தமிழகம்

வடகிழக்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்ச...

Quick Share

தமிழகத்தில் கடந்த வாரம் தொடங்கிய வடகிழக்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த நவ,16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதைத்தொடா்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்களில் பருவமழை தீவிரமடையும் என்று சென்னை வானிலைமையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் விராலிமலை உள்ளிட்ட பதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் மழையால் மானாவாரி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Quick Share

மதுரையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். தற்போது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததன் விளைவாக கோவிலை சுற்றியுள்ள நான்கு கோபுரத்தின் வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், துணை ஆணையர் கார்த்திக் மேற்பார்வையில்
கோவிலுக்கு உள்ளே செல்லும் பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் வழியாக கண்காணிக்கப்பட்டு சோதனை செய்து வருகிறார்கள். மின் அஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக செய்திகள் வெளியானது. மோப்ப நாய்களை கொண்டு கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சோதனை நடத்தினர்.

இதன்மூலம் கோவிலின் சுற்று வட்டார பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது. கோவிலுக்கு 110 போலீஸ் சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுபட்டுவந்தனர். தற்போது இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கூடுதலாக 370 போலீஸ் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

என்ன பாஜக – அதிமுக கூட்டணியில் பிரச்சனையா ? விளக்கம் அளித்தார் வானதி ஸ்ரீனிவாசன்

Quick Share

தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மலர் கொடி என்பவர் தலைமையில் மாற்றுக்கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் பாஜகவின் மாநில செயலாளரான வானதி ஸ்ரீனிவாசனை சந்தித்து பாஜகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்த எல்லோருக்கும் பாஜக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்வில் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த்தார். அவர் கூறியதாவது, தற்போது தமிழக பாஜக வின் தலைவர் பதவி யாருக்கு என்பதை அறிவித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லை. இதை பற்றி கட்சி தலைமை முடிவு எடுக்கும் என கூறினார்.

அதிமுக உடனான கூட்டணி பற்றி பதிலளித்த வானதி. பாஜகவின் வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும், சிக்கலும் இல்லை என தெரிவித்தார். கூட்டணியில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என கூற முடியாது என கூறினார்.

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் “பாஸ்டேக்” ! “டிச-1 வரை வங்கிகளில் இலவசம...

Quick Share

மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்க பாஸ்டேக் முறை டிச-1ல் இருந்து கட்டாயமாக்கப் படுகிறது.

வரும் டிசம்பர் 1ல் இருந்து நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க பாஸ்டேக் முறை அறிமுகபடுத்த, தமிழக சாலை மேம்பாட்டு கழகம் முடிவு செய்துள்ளது. ரேடியோ பிரேக்கியூயன்ஸி ஐடென்ட்டிஃபிகேஷன் (ஆர்.எப்.ஐ.டி) என்ற இந்த அட்டையை வாகனத்தின் முன் ஒட்டி சுங்கச்சாவடியை கடக்கும் போது 10 வினாடிகளில் கடந்துசெல்லலாம். நீண்ட நேரம் வரிசையில் நிற்கவேண்டியதில்லை.இதனை பெற வாகன பதிவு சான்று, புகைப்படம், மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். நவம்பர் 22 முதல் டிசம்பர் 1 வரை இந்த பாஸ்டேக் கார்டை இலவசமாக வழங்க வங்கிகளுக்கு நெடுஞ்சாலை துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாகனங்களுக்கு ஏற்றவாறு இதில் கட்டணம் மாறுபடுகிறது.தற்போதுவரை 40% வாகன ஓட்டிகளிடம் இம்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1 தேதிக்குள் தமிழகம் முழுவதும் செயல்படுத்த பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. அதன் பிறகு ஒரு பாதையில் மட்டும் பணம் கொடுத்து கட்டணம் செலுத்தும் முறையும் மற்ற அணைத்து பாதைகளிலும் பாஸ்டேக் முறை செயல்படவுள்ளது.

“செல்ப் பேலன்ஸிங் ஸ்கூட்டர்” சென்னை போக்குவரத்து காவலர்களுக்காக ஒருவர் மட்ட...

Quick Share

சென்னை காவல்துறையானது போக்குவரத்து காவலர்கள் சுலபமாக ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக வளர்ந்து வரும் நாடுகளில் உபயோகிக்கக்கூடிய புதிய 3 ஸ்மார்ட் பைக்குகளை சென்னையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ரோந்து வாகனம் ஒருவர் மட்டும் நின்ற படி 20 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய “செல்ப் பேலன்ஸிங் ஸ்கூட்டர் “, வகையை சேர்ந்ததாகும். பேட்டரியால் செயல்படும் இந்தவாகனத்தை 6 மணிநேரம் சார்ஜ் செய்ய வேண்டும். இந்த வாகனத்தின் எடை 58 கிலோவாகும். ஒளிறும்விளக்கு, முதலுதவி பெட்டிகள் போன்ற வசதிகளும் இதில் உள்ளது.110 கிலோ எடைக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இந்த வாகனத்தில் பயணிக்க முடியும். இந்த வாகனம் மூலம் கூட்டநெரிசல் உள்ள இடங்களில் கூட சுலபமாக ரோந்துப்பணியில் ஈடுபட முடியும்.

இந்த வாகனம் அசோக் லேலாண்ட் மற்றும் ஷட்டல்ஸ் ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்தின் விலை சுமார் 1 லட்சமாகும். இந்த ரோந்து வாகனத்தின் செயல்பாட்டை ஆராய்ந்த போலீஸ் அதிகாரிகள், இதில் சில மாற்றங்கள் செய்ய வலியுறுத்தினார்கள். இதுகுறித்து கூறுகையில், முதற்கட்டமாக 10 ஸ்மார்ட் ரோந்து வாகனங்கள் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தில் மேலும் 2 புதிய மாவட்டங்கள் உதயம்!!! இன்று தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி...

Quick Share

தமிழகத்தின் 35வது மாவட்டமாக திருப்பத்தூர், 36 வது மாவட்டமாக ராணிப்பேட்டையை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3 ஆகா பிரிக்கப்படும் என சுதந்திரதின விழாவில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதிதாக வேலூரில் இருந்து பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தை திருப்பத்தூர் தனியார் பள்ளியில் நடைபெரும்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதிய மாவட்டமாக உருவாகியுள்ள திருப்பத்தூர் மாவட்டம் இன்று முதல் நிர்வாக வேலைகளை தொடங்கியுள்ளது. விழாமேடையில் பேசிய முதல்வர் எடப்பாடி கூறியதாவது, திருப்பத்தூர் மாவட்டம் உதயமானதில் மகிழ்ச்சி, இருமலைகளால் சூழப்பட்டது திருப்பத்தூர் மாவட்டம், மேலும் ஆம்பூரில் பிரியானி சுவையாக இருக்கும் என கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி ஆகிய தாலுகாக்கள் இடம்பெறும். புதிதாக வாணியம்பாடி வருவாய் கோட்டம் உருவாக உள்ளது .அதேபோல 36 வது மாவட்டமாக ராணிப்பேட்டை உஹதையமானது. அரக்கோணம் கோட்டங்கள் மற்றும் ஆற்காடு, வாலாஜா, நெமிலி உள்ளிட்ட வட்டங்கள் இதில் அடங்கும். இன்று பிற்பகல் 12:30 மணிக்கு விழா அரங்கேறியது.

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை!! “5 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்...

Quick Share

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கொட்டிய மழையால் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் சென்னை பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நேற்று இரவு கொட்டிதீர்ந்த கனமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.தாம்பரத்தில் அதிகபட்சமாக 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மழை காரணமாக சென்னை திருவள்ளூர் பல்கலை கழகத்திற்கு கீழ் செயல்படும் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் டிசம்பர் 3 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மன்னார் வளைகுடா பகுதியை ஒட்டிய கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவாகியுள்ளதால், இது வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாலியல் கொலை குற்றவாளி மனோகரன் தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை!

Quick Share

கோவையில் இரு சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 10 வயது சிறுமி முஸ்தான் மற்றும் 7 வயது ரித்திக் ஆகிய இருவரை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த மனோஹரனுக்கு கோவை மகளிர் சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து உச்ச் நீதி மன்றம் மற்றும் மகளிர் சிறப்பு நீதி மன்றமும் டிசம்பர் 2 தேதி தூக்கு தண்டனையை உறுதி செய்து நிறைவேற்றுமாறு உத்தரவிட்டது.

குற்றவாளி மனோகரன் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கருணை மனு அனுப்ப அவகாசம் வழங்காமல் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டது. இதை விசாரித்த எம் எம் சுரேஷ் டீக்காரமான் அமர்வு மனோகரனை தூக்கிலிடும் உத்தரவிற்கு தடை விதித்துள்ளது. மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

“அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுதிறன் பயிற்சி தொடக்கம்” ஸ்போக்கன் இங...

Quick Share

தமிழக அரசு பள்ளிகளில் தினமும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஸ்போக்கன் இங்கிலிஷ் புத்தகத்தை வெளியிட்டார்.

தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவேண்டும் என விரும்பி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால் அரசு பள்ளி சேர்க்கை குறைத்துள்ளது. அதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச்சுத்திறன் பயிற்சியளிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. இதனை தொடர்ந்து முதன்மை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையில் 1 முதல் 5 வகுப்புவரை வாரத்திற்கு 90 நிமிடமும், 6 முதல் 9 வகுப்புவரை வாரத்திற்கு 45 நிமிடமும், ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வழங்கவேன்றுமென அறிவிக்கப்பட்டியிருந்தது.

இன்று சென்னை கோட்டூர் புறத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் “ஸ்போக்கன் இங்கிலிஷ்” புத்தகத்தை வெளியிட்டார். இதில் பேசிய அவர் 5-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஆண்டிற்கு 10 லட்சம் செலவுசெய்வதால், அதன் விவரங்களை தெரிவிக்க வேண்டுமெனவும், பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை சரிசெய்து மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவும் கேட்டுக்கொண்டார். பணி உயர்வு தொடர்பாக போராடிய திண்டுக்கல் தலைமை ஆசிரியரை பதவி நீக்கம் செய்யவேண்டுமெனவும் கூறினார்.

“மன்னிப்புக்கேட்ட தல ரசிகர் ” தனக்கு தானே செய்வினை வைத்துக்கொள்ளும் தல-தளபத...

Quick Share

அதிமுகவிற்கு அஜித் திராவிட முன்னேற்ற கழகம் பெயரை மாற்றி போஸ்டர் போட்ட தல ரசிகர் தற்போது மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதிமுக-விற்கு அஜித் திராவிட முன்னேற கழகம் என்று பெயரிட்டு, இந்த கட்சியில், தான் மதுரை மாநகராட்சி மேயராக போட்டியிட போவதாக அஜித்தின் புகைப்படத்தோடு டிசைன் செய்த போஸ்ட்டரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட தல ரசிகர் ரைட் சுரேஷ் தனக்கு தானே செய்வினை வைத்துக்கொண்டுள்ளார். போஸ்டர் டிசைன் செய்யும் வேலை செய்துவந்த ரைட் சுரேஷ் சுய விளம்பரத்திற்க்காக செய்த இந்த செயலை செய்துள்ளார், ரசிகர்களின் நலனை மனதில் வைத்து ரசிகர் மன்றமே வேண்டாம் கூறி என தன் தொழிலில் மட்டும் கவனம் செலுத்திவரும் தல அஜித்திற்கு மட்டுமல்லாது , அவரது தீவிர ரசிகர்கள் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை உணர்ந்த தல ரசிகரான ரைட் சுரேஷ் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் .

இதேபோல் மதுரையில் 2021-ல் மக்களுக்காக நிகழ போகும் அதிசயங்களே..! என்று விஜய் படத்தின் பின்னால் ரஜினி , கமல் ஆகியோரின் படங்களை வைத்து ஏக்கத்துடன் மக்கள், எதிர்பார்ப்புடன் நாங்கள் என்ற வாசகத்தோடு போஸ்டர் அடித்துள்ளார் விஜய் ரசிகர் கில்லி சிவா. ஆர்வக்கோளாறால் இதுபோன்ற செயலில் ஈடுபடும் ரசிகர்ககளால் எந்த சிக்கலும் வராமல் இருந்தால் போதும் என ஆதங்கப்படுகிறார்கள் திரை உலகினர்.

சிக்கிக்கொண்டாரா சின்மயி .? நீங்க நித்தியானந்தாவுக்கும் ரசிகையா..? சமூக வலைதளத்தில் வ...

Quick Share

பயங்கரமான ”பெண்ணியவாதி சின்மயி” இதற்க்கு மட்டும் ஏன் குரலெழுப்பவில்லை ..? ஸ்வாமி நித்தியானந்தா பற்றி எந்த ஒரு விஷியத்திற்கும் குரலெழுப்பவில்லை , ட்விட்டர் அக்கவுண்ட்ல் சீறிப்பாய்ந்த சின்மயி எதிர்ப்பாளர் .

வைரமுத்து மீது ”மீடு” புகார் அளித்ததில் இருந்து பல்வேறு விஷயங்களுக்கும் பொங்கி எழும் பாடகி சின்மயி நித்தியானந்தா விஷயத்தில், ஒரு ட்விட் கூட போடாததற்கு எதிராக நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர். பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் எழுப்பும் சின்மயி பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நித்யானந்தாவைப்போய் சந்திப்பதா என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாடகி சின்மயி நித்யானந்தாவை சந்தித்ததாக சமூகவலைதளத்தில் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், அதற்கான விளக்கத்தை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்.

”மீடு” விவகாரத்தில் பல பிரபலங்கள் தங்களை பற்றி விமர்சித்து கொண்டு வந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீர் என்று வைரமுத்து மேல் ஒரு குண்டு தூக்கிப்போட்டு ஓவர் நைட்டில் பேமஸ் ஆனார் சின்மயி , சமீபத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் இவர் ஸ்வாமி விஷியத்தில் மட்டும் மௌனம் காப்பது ஏன் .? பற்றி இன்னும் விளக்கம் தெரிவிக்கவில்லை .

“பொங்கல் பரிசு ரூ.1000” முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு!!! யாரு...

Quick Share

கடந்த ஆண்டை போல தை பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட, இந்த வருடம் வரவிருக்கும் பொங்கலுக்கு ரூ.1000 மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் பேருந்து நிலையத்திற்கு அருகே ரூ.70 கோடி செலவில், அரசு சட்டக்கல்லூரி, எம்.ஜி.ஆர் அரசு மகளிர் காலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய புதிய கட்டடங்கள் இன்று திறக்கப்பட்டன. மேலும் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியை இன்று 34வது மாவட்டமாக தமிழக அரசு அறிவித்து. ஆகையால் முப்பெரும் விழாவாக இவ்விழா அமைந்தது.

நிகழ்வில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தை பொங்கல் திருவிழா தமிழர்களின் தனிச்சிறப்பு மிக்க திருவிழா, பொங்கல் விழா தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்.தமிழ் மரபையும், பாரம்பரியத்தையும் அடையாளப்படுத்தும் இவ்விழா தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுவதுண்டு. எனவே தான் கடந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்காக ரூ.1000 மற்றும் பரிசு தொகுப்பும் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது . அதே போல் இந்த ஆண்டும் அரிசி அட்டை தாரர்களுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் வைப்பதற்க்காக தேவைப்படும் ஒருகிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை உள்பட்ட பொங்கல் பரிசு பொருட்களில் வழங்கப்படும்” என முதல்வர் பேசினார்.




You cannot copy content of this Website