந்தியை கிண்டல் செய்த நிர்மலா…!!!புலம்பெயர் தொழிலாளிகளின் சூட்கேஸ்களை சும...

Quick Share

சாலையில் அமர்ந்து பேசி வெளிமாநில தொழிலாளிகளின் நேரத்தை வீணடித்ததற்கு பதில், அவர்களது சூட்கேஸ்களை சுமந்து சென்று ராகுல் உதவியிருக்கலாம்’ என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிண்டல் செய்தார்.

டில்லியில் இருந்து சொந்த மாநிலம் திரும்பிய வெளிமாநிலத் தொழிலாளர்களை, காங்கிரஸ் முன்னாள் தலைவர், ராகுல் நேற்று முன்தினம் சந்தித்தார். சாலையோரங்களில் அமர்ந்து, அவர்களிடம் நலம் விசாரித்தார். நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இது குறித்த கேள்விக்கு, நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

சாலையில் அமர்ந்து பேசி, அவர்களுடைய நேரத்தை வீணடித்துள்ளார். அதற்கு பதிலாக, அவர்களுடைய சூட்கேஸ்களை சுமந்து சென்று உதவியிருக்கலாம்.காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கு, தேவையான உதவி செய்ய, அந்த மாநில அரசுகளை, அவர் கேட்டுக் கொள்ளலாம். இது வெறும் அரசியல் நாடகம் தான்.

இந்த இக்கட்டான நேரத்தில், இதுபோன்ற சில்லரைத்தனமாக விஷயங்களில் ஈடுபடுவதைவிட்டு, பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைவர், சோனியாவிடம் இதை கோரிக்கையாக வைக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

ஆசைக்கு இணங்க மறுத்த நண்பனின் மனைவி மிரட்ட கையில் ஆயுதத்தை வைத்து செய்த சம்பவம் !

Quick Share

டெல்லியில் மாநிலத்தில் ஜெயந்தி விகார் என்னும் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கி சத்தம் கேட்டது இதனால் அக்கம் பக்கத்தினர் இதில் பெண் ஒருவர் காவல்துரையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை பார்த்ததில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவத்தைப் பற்றி விசாரித்த காவல்துறையினர் அந்த நபர் 27 வயது உடைய விக்கி என்பது கண்டறியப்பட்டது இவர் கோட்லா முபாரக்பூர் என்னும் இடத்தை சேர்ந்தவர்.

இவர் தனது நண்பர் ரமேஷ் என்பவரின் மனைவி மீது ஆசைப்பட்டு உள்ளார். தகவல் கொடுத்த ரமேஷ் மனைவியிடம் நடத்திய விசாரணையில் தனது கணவர் ஜெயிலில் உள்ளதாகவும் அதனால் தனது தாய் வீட்டில் தங்கி அவரோடு வசித்து இருப்பதாகவும் கூறினார். நண்பன் இல்லாத நேரத்தை பயன்படுத்திக்கொள்ள ரமேஷின் நண்பரான விக்கி தனது நண்பனின் மனைவியை அடைய விருப்பம் தெரிவித்துள்ளார். விக்கியின் விருப்பத்தை ஏற்க ரமேஷ் மனைவி மறுத்துவிட்டார் இதனால் விக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தன்னை தானே நெஞ்சில் சுட்டுக் கொண்டார், என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கையில் ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் குற்றச்செயலில் ஈடுபட்டதற்காகவும் கோட்லா முபாரகபுர் பகுதியை சேர்ந்த 27 வயது விக்கி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கை தட்டி வரவேற்ற கடற்படையினர் ! மாலத் தீவுகளில் மாட்டிக்கொண்ட 588 இந்தியர்கள் INS ஜலஷ்வ...

Quick Share

உலகம் முழுவதும் தீவிரமாக பரவியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகளில் வெளிநாடு பயணத்தை நிறுத்திவைத்துள்ளது. அவசர கால நடவடிக்கையாக முடங்கிக்கிடக்கும் சூழ்நிலையில் உள்ள பயணிகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மாலத் தீவுகளில் இருந்து 588 இந்தியர்கள் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ என் எஸ் ஜலஷ்வா மூலம் இன்று காலை கொச்சி துறைமுகம் வந்து சேர்ந்தனர்.

ஊரடங்கினால் மாலைதீவுகளில் மாட்டிக்கொண்ட இவர்கள் நாடு திரும்ப உதவுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்திய அரசு அவர்களை இந்தியா அழைத்து வர கப்பற் படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பலுக்கு உத்தரவிட்டது. இந்த கப்பல் கடந்த 15ம் தேதி 588 இந்தியர்களுடன் மாலத்தீவுகளின் தலைநகர் மாலேயில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், மோசமான வானிலை, புயல் காரணமாக கப்பல் 16ம் தேதிதான் புறப்பட்டது. இந்த கப்பல் சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு வந்தடைந்தது. பயணிகளில் , 6 கர்ப்பிணிகள் உள்பட 70 பெண்கள், இருந்தனர். இவர்களை கடற்படை மாநில அரசு, மாவட்ட நிர்வாகத்தினர், துறைமுக அதிகாரிகள் வரவேற்றனர். இவர்களுக்கு கோவிட் 19 தொற்று உள்ளதா என்பதை கண்டறிய சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

பின்னர் அனைவரும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.

உ.பி மாநிலம் சாலை விபத்தில் உயிரிழந்த 26 பேருக்கு தலா 2 லட்சம் பிரதமர் அறிவிப்பு !

Quick Share

உத்திரப் பிரதேச மாநிலம் அவுரியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் நாடு முழுவது அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 26 பேர் பலியாகினர், 36 பேர் படுகாயம் அடைந்தனர் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் அடுத்த வாரிசுக்கும் தலா ரூ. 2 லட்சம் சிறப்புத் தொகை பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் அவுரியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமுற்ற ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 50,000/- சிறப்புத் தொகையை வழங்கவும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மாநில அரசுகள் பொருளாதார முடிவுகளை சுயமாக மேற்கொள்ளலாம் – மத்திய அரசு அறிவிப்பு

Quick Share

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 90,927 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 2,872 பேர் உயிரிழந்துள்ளனர். 34,000 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 11,224 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கூறியதை அளவில் பதிவாகியிருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. இந்திய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கையானது தற்போது சில மாற்றங்களுடன் இம்மாதம் 31 வரை நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி மாநில முதவர்களுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு குறிப்பிடத்தக்க மாற்றங்களாக, சிவப்பு, பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களை மாநில அரசே தீர்மானிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மாநில அரசுகள் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் சுயமாக முடிவுகளை எடுக்கலாம் என தெரிவித்துள்ளார் எனப்து குறிப்பிடத்தக்கது.

மஹாராஷ்ட்ராவில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு …!!!

Quick Share

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் முதலாவது ,இரண்டாவது என இந்த முறை மூன்றாவது கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் இந்த ஊரடங்கு முடிவடைகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மஹாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிரா மாநிலம் முன்னிலையில் உள்ளது. அங்கு 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,135 பேர் உயிர் இழந்துள்ளனர். நாடு முழுவதும் 3ம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 4ம் கட்டமாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மஹாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

2 மாதங்களுக்கு இலவச அரிசி கோதுமை ஷர்மிக் ரயிலில் செல்வோருக்கு 85% கட்டணம் மத்திய அரசு ஏ...

Quick Share

பிரதமர் நரேந்திர மோடி ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கி பொருளாதார சேதத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த இதற்கான 5-ஆம் கட்ட அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

20 கோடி மக்களுக்கு ஜந்தன் வங்கி கணக்கு மூலம் ரூ.10 கோடி அளவிற்கு நேரடியாக பணம் வழங்கப்பட்டுள்ளது எனவும் 10025 கோடி ஜந்தன் கணக்குகள் மூலம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டியது அரசின் கடமை எனவும் கொரோனாவால் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடியை நாம் வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்.

அரிசி,கோதுமை,பருப்பு ஆகியவை அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஷர்மிக் சிறப்பு ரயில் மூலம் பயணம் செய்வோரின் கட்டணத்தில் 85% மத்திய அரசு ஏற்கும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரேஷன் ஆடைகளை நாடுமுழுவதும் உள்ள அணைத்து ரேஷன் கடைகளில் பயன்படுத்தலாம்.

இந்தியாவிற்காக ஒரு பில்லியன் டாலர் நிதி வழங்க முடிவெடுத்த உலகவங்கி

Quick Share

உலகம் முழுவதும் கொரோனா 45 லட்சத்திற்கும் மேலானோரை பாதித்துள்ளது. இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கு உலக வங்கி மற்றும் உலக சுகாதார மையம் உதவி செய்து வருகிறது. தற்போது இந்தியாவில் பாதிப்பு நிலை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் உலக வங்கி கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுமார் ஒரு பில்லியன் டாலர் நிதி கொடுப்பதாக தெரிவித்தது. இந்த தொகை சிறு மற்றும் குறு வியாபாரத்தை மீட்க இந்த தொகையை கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதைப் பற்றி பேசிய உலகவங்கியின் இந்திய இயக்குனர் ஜுனைட் அஹ்மத் நிதி கொடுப்பதன் முழு விவரங்களை வெளியிடவில்லை. மேலும் இந்த தொகை இந்தியாவின் பொருளாதாரத்தையும் சமூக பாதுகாப்பையும் நிலைப்படுத்துவதற்காக உதவும் என தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு வழங்கும் தொகையை இரண்டு பிரிவாக கொடுப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. ஜூன் மாத இறுதிக்கு முன்பு சுமார் 750 மில்லினும் அடுத்ததாக 250 மில்லியன் ஜூன் 2021 முன்பு கொடுக்கப்படும் என செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தொகை இந்திய அரசாங்கம் பொருளாதார சேதத்தை சரி செய்ய பெரும் உதவியாக இருக்கும் என உலக வங்கியின் இந்திய இயக்குனர் ஜுனைத் அஹமட் தெரிவித்துள்ளார்.

வெண்டிலேட்டர் கொடுத்துள்ளோம், இந்தியா மற்றும் மோடியுடன் இணைந்து நிற்பேன் என டொனல்ட் ட்ர...

Quick Share

உலகம் முழுவதும் 4.5 மில்லியன் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகள் கடுமையாக பாதிப்படைந்தன. உலகிலேயே அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது.

மேலும் இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகள் வலு பெற்றிருப்பதாக தோனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தியா ஹைட்ரோகுளோரிக்வின் மருந்துகளை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது. தற்போது அமெரிக்கா இந்தியாவிற்கு வென்டிலேட்டர் வழங்க முடிவெடுத்துள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு மிக அவசிய தேவையான வென்டிலேட்டர் வழங்க அமெரிக்க முன்வந்தது வரவேற்கத்தக்கது. இரு நாடுகளின் உறவில் இதுபோன்ற கொடுத்தல் வாங்கல் நடந்து கொண்டிருப்பதால். இருநாடுகள் இடையே உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைப்பற்றி ட்விட்டரில் தெரிவித்த டிரம்ப் இந்தியாவிற்கு வெண்டிலேட்டர் அமெரிக்கா அனுப்பி வைக்கும் எனவும், இந்தியா மற்றும் மோடியுடன் தான் இறந்திருப்பதாக தோனல்டு டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு நடந்து செல்வது குறித்த விஷயத்தில் மாநிலங்கள் தான் நடவடிக்...

Quick Share

மார்ச் மாதம் 23ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அமலில் உள்ளது. ஊரடங்கு நேரத்தில் வெளிமாநிலத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு திரும்ப வேண்டுமென சாலை வழியாக பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து சென்றனர்.

எந்தவித போக்குவரத்து இல்லாமல் முடங்கி உள்ளதால் அவர்கள் இந்த முடிவை எடுத்து தாங்களே நடந்து செல்கின்றனர். இருக்கும் இடத்தில் வேலை இல்லாமல் கையில் செலவிற்கு காசு இல்லாமல் தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இதைப்பற்றிய மனு விசாரணையில் வந்துள்ளது. அலோக் ஸ்ரீவஸ்தவா என்னும் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ட்துள்ளார். தனது மனுவைத் தாக்கல் செய்து வாதாடிய ஸ்ரீவஸ்தவா, சமீபத்தில் 16 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் மோதி கொடுமையாக இறந்ததையும் சுட்டிக்காட்டினார்.

அவரின் அணைத்து வாதங்களைக் கேட்டுக் கொண்ட உச்ச நீதிமன்றம், “மக்கள் நடந்து செல்கிறார்கள். அவர்களை எப்படி எங்களால் நிறுத்த முடியும். நீதிமன்றமானது, சாலைகளில் நடந்து செல்பவர்களை கண்காணிக்க வேண்டும் என்பது மிகவும் சவாலானது. இது பற்றிய விஷயங்களில் மாநிலங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். செய்தித்தாள்களில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில்தான் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,” என்று குற்றம் சாட்டியது. மேலும் செய்தித்தாள்களில் வரும் தகவல்களைப் படித்துவிட்டு வல்லுநர்கள் போல மாறிவிடுகின்றனர். செய்தித் தாள் தகவலின் அடிப்படையில் இந்த நீதிமன்றம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

இந்த விவகாரம் குறித்து ஏன் நீதிமன்றம் கேட்கவோ, உத்தரவிடவோ வேண்டும். மாநிலங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. ஏற்கனவே பல மாநிலங்களில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடுகள் போன்றவற்றை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 81,970 பேருக்கு பாதிப்பு, மஹாராஷ்டிராவில் 27ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ...

Quick Share

இந்தியாவில் இதுவரை 81,970 பெயர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 27,920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 2,649 பேர் மரணமடைந்துள்ளனர். வரும் மே 17ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு நிறைவடையும் நிலையில் பாதிப்புகள் மற்றும் மாநில முதல்வர்களின் ஆலோசனை பொறுத்தே முடிவு எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மக்களிடையே உரையாற்றினர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் மிகச் சாதாரணமாக 10 ஆயிரம்பேருக்கு இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாக மாறுவது 13.9 நாட்களாக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தகவல் அளித்திருந்தார்.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு மட்டும் 27,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் 9,674 பேருடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 9,267பேருடன் குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் இருக்கிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் சமீபத்தில் ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என அனைத்தும் உன் பதிவுகளையும் இந்தியன் ரயில்வே நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஏற்பட்ட மற்றொரு ஆபத்து… ஒரே நாளில் 35,000 பேர் சாப்பிடும் அளவு தின்று தீர்க...

Quick Share

கடந்த ஆண்டு 3 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேரில் விளைந்த பயிர்களை தின்று தீர்த்த வெட்டுக்கிளிகள் இந்த ஆண்டும் அந்த அளவுக்கு சூறையாடும் என விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.பாகிஸ்தானில் இருந்து கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ராஜஸ்தான் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் உலகையே மிரட்டிக் கொண்டிருக்க சுண்டுவிரல் அளவே உள்ள இந்த வெட்டுக்கிளிகள் கடந்த 10 நாட்களாக ராஜஸ்தான் விவசாயிகளை அலற வைத்துக் கொண்டிருக்கின்றன.

மே மாதத் தொடக்கத்திலிருந்து பாகிஸ்தானுக்குள் இருந்து எல்லை தாண்டி கூட்டம் கூட்டமாக ராஜஸ்தானுக்கு படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றன வெட்டுக்கிளிகள்.முதலில் எல்லையோர மாவட்டங்களுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் தற்போது உள்மாவட்டங்களிலும் பயிர்களை தின்று தீர்க்கத் தொடங்கிவிட்டன. இலை, பூ, பழம், காய், தண்டு என பயிர்களில் எதையும் இவை விட்டுவைப்பதில்லை.

ஒரு சதுர கிலோ மீற்றருக்குள் 40 லட்சம் வெட்டுக்கிளிகள் வந்திறங்க முடியும். அவற்றால் ஒருநாளில் 35 ஆயிரம் பேர் சாப்பிடும் அளவுக்கு தாவரங்களை கபளீகரம் செய்ய முடியும் என்பதுதான் மிகவும் ஆபத்தானது.இந்த வெட்டுக்கிளிகளை விரட்ட வெடி வெடிப்பது, தகரம் மற்றும் அலுமினியப் பொருட்களை தட்டி ஒலி எழுப்புவது மட்டும் தான் விவசாயிகளின் கையில் இருக்கும் வாய்ப்புகள்.

மற்றொருபுறம் பூச்சி மருந்து தெளித்து வெட்டுக்கிளிகளை அழிக்க அரசு முயற்சித்து வந்தாலும் அது ஓரளவுக்கு மேல் பயன்தரவில்லை. தீயணைப்பு வாகனங்கள் மூலமும் பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. விரைவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகரிக்கும் என்ற நிலையில் அதற்காக மத்திய அரசிடம் 84 கோடி ரூபாய் நிதி கேட்டிருக்கிறது ராஜஸ்தான்.

ஆனாலும் கடந்த ஆண்டு 3 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேரில் விளைந்த பயிர்களை தின்று தீர்த்த வெட்டுக்கிளிகள் இந்த ஆண்டும் அந்த அளவுக்கு சூறையாடும் என விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.சமீபத்தில் இரண்டு மாதங்களில் வெட்டுகிளிகளால் இந்தியாவில் மற்றொரு ஆபத்து ஏற்படவிருப்பதாக ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு விடுத்த எச்சரிக்கை இவ்வளவு சீக்கிரமாக அரங்கேறி வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.




You cannot copy content of this Website