தமிழகம்

“மதவெறியை மாய்ப்போம்” – ஆளுநருக்கு முதல்வர் கண்டனம்!

Quick Share

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கடந்த 23ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசுகையில், “நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை. நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியே முக்கிய காரணம். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947 இல் நாடு இரண்டாகப் பிரிந்தது. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும்” எனப் பேசியிருந்தார். ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் தமிழக ஆளுநரின் கருத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், ‘காந்தியால் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என ஆளுநர் ரவி கூறியது வன்மம் கலந்த நோக்கம் கொண்டது. தேசத் தந்தை எனப் போற்றப்படும் காந்தியை பொய்கள், அவதூறுகளால் கொச்சைப்படுத்தும் காலமாக மாற்றிக் கொண்டுள்ளனர்.காந்தியின் கொள்கைகள் மட்டுமல்ல, அவரே இழிவுபடுத்தப்படுகிறார். நிகழ்காலம் எவ்வளவு வகுப்புவாத சகதியில் சிக்கியுள்ளது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு .இதை உடனே தடுக்க வேண்டும். காந்தி கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதி நாடு முழுவதும் மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.ஜனவரி 30 ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். உறுதிமொழி ஏற்பில் அனைத்து மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற தமிழ்நாட்டின் மாண்பை இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்துவோம். இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கவனம் செலுத்தும் அதே வேளையில் தமிழ்நாட்டுக்கு இந்த கடமை அதிகம் இருக்கிறது.ஒற்றுமையின் அடையாளமாக உள்ள காந்தியின் புகழை சிதைப்பதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க முயற்சி செய்கிறார்கள். காந்தி பிறந்தநாளை ‘ஸ்வச் பாரத் அபியான்’ என மாற்றியதில் இருக்கிறது இவர்களின் அழித்தல் வேலைகள். ‘ஸ்வச் பாரத்’ என மாற்றியது காந்தியின் அனைத்து அடையாளங்களையும் அழித்தல் ஆகும். அதேபோன்ற காரியத்தை அக்டோபர் இரண்டில் பேரணி நடத்துவதன் மூலம் ஆர்எஸ்எஸ் திசை திருப்ப பார்த்தது. அதை அரசு அனுமதிக்கவில்லை. எத்தகைய திரைமறைவு வேலைகள் பார்த்தாலும் மக்களின் மனதில் குடியிருக்கிறார் காந்தியடிகள். மதவெறியை மாய்ப்போம்; மனிதநேயம் காப்போம்; வாழ்க காந்தியின் புகழ்’ என தெரிவித்துள்ளார்.

எதற்காக சீமான் இப்படி மாறினார்?

Quick Share

திடீரெனெ புதிய லுக்கில் சீமான் மாறியது இதற்கு தான் என்று பல்வேறு காரணங்கள் வெளிவந்துள்ளது. நேற்று தூத்துக்குடியில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாம் தமிழர் என்பது கட்சியின் பெயர் அல்ல, அது ஒரு இனத்தின் அடையாளம். கட்சியை ஆரம்பிக்க நாம் இணையவில்லை. இனத்தின் விடுதலைக்காக ஒரு கட்சியை உருவாக்கியிருக்கிறோம்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் ஒரு தமிழர் கூட வேண்டாம் என்ற வருத்தம் வேண்டாம். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 11 பேரும் தமிழர்கள் தான்” என்று பேசினார்.சீமான் பேசிய பேச்சுக்கு இடையில் அவரின் புதிய தோற்றத்தை பலரும் கவனித்துக் கொண்டிருந்தனர். சீமான் எப்போதும், பிட்டாகவே இருப்பார். மொத்தமாக ஷேவ் செய்து, முடியை குறைவாக வைத்திருப்பார்.ஆனால் அவர் தற்போது, தாடி வைத்து, உடல் எடை கூடி அவரது தோற்றமே முழுவதுமாக மாறியுள்ளது. இவரது மாற்றதிற்கு என்ன காரணம் என்று இணையத்தில் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.இயக்குநர் விக்னேஷ் சிவன் படம் ஒன்றில் பல சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் நடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த படத்தில் சீமானும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் அந்த படத்திற்காகவே தாடி வளர்த்து, உடல் எடையை கூட்டி தோற்றத்தை மாற்றியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.சினிமாவில் சீமான் நடித்தும்,படங்களை இயக்கியும் பல வருடங்கள் ஆன நிலையில் அவர் தனது தோற்றத்தை மாற்றி ரீஎன்ட்ரி கொடுக்கிறார் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

ஸ்பெயின் செல்லும் வழியில் நோவக் ஜோகோவிச்சை சந்தித்த மு.க.ஸ்டாலின்!

Quick Share

ஸ்பெயின் செல்லும் வழியில் டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும் என்று தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைத்தால் அதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும் என தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியிருந்தார்.இதனைத்தொடர்ந்து 8 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 27 -ம் திகதி மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.இந்நிலையில், ஸ்பெயின் செல்லும் வழியில் விமான பயணத்தின் போது உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சை தமிழக முதலமைச்சர் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “வானத்தில் ஆச்சரியம். ஸ்பெயின் செல்லும் வழியில் டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை சந்தித்தேன்” என்று பதிவிட்டு அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

சென்னையில் QR குறியீடு மூலம் பேருந்துகளில் டிக்கெட்

Quick Share

பல்லாவரம் MTC பேருந்து நடத்துனர்களுக்கு பயணிகள் டிஜிட்டல் முறையில் பயண கட்டணம் செலுத்தும் வகையில் புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. சோதனை முயற்சியாக களமிறக்கப்பட்டுள்ள இந்த திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களில் மக்கள் பயணிக்கும் இடத்தை தேர்வு செய்து பின்னர் UPI, பணம், கார்டுகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. UPI முறையை தேர்வு செய்தால் திரையில் தோன்றும் QR Code-ஐ ஸ்கேன் செய்து பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே எச்சரிக்கை!! பானி பூரி சாப்பிட்ட 2 சிறுவர்கள் உயிரிழப்பு

Quick Share

பானிபூரி சாப்பிட்ட சகோதரர்கள் 2 பேர், உடல் உபாதை ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ராமகிருஷ்ணா (10), விஜய் (6) ஆகியோர் வீட்டின் அருகே உள்ள கடையில் பானிபூரி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட, பெற்றோர் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இருப்பினும் வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கங்கை நீரில் மூழ்கடித்தால் நோய் குணமாகும்.., 5 வயது குழந்தையை கொலை செய்த பெற்றோர்

Quick Share

கங்கை நீரில் மூழ்கி எடுத்தால் ரத்த புற்றுநோய் சரியாகும் என்று கூறி 5 வயது குழந்தையை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரின் மூட நம்பிக்கை

இந்திய தலைநகரான டெல்லியில் இருந்து உத்தராகண்ட் மாநிலம், ஹர் கி பௌரிக்கு 5 வயது ஆண் குழந்தையுடன் ஒரு குடும்பத்தினர் வந்தனர். 

அவர்கள், தங்களது குழந்தைக்கு ரத்த புற்றுநோய் இருந்ததால் கங்கை நீரில் மூழ்கி எடுத்தால் குணமாகும் என்ற நம்பிக்கையில் குழந்தையை தண்ணீரில் மூழ்க வைத்தனர். அப்போது அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பெண் ஒருவர், இந்த குழந்தை எழுந்து நிற்கும். இது எனது வாக்குறுதி எனக் கூறி குழந்தையை தண்ணீரில் மூழ்க வைக்கிறார். அப்போது அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்க முயன்றனர். அவர்களையும் அந்த பெண் தாக்க முயல்வது போன்று காட்சிகள் உள்ளன.

குழந்தை உயிரிழப்பு

இதனிடையே, தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்ட குழந்தை மயக்கமடைந்தது. பின்னர், தகவலறிந்து வந்த பொலிஸார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து குழந்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பொலிஸார் குழந்தையின் பெற்றோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கங்கை நீரில் மூழ்கடித்தால் நோய் குணமாகும் என்ற மூட நம்பிக்கையால் 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண் பொலிஸ்: வீட்ல விசேஷமாம்…

Quick Share

அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண் ஒருவர், குழந்தை ஒன்றிற்கு தந்தையான ஆச்சரிய நிகழ்வொன்று இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.

அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண்

மஹாராஷ்ட்ராவிலுள்ள Rajegaon என்னும் கிராமத்தில் பிறந்தவர் லலிதா (Lalita Salve) என்ற பெண். அவர் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றிவருகிறார். 2013ஆம் ஆண்டு தனது உடலில் வித்தியாசமான மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்ட லலிதா, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அப்போது, அவரது உடலில் Y குரோமோசோம் இருப்பது தெரியவந்தது. அதாவது, பெண்கள் உடலில் இரண்டு X குரோமோசோம்கள் இருக்கும் நிலையில், ஆண்கள் உடலில் X மற்றும் Y குரோமோசோம்கள் இருக்கும்.

ஆக, தான் ஆண் தன்மை உள்ளவர் என தெரியவரவே, 2018 முதல் 2020 வரை, மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து ஆணாக மாறினார் லலிதா, இப்போது அவர் பெயர் லலித் (Lalit Salve).

2020ஆம் ஆண்டு, சீமா என்ற பெண்ணைத் திருமணமும் செய்துகொண்டார் லலித்.

வீட்ல விசேஷம்

இந்நிலையில், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய லலித், ஒரு குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

திங்கட்கிழமை, அதாவது, ஜனவரி 15ஆம் திகதி, லலித், சீமா தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.பெண்ணாகப் பிறந்து ஆணாக மாற நான் பயணித்த பாதை பல சிக்கல்கள் உள்ளதாக இருந்தது. ஆனால், பலர் எனக்கு ஆதரது தந்தார்கள். என் மனைவி சீமா குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என ஆசைப்பட்டாள். தந்தையானதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, எங்கள் குடும்பமும் மகிழ்ச்சியில் திழைக்கிறது என்கிறார் லலித்.  

இந்தியாவுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு

Quick Share

தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்தும் தருணத்தில் நாம் இருக்கின்றோம் கனவு நனவாகிய தருணம் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். மேலும் பொருளாதாரா ரீதியாக நலிவடைந்த வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகின்றது என கூறியுள்ளார்.மேலும் விளையாட்டுத்துறையில் இந்திய ஒன்றியத்துக்கே தமிழ்நாடு முன்னுதாரணமாக விளங்குகிறது என கூறியுள்ளார்.

காணும் பொங்கல் கொண்டாட்டம்: கடற்கரையில் குளிக்க தடை!

Quick Share

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று முன்தினம் (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்தது. இன்று காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட இருப்பதால் சென்னையில் மொத்தமாக 17,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் துறையின் சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, ”சென்னையில் பெசன்ட் நகர், மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு நாளை இரவு 10 மணி வரை மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவர். கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போவதை தவிர்ப்பதற்காக சிறப்பு குழுக்கள், தனி கட்டுப்பாட்டு அறை ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஊர்க்காவல் படையினர் உட்பட 17,000 காவலர்கள் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

மஞ்சு விரட்டில் நடந்த சோகம்: காளை முட்டியதில் இளைஞர் மரணம்!

Quick Share

மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று மாட்டுப்பொங்கல் பெரு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிராமங்களில் மாடுகளை அலங்கரித்து, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டியும் மாட்டுபொங்கல் கொண்டாடப்பட்டது.

மேலும், புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள 3677 காளைகளும், 1412 மாடு பிடி வீரர்களும் ஒன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் வளையாங்குளம் பகுதியை அடுத்த எலியார்பாளையத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது.

அப்போது, காளை அவிழ்த்து விடப்பட்ட நிகழ்வை வீட்டு வாசலில் நின்று ரமேஷ் என்ற இளைஞர் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சாலையில் வேகமாக ஓடிய காளை ஒன்று அப்படியே நின்றது.

பின்னர், சாலையில் வந்த லொறி அடித்த ஹாரன் சத்தத்தில் காளை மிரண்டு, வாசலில் நின்று கொண்டிருந்த ரமேஷை முட்டி தூக்கி வீசியது. இதில் ரமேஷின் இடது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறினர். இதில் ரமேஷுக்கு மூன்று வருடங்கள் முன்பு தான் திருமணம் ஆகி 1 வயது குழந்தை உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு லீக் போட்டி: வென்றால் அரசு வேலை – உதயநிதி அசத்தல் அறிவிப்பு!

Quick Share

ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போல ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க பரிசீலிக்கப்படுவதாகவும் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நேற்று மாட்டுப்பொங்கல் பெரு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிராமங்களில் மாடுகளை அலங்கரித்து, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டியும் மாட்டுபொங்கல் கொண்டாடப்பட்டது.

மேலும், புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள 3677 காளைகளும், 1412 மாடு பிடி வீரர்களும் ஒன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதலில் கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டு பின்னர் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்க்கப்பட்டன. 6,099 காளைகளும், 1,784 வீரர்களும் முன்பதிவு செய்திருந்த நிலையில், தகுதியுள்ள 1,200 காளைகள் மற்றும் 800 வீரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி பின்னர் தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்க பல்வேறு அமைப்புகள் முயற்சி செய்தும், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியை ஆண்டு முழுவதும் நடத்தும் விதமாக , ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் போன்று ஜல்லிக்கட்டு லீக் போட்டியை நடத்த பரிசீலனை செய்து வருகிறோம்.

மேலும், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்க தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நீருக்கடியில் முதல்வர் ஓவியம்: ஆசிரியரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்!

Quick Share

முதலமைச்சரை சந்திக்க வேண்டி “நீருக்கடியில்” முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்த பகுதிநேர ஓவிய ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் தன் ஓவிய திறமைக்கு அங்கீகாரம் வேண்டியும், முதல்வர் சந்திக்க வேண்டியும் நீரில் மூழ்கி “நீருக்கடியில்” முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்தார்.

பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் சிறு வயதிலிருந்து ஓவியம் வரைதல், பத்தாம் வகுப்பு படிக்கும் போது திராவிட கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் உருவத்தை வரைந்து அவரிடம் காண்பித்து பாராட்டு பெற்றார், பின் ஓவிய ஆசிரியர் பயிற்சி முடித்து தற்போது பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறார்.

ஓவியத்தில் வித்தியாசமாக வரைவது, இரண்டு கைகளால் வரைவது, நாக்கு மேல் ஓவியம், காதில் பிரஷ் வைத்து ஓவியம் வரைவது, வாயில் பிரஷ் பிடித்துக்கொண்டு ஓவியம் வரைவது, தன் தாடியை தூரிகையாக கொண்டு டாக்டர் அப்துல் கலாம் படம் வரைந்து உலக சாதனை படைத்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் தன் ஓவியத்தின் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் மரம் வளர்ப்போம், நீரின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கண் தானம் செய்தல், கொரானா விழிப்புணர்வு மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வரைந்து உள்ளார்.

ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் தன் கலைக்கு அங்கீகாரம் வேண்டி “CM – சார் சந்திக்கணும் ஆசை” என்ற வாசகத்துடன் நீரில் மூழ்கி “நீருக்கடியில்” 57 வினாடியில் மெழுகு கலர் கொண்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் உங்க திறமைக்கு கண்டிப்பாக முதல்வர் அவர்கள் அங்கீகாரம் தருவார் என்று ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.




You cannot copy content of this Website