விளையாட்டு

தன் மகளுக்கு 5வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக்களை சொல்லி புகைப்படத்தை வெளியிட தோனி ...

Quick Share

தோனி சில தினங்களுக்கு தனது மனைவியோடு மாலைதீவுக்கு விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ளார். இன்று பிப்ரவரி 6 ஆம் தேதி தன்னுடைய மகளின் பிறந்தநாளுக்காக வாழ்த்துக்களை தெரிவித்து குடும்பத்தோடு இருக்கும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் சாக்ஷி தோனி. தோனியின் சக கிரிக்கெட் வீரர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்று ஸிவா தோனிக்கு 5 வது பிறந்தநாள் என்பதால் சமூக வலைத்தளங்களில் தோனி – சாக்ஷி தபதியரின் குழந்தைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. எப்போதும் தன்னுடைய மகளுடன் காணப்படும் தோனி மகள் தந்தை பாசத்தை அடிக்கடி புகைப்படம் மற்றும் விடீயோக்கள் மூலம் வெளிப்படுகின்றது.

என் வாழ்வில் என்னுடைய மகள் பிறந்தபின் கிரிக்கெட் வாழ்க்கையில் மற்றம் இருந்ததா என்பது தெரியல, ஆனால் ஒரு மனிதனாகவும் தந்தையாகவும் நிறைய மற்றம் என்னுள் நடத்திருக்கிறது என பெருமையாக கூறினார். எப்போதும் IPL போட்டிகளில் விளையாடும் தோனியை, மனைவியும் மகளும் உற்சாகப்படுத்துவார்கள். ஆகவே இந்த வருடமும் சென்னை அணிக்காக IPL போட்டியில் இருவரும் தோனியை உற்சாகப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NZvsIND 1வது ODI: ஷ்ரேயஸ் ஐயர் 103, KL ராகுல் 88* அசத்தல் ஆட்டம்., நியூஸிலாந்திற்கு 348...

Quick Share

இந்தியா – நியூஸிலாந்து இடையே முதல் ODI இன்று ஹாமில்டனில் உள்ள செல்டன் பார்க் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க அட்டகாரகள் பிருதிவி ஷா 20, மாயணக் அகரகவால் 32 ரன் எடுத்து வெளியேறினார்.பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி சிறப்பாக விளையாடினார்கள். விராட் கோலி 51 ரன் எடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் KL ராகுல் அதிரடியாக விளையாடினர். ஷ்ரேயஸ் ஐயர் 107 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்து 103 ரன் எடுத்து வெளியேறினார்.

KL ராகுல் 64 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்ஸர் 88* ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கெதர் ஜாதவ் 15 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்து 26* எடுத்தார். நியூஸிலாந்து அணியில் டிம் சௌதீ 10 ஓவரில் 85 ரன் எடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். கொலின் டே கிறந்தோமே மற்றும் இஷ் சோதி தல 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன் எடுத்தது.

இன்னிக்ஸ் இடைவெளிக்கு பின் நியூஸிலாந்து 348 என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது. துவக்க அட்டகாரகள் மார்ட்டின் குப்தில், ஹென்றி நிக்கோலஸ் ஆடிவருகின்றனர்.

நியூஸிலாந்திற்கு எதிராக நடக்கும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையா...

Quick Share

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் நியூஸிலாந்தை வென்றது. தற்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடமாட்டார் என இந்திய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 5 வது T20 போட்டியில் சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 41 பந்துகளில் 60 ரன் எடுத்திருந்தபோது அவருக்கு எதிர்பாராத விதமாக காலில் காயம் ஏற்பட்டது இதனால் அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார்.

ரோஹித் சர்மா பதிலாக மாயணக் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா இடத்தை மாயணக் அகர்வால் இடுகாட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்திய அணியில் ஒருநாள் தொடருக்காக திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர் என தெரிவித்தார். தற்போது இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

110 ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் T20 போட்டி !! சச்சின், ஷேவாக், பிரெ...

Quick Share

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் T 20 சூப்பர் சீரிஸ் என்னும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேகின்றனர். நேற்று பிப்ரவரி 2 தேதி தொடங்கிய இப்போட்டிகள் 16ம் தேதி வரையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. மேலும் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுகாக இந்த போட்டி இனி வருட வருடம் நடைபெறும். மும்பை மட்டும் புனேவில் இந்த போட்டிகள் நடைபெறும்.

தற்போது 2020ஆம் ஆண்டு சூப்பர் செரிஸ் போட்டித் தொடரின் முதலாவது சீசனில் இந்தியக் கிரிக்கெட்டின் பெரும் ஜாம்பவான்கள் பங்கேற்கவுள்ளனர். சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் (இந்தியா), சாஹீர் கான், அஜித் அகர்கர். பிரையன் லாரா, சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்), பிரெட்லீ (ஆஸ்திரேலியா), ஜான்டி ரோட்ஸ் (தென்ஆப்பிரிக்கா), தில்ஷன், முத்தையா முரளிதரன் (இலங்கை) உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். மேலும் போட்டிகள் ஒளிபரப்பும் உரிமையை viacom18 என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்த போட்டிகளை voot, Jio டிஜிட்டல் போன்றவற்றில் நேரடியாக காணலாம். போட்டிக்கான முழு விவரத்தை கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இதுக்கு தானே என்னை வீடியோ எடுக்குற”, மனைவி சாக்ஷியை கிண்டல் செய்த தோனி !!

Quick Share

தோனி தனது மனைவியை கலாய்க்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மனைவி சாக்ஷி எடுக்கும் வீடியோவில் பேசும் தோனி, ‘இன்ஸ்டாகிராம் பலோவ்ர்ஸ் அதிகரிப்பதற்காக என்னை வீடியோ எடுக்கிறாய்.. என்று கலாய்த்து திருடி என கூறினார்..இதை கேட்டு அருகிலிருந்தவர்கள் சிரித்தனர். அதனையும் வீடியோ பதிவு செய்யும் சாக்ஷி, ‘ஸ்வீட்டி!! நான் உன்னில் ஒரு பகுதி. உன்னுடைய ஃபாலோயர்ஸ் என்னையும் விரும்புகின்றனர் என செல்லமாக கூறினார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் “தல” என்பதையும் சுட்டிக்காட்டினார் தோனி.

உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு தோனி எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருந்துவருகிறார். இருப்பினும், அவர் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன. அவருடயை மனைவி சாக்ஷி தோனி இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாவது வழக்கம். சம்பத்தில் பணியில் குடும்பத்தோடு விளையாடிய போட்டோ மற்றும் விடீயோக்கள் பிரபலமானது. தோனியின் வருகையை அவரது ரசிகர்கள் அவளோடு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

NZvsIND 5வது T20: நியூஸிலாந்திற்கு 164 என்ற இலக்கை நிர்ணயித்தது இந்தியா !!

Quick Share

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான 5 வது T 20 போட்டி இன்று நியூஸிலாந்தில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடந்து வருகின்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. துவக்க ஆட்டக்காரர் ராகுல் சிறப்பாக விளையாடினார் 33 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸர் 45 ரன் குவித்தார். சஞ்சு சாம்சன் 5 ரன்னில் வெளியேறினார். ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி 41 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்ஸர் அடித்து 60 ரன் குவித்தார் பிறகு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார்.

ஷ்ரேயஸ் ஐயர் 33, மனிஷ் பாண்டே 11 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன் எடுத்தது. நியூஸிலாந்து பந்துவீச்சாளர் ஸ்காட் குஃகெளின் 4 ஓவரில் 25 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

164 என்ற இலக்கை நோக்கி நியூஸிலாந்து ஆடிவருகிறது.

NZvsIND 2வது T20: KL ராகுல், ஜடேஜா அசத்தல் ஆட்டம், 7 விக்கெட் வித்தியாத்தில் இந்தியா வெ...

Quick Share

இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிலை. 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. KL ராகுல் ஆட்டநாயகனாக தேர்ந்தேடுக்கப்பட்டார்.

இந்திய – நியூஸிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்தியா அசத்தலாக விளையாடி வெற்றிபெற்றது. இன்று நியூஸிலாந்தில் உள்ள ஆக்லாண்ட் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. நியூஸிலாந்து தரப்பில் துவக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்டில், கோலின் முன்ரோ களமிறங்கினர்.

நியூஸிலாந்து அணி பேட்டிங்கில் அதிக பட்சமாக மார்ட்டின் கப்டில் 20 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸர் அடித்து 33 ரன் அடித்தார். டிம் செய்பெய்ர்ட் 26 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸர் அடித்து 33 ரன் எடுத்தார். இந்திய அணியில் ரென்ற ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, சிவம் துபே, ஸ்ருடுல் தாகூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.
20 ஓவர் முடிவில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்தது.

133 என்ற எளிதான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 17.3 ஓவரில் 135 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. KL ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் அபாரமாக விளையாடினர். KL ராகுல் 50 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸர் அடித்து 57* ரன் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார், ஷ்ரேயஸ் ஐயர் 33 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸர் அடித்து 44 ரன் குவித்தார். இந்தியா, நியூஸிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டி கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

NZvsIND 2வது T20: சொந்த மண்ணிலேயே 132 ரன்னில் நியூஸிலாந்தை சுருக்கிய இந்தியா !!

Quick Share

20 ஓவர் முடிவில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்தது.

இந்திய – நியூஸிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்தியா அசத்தலாக விளையாடி வெற்றிபெற்றது. இன்று நியூஸிலாந்தில் உள்ள ஆக்லாண்ட் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. நியூஸிலாந்து தரப்பில் துவக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்டில், கோலின் முன்ரோ களமிறங்கினர்.

சுமாரான துவக்கத்துடன் ஆட்டத்தை தொடங்கிய நிஸிலாந்து வீரர்கள் முதல் விக்கெட்டில் 30 ரன்னில் மார்ட்டின் கப்டில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்கள் பந்தில் திணறினார்கள். அணியின் முக்கிய வீரர்கள் கொலின் முன்ரோ 26, கேன் வில்லியம்சன் 14 , ரேஸ் டெய்லர் 18 ரன்னில் வெளியேறினார்கள். நியூஸிலாந்து அணியில் அதிக பட்சமாக மார்ட்டின் கப்டில் 20 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸர் அடித்து 33 ரன் அடித்தார். டிம் செய்பெய்ர்ட் 26 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸர் அடித்து 33 ரன் எடுத்தார். இந்திய அணியில் ரென்ற ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, சிவம் துபே, ஸ்ருடுல் தாகூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.

20 ஓவர் முடிவில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்தது.

133 என்ற இலக்கை நோக்கி ஆடிவரும் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 8 ரன்னில் வெளியேறினார். இந்தியா 5 ஓவரில் 1 இழப்பிற்கு 39 ரன் எடுத்து ஆடிவருகிறது.

NZvsIND 2வது T20: டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது !!

Quick Share

இந்திய – நியூஸிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்தியா அசத்தலாக விளையாடி வெற்றிபெற்றது. இன்று நியூஸிலாந்தில் உள்ள ஆக்லாண்ட் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. பேட்டிங் பிட்ச் என்பதால் முதலில் பேட்டிங் செய்பவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்பதால் நியூஸிலாந்து பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது.

இந்திய அணியில் வீரர்களில் எந்த மாற்றமும் இன்றி முதல் போட்டியில் இருந்த அதே வீரர்கள் இந்த போட்டியில் விளையாடுகிறார்கள். நியூஸிலாந்து அணியிலும் எந்த மாற்றமும் இன்றி களமிறங்குகிறார்கள். இந்திய அணியில் பவுலிங்கை பலப்படுத்தப்பட்டுள்ளது என அணியின் பயிற்சியாளர்கள் தெரிவித்தார்கள்.சிறிய மைதானம் என்பதால் ரன் அதிகம் போகும் வாய்ப்புள்ளது.

நியூஸிலாந்து தரப்பில் துவக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்டில், கோலின் முன்ரோ களமிறங்கியுள்ளனர்.

NZvsIND 1st T20: 29 பந்துகளில் 58* ரன் எடுத்து அதிரடியாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டநாய...

Quick Share

29 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸர் என அதிரடியாக விளையாடி 58* குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான 5 T20 போட்டிகள் கொண்ட தொடர் நியூஸிலாந்தில் நடந்துவருகிறது. இன்று முதலாவது போட்டி ஆக்க்லாண்ட்-ல் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி நியூஸிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. சிறப்பாக ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன் குவித்தது. அசத்தலாக ஆடிய கோலின் முன்றொ, கேப்டன் கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர் ஆகியோர் அசத்தலாக அரை சதம் அடித்தனர்.

204 என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 7 ரன்னில் வெளியேறினார். விராட் கோலி, மற்றும் KL ராகுல் நிலையாக ஆடினார்கள் ராகுல் 24 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸர் அடித்து 56 குவித்தார், கோலி 32 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்து 45 ரன் எடுத்து வெளியேறினர். சிவம் துபே 13 ரன் எடுத்து வெளியேறினார். ஷ்ரேயஸ் ஐயர் – மனிஷ் பாண்டே ஜோடி அசத்தலாக விளையாடி அணியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தனர். அபாரமாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸர் அடித்து 58* ரன் எடுத்தார். மனிஷ் பாண்டே 12 பந்துகளில் 1 சிக்ஸர் அடித்து 14* ரன் எடுத்தார். 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன் எடுத்து வெற்றிபெற்றது. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை தோற்கடித்தது. இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

NZvsIND 1st T20: அபாரமாக விளையாடிய ஷ்ரேயஸ் – மனிஷ் பாண்டே ஜோடி !! 6 விக்கெட் வித...

Quick Share

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான 5 T20 போட்டிகள் கொண்ட தொடர் நியூஸிலாந்தில் நடந்துவருகிறது. இன்று முதலாவது போட்டி ஆக்க்லாண்ட்-ல் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி நியூஸிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. சிறப்பாக ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன் குவித்தது. அசத்தலாக ஆடிய கோலின் முன்றொ, கேப்டன் கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர் ஆகியோர் அசத்தலாக அரை சதம் அடித்தனர்.

204 என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 7 ரன்னில் வெளியேறினார். விராட் கோலி, மற்றும் KL ராகுல் நிலையாக ஆடினார்கள் ராகுல் 24 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸர் அடித்து 56 குவித்தார், கோலி 32 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்து 45 ரன் எடுத்து வெளியேறினர். சிவம் துபே 13 ரன் எடுத்து வெளியேறினார். ஷ்ரேயஸ் ஐயர் – மனிஷ் பாண்டே ஜோடி அசத்தலாக விளையாடி அணியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தனர். அபாரமாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸர் அடித்து 58* ரன் எடுத்தார். மனிஷ் பாண்டே 12 பந்துகளில் 1 சிக்ஸர் அடித்து 14* ரன் எடுத்தார்

19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன் எடுத்து வெற்றிபெற்றது. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை தோற்கடித்தது.

NZvsIND 1வது T20: நிலையான தொடக்கத்தை கொடுத்த இந்தியா !! நடுவில் அடுத்தடுத்த வீழ்ந்த முக...

Quick Share

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான 5 T20 போட்டிகள் கொண்ட தொடர் நியூஸிலாந்தில் நடந்துவருகிறது. இன்று முதலாவது போட்டி ஆக்க்லாண்ட்-ல் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி நியூஸிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. சிறப்பாக ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன் குவித்தது. அசத்தலாக ஆடிய கோலின் முன்றொ, கேப்டன் கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர் ஆகியோர் அசத்தலாக அரை சதம் அடித்தனர்.

204 என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 7 ரன்னில் வெளியேறினார். விராட் கோலி, மற்றும் KL ராகுல் நிலையாக ஆடினார்கள் ராகுல் 56 கோலி 45 ரன் எடுத்து வெளியேறினர். சிவம் துபே 13 ரன் எடுத்து வெளியேறினார். இந்தியா 15 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் எடுத்து ஆடிவருகிறது.
ஷ்ரேயஸ் மனிஷ் பாண்டே தற்போது களத்தில் உள்ளனர்.




You cannot copy content of this Website