விளையாட்டு

காதலி நடாசாவுடன் ஹோலி கலர் பூசி ஹோலி கொண்டாடிய ஹர்திக் பாண்டியா !

Quick Share

அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் தனது காதலை பற்றி அறிவித்தார். துபாயில் காதலலர் தினத்தன்று தனது காதலி கையில் மோதிரம் போட்டு அசத்தினார். தற்போது கிரிக்கெட் கவனம் செலுத்தி வருகிறார்.

நேற்று ஹோலி பண்டிகையை தன்னுடைய காதலி நடாசாவுடன் கொண்டாடினர். மேலும் அந்த புகைப்படங்களை பகிர்ந்தார். “பாண்டியாசிடம் இருந்து மகிழ்ச்சியான விடுமுறை நாட்கள் #Holi hai,” என குறிப்பிட்டு சமூகவலைத்தளங்களில் போஸ்ட் செய்தார்.

ஹோலி பண்டிகையை தன் காதலி நடாசாவுடன் மற்றும் சகோதரர் க்ருணால் பாண்டியா மற்றும் அவரது மனைவியுடன் கொண்டாடியுள்ளனர். ஐந்து மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா, ஞாயிற்றுக்கிழமை இந்திய அணிக்குள் இணைந்தார். உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக 20 சிக்ஸர் அடித்து நான் ரெடி என்ற அளவுக்கு ஆட்டத்தில் அதிரடி காட்டினார் பாண்டியா. கிரிக்கெட், காதல் வாழ்க்கை என இரண்டிலும் போர்மில் உள்ளார் என்பதை ரசிகர்களுக்கு நினைவூட்டியுள்ளார்.

தோனியை மீம்-ல் கலாய்க்கும் ஜோடி…, என்ன செய்தார் என்று நீங்களே பாருங்கள் !!

Quick Share

2020-க்கான IPL போட்டிகள் மார்ச் மதம் 29ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக விளையாடும் அணைத்து வீரர்கள் தங்கள் ஹோம் கிரவுண்டில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சம்பத்தில் சென்னை வந்த நம்ம தல தோனி பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். இதுவரை மூன்று முறை IPL கோப்பையை வென்றுள்ள தோனி தலைமையிலான சென்னை அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

தற்போது IPL விளம்பரத்திற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒரு விளம்பர படத்தை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தல தோனி தனது எதிர்ப்பாளர்களை சமநிலையுடன் எதிர்கொள்கிறார் என்பது விடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில், தோனி பற்றி மீம்-ஐ விமானத்தில் செல்லும் ஒரு ஜோடி படித்து கிண்டல் செய்கின்றனர். அதை தோனி பக்கத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து பார்க்கிறார். அதை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல், தோனி ஹெட்போன்ஸ் மாட்டிக்கொள்கிறார்.

தனது கேப்டன் கூல் என்ற தகுதியை இன்றுவரை கடைபிடித்திருக்கும் தோனியின் இந்த விளைபரத்தை அவரின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மூச்சு விடாமல் பாட்டு பாடி அசத்திய சச்சின் டெண்டுல்கர்….சக வீரர்களின் பெயர்களை வர...

Quick Share

தந்து 100MB ஆப்-ற்காகவிளம்பர பாடல் பாடியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவிவருகிறது.

இந்தியக் கிரிக்கெட் உலகின் கடவுளாகவே கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கி இதுவரை 31 ஆண்டுகள் ஆகிறது. இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகள் ஏராளம், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் எடுத்த ரன்கள் 34357, சதங்கள் 100. டெஸ்ட் வரலாற்றில் சச்சின் அதிகப்பட்ச ரன்கள் 15921, அதிகப்பட்ச சதங்கள் 51.

தற்போது கிரிக்கெட் சூப்பர் சீரிஸ் மூலம் களத்தில் மீண்டும் இறங்கி அசத்தலாக அதே உத்வேகத்துடன் ஆடிவருகிறார். தற்போது சச்சின் தனது 100MB என்னும் சமூக வலைதள ஆப் ஒன்றிக்காக ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டுவருகிறார். இந்த ஆப் கிரிக்கெட் உலகில் நடக்கும் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள 100 MB ஆப் வழிவகுக்கிறது.

இதற்காக விளம்பர பாடலை பாடி சச்சின் அசத்தியுள்ளார். பாடல் வரிகளில் பேட்டிங் முறைகள், கிரிக்கெட் ஸ்டைல், மற்றும் தந்து சக வீரர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார் அசாருதீன், கங்குலி, டிராவிட், தோனி போன்ற பல வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த சச்சின் ரசிகர்கள் அவரது படும் திறனை பாராட்டியுள்ளனர்.

ஓவர் பில்ட்-அப், வீனா போனது.. மகளிர் T20 உலக உலக கோப்பையில் கோட்டைவிட்ட இந்திய அணி !!

Quick Share

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான T20 உலக கோப்பை போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்னில் இன்று நடைபெற்றது. 5 வது மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிகெட் இறுதி போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்திருந்தது.
ஸ்திரேலிய அணியில் பெத் மூனி 78 ரன்களும், ஹீலி 75 ரன்களையும் குவித்திருந்தனர்.

இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணிக்கு 185 ரன்கள் இலக்காக இருந்தது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு இந்திய அணி வீராங்கனைகள் திணறினர். 19.1 ஓவரில் 99 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா படு தோல்வியடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 33 ரன்களையும், வேதா 19 ரன்களையும், ரிச்சா கோஷ் 18 ரன்களையும் மட்டுமே குவித்திருந்தனர்.

ஆஸ்திரேலியா அணியில் பந்துவீச்சில் அதிகபட்சமாக மேகன் ஷாட் 4 விக்கெட்டுகளையும், ஜெஸ் ஜொனாசென் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும், பூனம், மற்றும் ராதா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த தோல்வி பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அணியில் ஹார்மேன்ப்ரீட் கவுர், ஸ்ம்ரிதி மந்தனா, ஷெபாலி போன்றவர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

ISL கால்பந்து: சென்னை அணி அபார ஆட்டம், கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது...

Quick Share

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் சுற்று முடிவில் எப்.சி.கோவா, அட்லெடிகோ டி கொல்கத்தா, நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., சென்னையின் எப்.சி. ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. 
ஒவ்வொரு அரையிறுதியும் இரண்டு ஆட்டங்கள் கொண்டதாகும். சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி நடந்த அரையிறுதி முதல் சுற்று ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி 4-1 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவாவை தோற்கடித்து லீக் ஆட்டங்களில் சந்தித்த தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், கோவாவில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டத்தில் எப்.சி.கோவா-சென்னையின் எப்.சி. அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்தின.

தொடக்கத்தில் இருந்தே கோவா அணி ஆக்ரோஷமாக விளையாடியது. அந்த அணி 10, 21 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தது. இதனால் முதல் பாதி முடிவில் கோவா அணி 2-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் சென்னை அணியினர் 52, 59வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பாக சென்றது.தொடர்ந்து, 81, 83வது நிமிடங்களில் கோவா அணியின்ர் தலா ஒரு கோல் அடித்தனர். 

இறுதியில், கோவா அணி மொத்தம் 4 கோல்களும், சென்னை அணி 2 கோல்களும் அடித்தது. முதல் அரையிறுதியில் சென்னை அணி 4 கோல்களும், கோவா அணி ஒரு கோலும் அடித்திருந்தது. 
இதையடுத்து, இரு ஆட்டங்களிலும் சேர்த்து சென்னை அணி 6-5 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அவங்க பார்த்துப்பாங்க…!! பொண்டாட்டி விளையாடுவதை காண பறந்து சென்ற ஆஸ்திரேலியா வேக ...

Quick Share

ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வேக பந்து வீச்சாளராக கருதப்படும் மிட்செல் ஸ்டார்க், தென்னாப்பிரிகா சுற்றுப்பயணத்திலிருந்து நடுவில் ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார்.

டி20 உலக மகளிர் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடும் தன் மனைவி அலிஸா ஹீலியின் ஆட்டத்தைக் காணவுள்ளார்.

அலிஸா ஹீலி சொந்த மண்ணில் உலகக் கோப்பை இறுதியில் போட்டியில் விளையாடுவதைக் காணுவது வாழ்நாள் வாய்ப்பு என பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறினார். “எனவே, அவரது மனைவியை ஆதரிப்பதற்காகவும், ஒரு அருமையான சந்தர்ப்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காகவும் அவர் வீடு திரும்புவதை அனுமதித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்”

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணியை MCG மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவுள்ளது. இதில், ஆஸ்திரேலிய அணிக்கு விக்கெட் கீப்பர்- பேட்ஸ்வுமெனான ஹீலியின் பங்கு மிக முக்கியமானது. ஏற்கனவே ஆஸ்திரேலியா ஆண்கள் அணியில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் ஸ்டார்க் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டமிட்டபடி தொடங்கும்…கொரோனா அச்சத்தையும் மீறி இந்தியா வருகிறது தென்னாப்பிரிக்க...

Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சம் நாடு முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் திட்டமிட்டபடி விளையாடும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், CSA தலைமை மருத்துவ அதிகாரி Dr.ஷூயிப் மஞ்ச்ராவும் வருகிறார்.

மார்ச் 12ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் 1.30 மணிக்கு போட்டிகள் துவங்குகின்றன. நாளை திட்டமிட்டபடியே ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்க அணி இந்தியா வருகிறது. தென்னாபிரிக்கா பாதுகாப்பு குறித்த அறிக்கையில், “வீரர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மற்றும் கவனிப்பின் கடமையை உறுதி செய்வதற்காக CSA (கிரிக்கெட் சவுத் ஆப்பிரிக்கா) முறையான பணியில் ஈடுபட்டுள்ளது” தெரிவித்தது.

உலக சுகாதார அமைப்பு உட்பட பல்வேறு சர்வதேச பாதுகாப்பு நிபுணர்களின் தகவல்களைப் பயன்படுத்தியதாகவும், இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்தியாவில் உள்ள தென்னாப்பிரிக்கத் தூதரகம் ஆகியவற்றுடன் பேசியதாக CSA தெரிவித்துள்ளது. துபாய் வழியாக இந்தியாவுக்குச் சென்று டெல்லியில் தரையிறங்கி. பின்பு தர்மசாலா, லக்னோ மற்றும் கொல்கத்தாவில் விளையாடுவார்கள்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட டென்னிஸ் ஜாம்பவானின் உருக்கமான பதிவு !!

Quick Share

டென்னிஸ் வரலாற்றில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் ரோஜர் பெடெரெர். பல வருடங்கள் அசைக்கமுடியாத வீரராக இருந்தார். இன்றுவரை அவருக்கு இந்தியாவில் சச்சின் அளவிற்கு டென்னிஸ் உலகில் பிரபலமானவர். அவர் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் புதன்கிழமை சுவிட்சர்லாந்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், மே 24 முதல் ஜூன் 7 வரையிலான பிரெஞ்சு ஓபன் போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவித்தார்.

38 வயதான வயதாகும் அவருக்கு பலமுறை காயம் ஏற்பட்டுள்ளது. முடிந்தால் அறுவை சிகிச்சையைத் தவிர்க்க விரும்புவதாக அவர் கூறினார். ஆனால் முழங்கால் பிரச்சினை நீங்கவில்லை எனவே அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கூறினார். ஒரு கட்டத்தில் சிரியாகிவிடும் என்று நான் நம்பினேன், ஆனால் எனது குழுவுடன் ஒரு பரிசோதனை மற்றும் கலந்துரையாடலுக்குப் சுவிட்சர்லாந்தில் ஆர்த்ரோஸ்கோபிக் முறை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தேன்.”

இது சரியான முடிவு என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள் மேலும் முழுமையாக குணமடைவேன் என தெரிவித்தார்” என்றார்.

சென்னை அணியில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்: யார் அவர்? எவ்வளவு விலை தெரியுமா?

Quick Share

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் டோனிக்கு பந்து வீசிய தமிழக வீரர் சாய் கிஷோரை சென்னை அணி வாங்கியுள்ளதால், அது குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று கொல்கத்தாவில் ஆரம்பித்தது.

இதில் அணி நிர்வாகம் குறிப்பிட்ட வீரர்களை தக்க வைத்து மற்ற வீரர்களை கழற்றிவிட்ட நிலையில், அந்த வீரர்களுக்கும், ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்களுக்கும் ஏலம் நடைபெற்றது.

அதன் படி சென்னை அணி யாரும் எதிர்பார்த வகையில், சாய் கிஷோரை அவருடைய அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது.

இந்நிலையில் அவர் யார் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சாய்கிஷோர் தமிழகத்தை சேர்ந்தவராம், 23 வயதாகும் இவர் தமிழக அணிக்காக விஜய் ஹசாரே டிராபி மற்றும் சையத் முஷ்டாக் தொடரில் விளையாடியுள்ளார்.

அதுமட்டுமின்றி, கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சாய் கிஷோர் டோனிக்கு பந்து வீசியுள்ளார்.

இவரின் பந்து வீச்சைக் கண்ட டோனி அவரை வெகுவாக பாராட்டினார். இதையடுத்து தான் தற்போது சாய்கிஷோரை சென்னை அணி மறக்காமல் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் சாய்கிஷோர் சென்னை அணிக்காக நான் வாங்கப்பட்டது, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், நிச்சயமாக என்னுடைய திறமையை நிரூபிப்பேன் என்றும் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.


போலி பாஸ்போர்ட் -கால்பந்து ஜாம்பவானான ரொனால்டினோ கைது

Quick Share

பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரரான ரொனால்டினோ, தொண்டு நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது சகோதரருடன் பராகுவே நாட்டுக்குச் சென்று ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.

அப்போது அங்கு போலீசார் ரொனால்டினோவிடம் நடத்திய சோதனையில், அவர் பராகுவே நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது. பாஸ்போர்ட்டில் ரொனால்டினோ டி ஆஸ்சிஸ் மொரைரா என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நானே இன்னும் முழுசா பார்க்கல… டேய் ஜாண்டி என்னையும் கூட்டிட்டு போ – பஜ்ஜியி...

Quick Share

முன்னாள் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ் சம்பத்தில் ரிஷிகேஷில், கங்கை நதியில் நீராடினார்.
அவர் நீராடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதை பார்த்த ஹர்பஜன் சிங், ஜாண்டி ரோட்ஸிடம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். “நண்பா, என்னை விட இந்தியாவை நீங்கள் அதிகம் பார்த்துள்ளீர்கள்..நீங்கள் கங்கையில் நீராடுவதையும், நேரம் செலவழிப்பதையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்,” என்று ஹர்பஜன் ட்விட் செய்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 13 வது பதிப்பு மார்ச் 29 ஆம் தேதி ஜாண்டி ரோட்ஸ் இந்தியா வந்துள்ளார். ஐபிஎல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக உள்ளார் ஏந்திபாது குறிப்பிடத்தக்கது.
ஜாண்டி ரோட்ஸ் 2016ம் ஆண்டு பிறந்த தனது மகளுக்கு, இந்தியா ஜீன் ரோட்ஸ் என்று பெயரிட்டார். அதோடு இந்தியாவுடன் ஒரு சிறப்பு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

“இந்தியா போன்ற பெயருடன், என் மகள் உலகத்தில் சிறந்த மற்றும் பலவகையான சமநிலையைப் பெறுவார்,” என்று கூறி அசத்தியுள்ளார். ஹர்பஜன் சிங் கொடுத்த இந்த கமென்டிற்கு பல லைக் வந்துள்ளது.

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் தெரி...

Quick Share

டி20 மகளிர் உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. ICC பவுண்டரி விதி படி இந்தியா வெற்றிபெற்றது என போட்டி நடுவர்கள் அறிவித்தனர்.

இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. குரூப் போட்டிகளில் நான்கு போட்டிகளிலும் இந்திய அணி வென்றது. இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள பெண்கள் இந்திய அணிக்கு பல கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்

இந்திய ஆண்கள் அணியின் கேப்டன் கோலி இறுதிப் போட்டிக்கு செல்லும் மகளிர் அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். “டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தேர்வுபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். உங்களுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இறுதிப் போட்டிக்கு என் வாழ்த்துக்கள்.” என்று கோலி ட்விட் செய்துள்ளார். KL ராகுல், தவான், முன்னாள் வீரர் லட்சுமண், டிராவிட் போன்றவைகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.




You cannot copy content of this Website