விளையாட்டு

தல தோனியின் கர்ஜனையில் அதிர்ந்து போன Umpire.., கொடுத்துதான் பாரேன் !!

Quick Share

நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சிறப்பாக விளையாடி ஜெயித்தது. முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை சென்னை அணி எடுத்தது. இதனை அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதாராபாத் அணி விளையாடியது.

நேற்றைய போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி, அம்பயரை கோபமாக முறைத்து பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 19-வது ஓவரை சர்துல் தாக்கூர் வீசினார். 19 வரின் 2-வது பந்தை ரஷித் கான் சந்தித்தார். அவர் அதற்கு முந்தைய ஓவரில் நல்ல அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தார். அதனால் அவர் விளாசி விடுவார் என்பதற்காக பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அகலமாக வீசினார் தாக்கூர். அந்த பந்து வைடு என்பதுபோல தெரிந்தது. அதற்கு முன்பாக ஒரு பந்தையும் அவ்வாறுதான் அவர் வீசி நடுவர் வைடு கொடுத்திருந்தார்.

இதனை அடுத்து இந்த பந்துக்கும் நடுவர் திரும்பி கையை அகலமாக விரித்து வைடு என சொல்வதற்கு முயற்சி செய்தார். தோனி முறைத்தபடியே அம்பயரை பார்த்து செய்கை காட்டி சொன்னார். இதைப்பார்த்த அம்பயர் குழம்பிவிட்டார், பின்னர் கையை அப்படியே கீழே இறக்கி திரும்பிவிட்டார். இதை வெளியே உட்கார்ந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கோபமாகி ஆகிவிட்டார். இந்த செயல் அரங்கைத்தையே அதிரவைத்தது.

ABD அடித்த பந்து.., கையில் எடுத்து போஸ் கொடுத்த சிறுவனுக்கு வந்த மெசேஜ்

Quick Share

நேற்று பெங்களூரு அணி மற்றும் கொல்கத்தா அணி விளையாடின இந்த போட்டியில் பெங்களூர் அணி வீரரான Mr. ‘360’ எனப்படும் டிவில்லியர்ஸ், பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டார்.

கட்டுப்படுத்த முடியாமல் பவுலர்கள் திணறினர். ABD சிக்ஸர் மழைகளை அவர் பொழிந்த நிலையில், கொல்கத்தா அணி பந்து வீச்சாளர் நாகர்கோட்டி வீசிய ஒரே ஓவரில் 2 சிக்ஸர்களை அடித்தார். டிவில்லியர்ஸ் அடித்த இந்த 2 சிக்ஸர்களும் மைதானத்தை தாண்டி, வெளியே உள்ள பிராதன சாலை ஒன்றில் சென்று விழுந்தது. அதில் சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது பந்து பட்டது.

மைதானத்திற்கு வெளியே அடித்த 2 பந்துகளில் ஒன்று சிறுவன் ஒருவன் கையில் கிடைத்துள்ளது. அந்த பணத்துடன் சிறுவன் புகைப்படம் வெளியிட வைரல் ஆனது. இந்த போட்டோவை பார்த்து பெங்களூர் அணியும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.

அதில் “அந்த பந்தை சேமிக்கவும், குழந்தை. இது ஒரு நாள் நிறைய மதிப்புக்குரியதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

எத்தனை காயம் எத்தனை சோகம் !! தொரடர்ந்து முன்னிலையில் டெல்லி அணி

Quick Share

2020 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த ஷர்மா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடம் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில், காயம் காரணமாக திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகுவது டெல்லி அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது.

சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். இதுவரை மாற்று வீரர் இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில் தற்போது சீனியர் வீரர் இஷாந்த் ஷர்மாவும் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் விலகுவது டெல்லி அணிக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது.

டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக அடுத்தடுத்து விலகியதால் டெல்லி அணி அதிர்ச்சியில் உள்ளது. ஆனாலும் நிலையாக ஆடிவருகிறது.

கேவலமாக நடந்துகொள்ளும் வடக்கன் நெட்டிசன்ஸ்.., CSK தோல்விக்காக தோனியின் 5 வயது குழந்தையை

Quick Share

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அணியின் கேப்டன் தோனியின் 5 வயது குழந்தைக்கு சமூக வலைத்தளங்களில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய கேப்டன் விராட் கோலியின் மோசமான ஆட்டத்தை விமர்சித்த ரசிகர்கள் சிலர் அவரது மனைவியையும் விமர்சனப் படுத்தி இருந்தனர்.

இதுபோன்ற சம்பவங்களுக்கு பலரும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தாலும் தாக்குதல்கள் தொடரவே செய்கின்றன. சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி படு தோல்வியைச் சந்தித்தது. நேற்று நடந்த போட்டியிலும் தோல்வியடைந்தது.

இதற்கு முன்பு ஏற்பட்ட தோல்விக்கு கேதர் ஜாதவ்வின் மோசமான பேட்டிங்கே காரணம் எனச் சில ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். அப்படி சமூக வலைத்தளத்தில் ஆரம்பித்த சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிய விமர்சனம் இறுதியில் 5 வயது குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடும் நிலைக்கு வளர்ந்தும் இருக்கிறது. CSKகேப்டன் தோனியின் 5 வயது மகள் ஷிவா மற்றும் கேதர் ஜாதவ்வின் ஒரு மகள் ஆகிய இருவருக்கும் பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் அளவிற்கு மீம்ஸ்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு இருக்கிறது. இந்தப் பதிவிற்கு பல ரசிகர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து இருக்கின்றனர்.

தோல்விக்காக தோனியின் குடும்பத்தை விமர்சிப்பதும் அவரது மகள் ஷிவாவுக்கு சோசியல் மீடியாவில் பாலியல் மிரட்டல் விடுப்பதும் போன்ற கொடுமையான செயல்களில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது.

CSK அணியில் என்ன தான் பிரச்சனையா ?? எதை மூடி மறைக்கிறார்கள் ?

Quick Share

2020 IPL தொடங்கும் முன்னரே சென்னை அணியின் நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

சென்னை அணி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய போதும், அதன்பிறகு தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதுவரை 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே சென்னை அணி வெற்றி கண்டுள்ள நிலையில், மீதமுள்ள 8 போட்டிகளில் 6 போட்டிகளிலாவது வென்று ஆக வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.

தற்போது வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நெகிடி (Lungi Ngidi), தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

அதில், ‘என்னை சுற்றி பல மோசமான விசயங்கள் உள்ளது’ என குறிப்பிட்டிருந்தார். இது சென்னை அணியை மறைமுகமாக கூறியதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்த நிலையில், அதனை உறுதியாக்கும் வகையில் செயல் ஒன்றையும் லுங்கி நெகிடி செய்துள்ளார்.

நெகிடியின் பதிவின் கீழ் ரசிகர் ஒருவர், ‘நீங்கள் வேறு ஐபிஎல் அணிக்கு தகுதியானவர்’ என கமெண்ட் செய்திருந்தார். அதற்கு நெகிடியும் லைக் செய்துள்ளார்.

CSK அணிக்குள் என்ன குழப்பம் நீடித்து வருகிறது என்பது ரசிகர்களுக்கு மிகப் பெரிய புதிராக உள்ள நிலையில், தற்போது நெகிடியின் இந்த செயலும் ரசிகர்களிடம் இன்னும் கேள்வியை அதிகப்படுத்தியுள்ளது.

IPL போட்டிகளில் இந்திய சீனியர் வீரரை வீட்டுக்கு அனுப்பிய ஸ்மித் !! காரணம் என்ன தெரியுமா ?

Quick Share

ஐபிஎல் தொடரின் 21 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 44 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி என 70 ரன்களையும், ஜோப்ரா ஆர்ச்சர் 24 ரன்களும் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் 20 ரன்களை கூட அடிக்கவில்லை.

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியுற்றதால் மூன்றாவது போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப ஸ்மித் திட்டமிட்டு இருந்தார். ஆனால் நேற்றைய போட்டியிலும் ராஜஸ்தான் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக படு மோசமான தோல்வியை ராஜஸ்தான் சந்தித்தது. ராஜஸ்தான் அணியிலிருந்து முன்னணி இந்திய சீனியர் வீரர் ராபின் உத்தப்பா நேற்றைய போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான பார்ம்மை தொடர்ந்த உத்தப்பாவை கொல்கத்தா அணி நிர்வாகம் கழட்டிவிட்டது.

அனுபவ வீரர் என்ற காரணத்தினால் அவர் மீது நம்பிக்கை வைத்து ராஜஸ்தான் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் தனக்கு கொடுத்த வாய்ப்பை அவர் பயன்படுத்த தவறிய உத்தப்பா முதலிரண்டு போட்டிகளிலும் 5 மற்றும் 9 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். உத்தப்பாவிற்கு பதிலாக உள்ளூர் ராஜஸ்தான் அணியின் கேப்டனான மகிபால் லாம்ரோர் களமிறக்கப்பட்டார்.

மகிபால் லாம்ரோர் தனது சிறப்பான ஆட்டத்தை அளித்து வருவதால் இனி அவரை ராஜஸ்தானில் தொடர்வார் என்றும் இனிமேல் ராபின் உத்தப்பாவிற்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான் என்றும் கூறப்படுகிறது.

சென்னை தோல்விக்கு இவன் தான் காரணம் ‘ரவுண்டு’ கட்டி அடிக்கும் ரசிகர்கள்..!

Quick Share

நேற்று அபு தாபி மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று (07.10.2020) நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் ராகுல் திருப்பாதி 81 ரன்களை எடுத்தார்.

சென்னை அணி 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர் வாட்சன் 50 ரன்களும், அடுத்து வந்த அம்பட்டி ராயுடு 30 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து வந்த கேப்டன் தோனி 11 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து சாம் குர்ரனும் 17 ரன்களில் அவுட்டாக, 129 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை சென்னை அணி இழந்தது. இதனால் 17 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்னை அணி சென்றது. கடுமையான விமரசங்களுக்கு உள்ளன கேதர் ஜாதவ் மற்றும் ஜடேஜா இருவரும் களமிறங்கினர். இதில் கேதர் ஜாதவ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் 12 பந்துகளை எதிர்கொண்டு 7 ரன்களை மட்டுமே எடுத்தார். பந்து பேட்-ல் படவே திணறினார். இறுதி ஓவரில் ஓவரில் 28 ரன்கள் எடுத்தால்தான் வெற்றி என்ற நிலை இருந்தது. அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஜாதவ் அருகில் அடித்துவிட்டு ரன் ஏதும் எடுக்காமல் நின்றது அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில் கடைசி ஓவரில் கேதர் ஜாதவ் தனது பேட்டை மாற்றினார். பின்னர் எத்தனை பீல்டர்கள் நிற்கின்றனர் என எண்ணினார். இதனை ரசிகர்கள் மீம்ஸ்கள் மூலம் கிண்டல் செய்து வருகின்றனர்.

மோசமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தும் கேதார் ஜாதவ் ஏன் தோனி வைத்துள்ளார் என்ற கேள்வி மற்றும் விமர்சனங்கள் வலுவாகியுள்ளது. மேலும் இப்படி விளையாடினால் CSK எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை அணி முட்டாள்களாகி இருக்கிறார்கள் !! கடுமையான விமர்சனம் செய்த சேவாக்

Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக், சென்னை அணியை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், ‘இந்த போட்டி தோனியின் மூளைக்கும், வார்னரின் பலத்துக்கும் இடையே நடந்தது. ஆனால் ஹைதராபாத் அணி வெறும் பலத்தை வைத்து சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. ஹைதராபாத் அணியின் முதல் நான்கு வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியதும், அடுத்து வந்த இரண்டு சின்ன பசங்க என்ன செய்துவிடுவார்கள் என சிஎஸ்கேவின் சீனியர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் அந்த சிறுவர்கள்தான் சிஎஸ்கே அணியை அடித்து வீழ்த்தினார்கள்.

சென்னை அணி கூலான அணுகுமுறைக்கு பெயர் போனது. ஆனால் அவர்கள் தங்களின் திட்டத்தில் தாங்களே மாட்டிக்கொண்டு முட்டாள்களாகி இருக்கிறார்கள். இந்த போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றதா? அல்லது சிஎஸ்கே வலைப்பயிற்சி செய்ததா?’ என சென்னை அணியை கடுமையான விமர்சனம் செய்துள்ளார். சிஎஸ்கே வீரர்களை ‘மூட்டாள்கள்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி சேவாக் விமர்சனம் செய்தது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியது.

ஆனால் கடந்த போட்டியில் சேவாக்கின் வார்த்தைகளை உடைதெரிந்துவிட்டனர். டுப்லெஸி – வாட்சன் ஜோடி பஞ்சாப் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை ஆடி வெற்றிபெற்றனர். கிளாஸ் மற்றும் மாஸ் கலந்த அணி இதுதான் என சென்னை வீரார்கள் நிலைநிறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL சொதப்பல் நாயகனாய் விராட் கோலி.., சந்தோஷமா கொண்டாட முடியலையே ?

Quick Share

நேற்று 2020 IPL தொடரின் 19-வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி சேசிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை எடுத்தது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா 42 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 53 ரன்களும், ரிஷப் பந்த் 37 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த போட்டியில் விராட் கோலி அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் டி20 போட்டியில் 9000 ரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

சாதனை ஒருபக்கம் இருந்தாலும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது கோலியின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோலி தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானது தோல்விக்கு ஒரு காரணமென கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சாதனையை கூட கொண்டாட முடியாமல் போனது அவரின் ரசிகர்களுக்கு வேதனையளிக்கிறது.

சீனியர் சீனியர் தான் !! வெறித்தன ஆட்டத்தில் வாட்சன், டுப்லெஸி கொடுத்த பூஸ்ட்

Quick Share

2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது. சென்னை அணியின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள் ஆனது.

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 179 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி எதுவும் இழக்காமல் ஷேன் வாட்சன் மற்றும் டு பிளஸி ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர். விமர்சனங்களை அனைத்தையும் தவிடுபொடி ஆக்கும் வகையில், வாட்சன் மற்றும் டு பிளஸி ஆகியோர் அரை சதத்தை கடந்து அசத்தலாக ஆடி வருகின்றனர்.

இந்நிலையில் ஷேன் வாட்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று, ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பான ஆட்டம் விரைவில் வரவுள்ளது’ என பதிவிட்டிருந்தார். அதேபோல் மைதானத்திலும் அடித்து துவம்சம் செய்துள்ளார்.

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை பார்முக்கு வராமல் இருந்து வந்த வாட்சன், இன்றைய போட்டியில் தான் நேற்று சொன்னதை போலவே பழைய பார்முக்கு வந்து சிஎஸ்கே ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வாட்சனை பாராட்டி பல மீம்ஸ்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். டுப்லெஸி 53 பந்துகளில் 87 ரன் வாட்சன் 53 பந்துகளில் 83 ரன் குவித்து விக்கெட் ஏதும் இழக்காமல் வெற்றி பெற்றனர். மேலும் அதிக பட்ச பார்ட்னெர்ஷிப் சென்னை அணிக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை இனிமேல் எப்படி சமாளிக்க போறார் கேப்டன் தோனி ? குழப்பத்தில் ரசிகர்கள்

Quick Share

2020 ஐபிஎல் தொடர் தொடங்கியதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது. முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியை சென்னை அணி வீழ்த்தி இருந்தாலும் தொடர்ந்து ஹாட்ரிக் தோல்வி அடைந்து தற்போது புள்ளிப் பட்டியலில் அதலபாதாளத்தில் உள்ளது.

முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் விலகியது தொடர் தோல்வி காரணமாக பார்க்கப்படுகிறது.
2 போட்டிகளில் விளையாடாத ராயுடுவும் அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார். ராயுடு மற்றும் பிராவோ ஆகியோர் கடந்த போட்டியில் மீண்டும் அணியில் இணைந்து அணிக்கு பலமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஏற்கனவே கடந்த போட்டியின் தோல்விக்குப் பிறகு சென்னை அணியில் கேதார் ஜாதவ் அணியில் இடம் பெறக்கூடாது என்றும் அவருக்கு பதிலாக இளம் வீரர்கள் யாருக்காவது வாய்ப்பு அளிக்கலாம் என்று சி. ரசிகர்கள் கேதார் ஜாதாவிற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர்

ஜாதவ் விளையாடிய 16 போட்டிகளில் ஒரு முறை கூட 30 ரன்களை தாண்ட வில்லை என்ற காரணத்தையும் கூறி அவரை அணியில் சேர்க்க வேண்டாம் என்று வெளிப்படையாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது துவங்கியுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் மீண்டும் ஜாதவை தோனி அணியில் இணைத்துள்ளது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. அடுத்த முறை தோனி தேர்வு செய்யும் அணியில் இடம்பெறுவாரா என்பது சந்தேகம் தான்.

கடைசிவரை கேப்டனை அலறவிட்ட KKR வீரர் யார்.., போராடி பெற்ற வெற்றி

Quick Share

நேற்று அக்டோபர் 3ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான 16-வது லீக் IPL போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 88 ரன்களும் ப்ரித்வி ஷா 66 ரன்களும் எடுத்தனர்.

229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 210 ரன்கள் மட்டுமே அடித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 122 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்த கொல்கத்தா அணியை அயன் மோர்கன் – ராகுல் திருப்பதி கூட்டணி அதிரடியாக விளையாடி மீட்டது.

டெல்லி அணி வீரர் ரபாடா வீசிய ஒரு ஓவரில் மோர்கன் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அதிரடி காட்டினார். இதனால் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வியர்த்து விறுவிறுத்துப்போனார். இதனை அடுத்து 18 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து மோர்கன் அவுட்டானார். இதனைத் தொடர்ந்து ராகுல் திருப்பதியும் (16 பந்துகளில் 36 ரன்கள்) போல்ட்டாகி வெளியேறினார். இவர்கள் இருவரின் அதிரடி ஆட்டத்தால் 200 ரன்களை கொல்கத்தா கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் கொல்கத்தாவால் வெற்றிகரமாக இன்னிங்ஸ் முடிக்க முடியவில்லை. மோர்கன் ஆட்டம் டெல்லி அணியின் கேப்டன் ஷேரேயஸ் ஐயர்ரை கதறவிட்டது எனபதில் ஐயமில்லை.




You cannot copy content of this Website