உலகம்

கனடியர்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Quick Share

கனடிய மக்களது ஆயுட் காலம் தொடர்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் மக்களது ஆயுட்காலமானது குறைவடைந்து செல்லும் போக்கினை பதிவாகியுள்ளது. மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக கனடிய மக்களின் ஆயுட்காலம் குறைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய மக்களது ஆயுட் காலம் தொடர்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் மக்களது ஆயுட்காலமானது குறைவடைந்து செல்லும் போக்கினை பதிவாகியுள்ளது. மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக கனடிய மக்களின் ஆயுட்காலம் குறைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.    
கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.கடந்த 2019ம் ஆண்டில் கனடியர் ஒருவரின் ஆயுட்காலம் 82.3 வருடங்கள் எனவும், தற்பொழுது 2022 ஆம் ஆண்டில் இந்த ஆயுட்காலம் ஆனது 81.3 வயதாக குறைவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.அதிகளவு ஆயுட்காலம் குறைவடைந்த பகுதியாக சஸ்கட்ச்வான் பதிவாகியுள்ளது.புற்றுநோய் இருதய நோய் போன்ற காரணிகளால் அதிகளவான கனடியர்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.கோவிட் பெருந்தொற்று காரணமாகவும் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழந்தை பெற்ற ஓரினத் தம்பதி!

Quick Share

ஸ்பெயின் தேசத்தை சேர்ந்த லெஸ்பியன் ஜோடி ஒன்று, தங்களுக்கான வாரிசை, தங்கள் இருவர் உடலிலும் சுமந்து பெற்றுள்ள சம்பவம், தன் பாலீர்ப்பாளர்கள் மத்தியில் அறிவியல் சாதனையாக அறியப்படுகிறது. தன் பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்ளவும், நவீன மருத்துவத்தின் உதவியோடு குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும் ஐரோப்பிய சட்டங்கள் அனுமதிக்கின்றன.

அந்தவகையில் ஸ்பெயின் தேசத்தின் லெஸ்பியன் தம்பதிகளான எஸ்டெபானியா(30) – அசஹாரா(27) ஜோடி, தங்களுக்கான வாரிசை தங்கள் இருவருமே சுமந்து பிரசவிக்க விரும்பினர்.

வழக்கமாக ஓரினச் சேர்க்கை தம்பதியரில், இருவரில் எவரேனும் ஒருவர் மட்டுமே தங்கள் வாரிசை உருவாக்குவதில் நேரடியாக பங்கேற்க முடியும். அது கருமுட்டை அல்லது விந்தணுவை தானம் செய்வதன் மூலமாகவோ, செயற்கை கருத்தரிப்பில் உருவான கருவை வயிற்றில் சுமந்து பிரசவிப்பதன் மூலமாகவோ சாத்தியப்படும்.

ஆனால் ஸ்பெயின் லெஸ்பியன் ஜோடி, தங்கள் வாரிசை இருவரின் உடல்களும் உரிமை கொண்டாட விரும்பினர். எஸ்டெபானியா – அசஹாரா ஜோடியின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, மருத்துவர்கள் ’இன்வோசெல்’(INVOcell) என்ற நவீன செயற்கை கருத்தரிப்பு உத்தியை தேர்ந்தெடுத்தனர்.

இதன்படி ஒரு பெண்ணின் கருமுட்டை மூலம் உருவாகும் கரு, இன்னொருவர் வயிற்றில் சிசுவாக வளர்ந்தது. ’இன்வோசெல்’ நுட்பத்தைப் பயன்படுத்தி, முதலில் எஸ்டெபானியாவின் உடலுக்குள் முட்டை மற்றும் விந்தணுக்களின் காப்ஸ்யூல் சேர்க்கப்பட்டது.

சில தினங்கள் கழித்து காப்ஸ்யூலின் ஆரோக்கியமான கருக்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த கருவில் ஒன்று அசாஹாராவின் கருப்பையில் பின்னர் பொருத்தப்பட்டது.

அக்டோபர் 30 அன்று, எஸ்டெபானியா – அசஹாரா ஜோடி தங்கள் மகனை இந்த உலகுக்கு வரவேற்றனர். இந்நிலையில் தங்கள் செல்ல மகனுக்கு டெரெக் எலோய் எனப் பெயரிட்டுள்ளனர்.

அந்த வகையில் குழந்தை பெற்றவர்களில் ஐரோப்பாவின் முதல் ஓரினச்சேர்க்கை ஜோடியாகவும், உலகில் இரண்டாவது ஓரினத் தம்பதியாகவும் எஸ்டெபானியா – அசஹாரா ஜோடி சாதனை படைத்திருக்கிறது.

முதல் சாதனை அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த ஒரு லெஸ்பியன் ஜோடி, தங்கள் வாரிசை தங்கள் இருவரது உடல்கள் வாயிலாகவும் பெற்றெடுத்தது. கடந்த 2018-ல் நடந்த இந்த மருத்துவ வரலாற்று சாதனையில் செயற்கை கருத்தரிப்பின் இருவேறு நுட்பங்கள் கலவையாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கபப்ட்டிருந்தது.

மெஸ்ஸியின் “ஜேர்சிகள்” 10 மில்லியன் டொலருக்கு ஏலம்!

Quick Share

ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணித்தலைவரான லயனல் மெஸ்ஸி 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் அணிந்த ஜேர்சிகள் 10 மில்லியன் டொலருக்கு ஏலம் விடப்படவுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் போது அணிந்திருந்த ஆறு ஜேர்சிகள் ஏலம் விடப்படவுள்ளது.

அதில், பிரான்சுக்கு எதிரான பரபரப்பான இறுதிப் போட்டியின் போது அவர் அணிந்திருந்த ஜேர்சியும் அடங்கும். இந்த ஜேர்சிகள் 10 மில்லியன் டொலருக்கும் அதிகமாக ஏலம் போகலாம் என சோத்பிஸ் ஏல நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

36 வயதான லயனல் மெஸ்ஸி ஏலம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அறிவித்திருந்ததுடன் அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஒரு தொகை சாண்ட் ஜோன் டி டியூ பார்சிலோனா குழந்தைகள் மருத்துவமனையால் நடத்தப்படும் யுனிகாஸ் திட்டத்தின் மூலம் அரிய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏலம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை சோத்பிஸ் ஏல நிறுவனத்தின் நியூயோர்க் கிளையில் நடைடைபெறும்.

அதேவேளை 2022 ஆம் ஆண்டு டியாகோ மரடோனா 1986 இல் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றபோது அவர் அந்தப் போட்டியில் அணிந்திருந்த ஜேர்சி 9.3 மில்லியன் டொலருக்கு ஏலம் போயுள்ளது.

இது குறிப்பாக கால்பந்து விளையாட்டு நினைவுப் பொருட்களின் ஏல விற்பனையில் அதிக விலைக்கு ஏலம் போன விளையாட்டு பொருளாக சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் “உலகக்கிண்ண கால்பந்தாட்ட விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது, இது மெஸ்ஸியின் வீரம் நிறைந்த பயணத்துடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது

மற்றும் சிறந்த வீரர் என்ற அந்தஸ்தை உறுதியாக நிலைநிறுத்துகிறது. இந்த ஆறு ஜேர்சிகளின் விற்பனை ஏல வரலாற்றில் ஒரு சிறந்த நிகழ்வாக இருக்கும். ரசிகர்கள் மற்றும் சேகரிப்பாளர்களுக்கு மெஸ்ஸியின் முடிசூட்டு சாதனைக்கான தொடர்பை வழங்குகிறோம்” என்று சோத்பிஸ் ஏல நிறுவனத்தின் நவீன சேகரிப்புகளின் தலைவர் பிராம் வாச்சர் தெரிவித்தார்.

“உலகம் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் உள்ளது” – உக்ரைன் ஜனாதிபதி!

Quick Share

உலகம் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் உள்ளது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் தற்போதைய நிலை தொடர்பில் குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதலானது ரஷ்யாவின் விருப்பம் என்றார்.

மூன்றாம் உலகப் போர் வாய்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, மத்திய கிழக்கில் பெரிதாக ஆர்வகம் இல்லாத சீனா, ரஷ்யாவை தூண்டி விடுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் எதுவும் எளிதானதாக இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் உலகப் போரின் இந்த உலகளாவிய அபாயங்களின் மையத்தில் உக்ரைன் இன்று உள்ளது என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி,

அமெரிக்காவும் சீனாவும் நடவடிக்கை எடுக்கும் வரையில் ரஷ்யா துணிந்து முயற்சிகள் மேற்கொள்ளும் என்றார். ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதல் கூட ரஷ்யாவின் விருப்பம் என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.

ஈரான் ஆதரவுடன் நடந்த செயல் என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, ஹமாஸ் படைகளுக்கு ரஷ்யா பயிற்சி அளித்துள்ளதாக வெளியான வதந்திகள் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

சிரியா, லெபனான் நாடுகளில் ரஷ்ய அதிகாரிகள் பயணப்பட்டுள்ளதாகவும், ஹமாஸ் படைகளுக்கு பயிற்சி அளிக்க உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பின் துவக்க நாட்களில் பலமுறை கொலை முயற்சி முன்னெடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவை அனைத்தும் கொரோனா தொற்று பாதிப்பு போல என்றார். குறைந்தது 6 முறையேனும் தம்மீது கொலை முயற்சிகள் நடத்தப்பட்டது என்றார்.

சீனப் பள்ளிகளில் பரவும் மர்ம காய்ச்சல்!

Quick Share

கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், சீனாவில் மர்மமான நிமோனியா காய்ச்சல் பள்ளிகளில் பரவுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அச்சுறுத்தும் சூழ்நிலை, கொரோனா பெருந்தொற்று நெருக்கடியின் ஆரம்ப நாட்களை நினைவூட்டுவதாக கூறுகின்றனர். பெய்ஜிங் மற்றும் லியோனிங் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை நாளுக்கும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் நெருக்கடி உருவாகியுள்ளது. பாடசாலைகளை மூடுவதே காய்ச்சல் பரவுவதை தடுக்க உரிய வழி என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் நுரையீரல் அழற்சி மற்றும் அதிக காய்ச்சல் உள்ளிட்ட அசாதாரண அறிகுறிகளுடன் உள்ளனர். ஆனால் இருமல் உள்ளிட்ட எந்த அறிகுறியும் இல்லை என்றே கூறுகின்றனர்.

இதனிடையே, உலக அளவில் நோய் பரவல் உள்ளிட்டவைகளை கண்காணிக்கும் ProMed என்ற நிறுவனம், குறிப்பாக குழந்தைகளை பாதிக்கும், உறுதி செய்யப்படாத நிமோனியா தொற்றுநோய் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

2019 டிசம்பர் இறுதியில் கொரோனா தொற்று குறித்து இந்த ProMed நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது சீனாப் பள்ளிகளில் பரவும் காய்ச்சல் தொடர்பிலும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுடனான போரில் புதிய திருப்பம்: ஹமாஸ் தலைவர் சூசகம்!

Quick Share

நாங்கள் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகாமையில் இருக்கிறோம் என்று ஹமாஸ் தலைவர் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால், ஹமாஸ் சிறைவைத்துள்ள சுமார் 240 பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதுடன், பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட இஸ்ரேல் சிறையில் வாடும் பாலஸ்தீன மக்கள் 300 பேர் விடுவிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் தொடுத்த தாக்குதலை அடுத்து, போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், தொடர் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இதில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 14,128 என்றும் இதில் சிறார்கள் எண்ணிக்கை 4,000 கடந்துள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் கத்தார் தலைமையில் தீவிர பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டது. இதனிடையே, தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஈடாக பணயக்கைதிகள் சிலரை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் சிறிய நடைமுறை சிக்கல்களைக் கொண்டுள்ளது என்று கத்தார் பிரதமர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.வெளியான தகவல்கள் அடிப்படையில், ஐந்து நாட்கள் நீடிக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்படும் எனவும், பதிலுக்கு 50 முதல் 100 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆனால் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தவிர்த்து, இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் வேறு நாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உலகம் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் உள்ளது” – உக்ரைன் ஜனாதிபதி!

Quick Share

உலகம் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் உள்ளது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் தற்போதைய நிலை தொடர்பில் குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதலானது ரஷ்யாவின் விருப்பம் என்றார்.

மூன்றாம் உலகப் போர் வாய்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, மத்திய கிழக்கில் பெரிதாக ஆர்வகம் இல்லாத சீனா, ரஷ்யாவை தூண்டி விடுவதாக தெரிவித்துள்ளார்.இந்த சந்தர்ப்பத்தில் எதுவும் எளிதானதாக இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் உலகப் போரின் இந்த உலகளாவிய அபாயங்களின் மையத்தில் உக்ரைன் இன்று உள்ளது என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி,அமெரிக்காவும் சீனாவும் நடவடிக்கை எடுக்கும் வரையில் ரஷ்யா துணிந்து முயற்சிகள் மேற்கொள்ளும் என்றார். ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதல் கூட ரஷ்யாவின் விருப்பம் என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.ஈரான் ஆதரவுடன் நடந்த செயல் என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, ஹமாஸ் படைகளுக்கு ரஷ்யா பயிற்சி அளித்துள்ளதாக வெளியான வதந்திகள் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.சிரியா, லெபனான் நாடுகளில் ரஷ்ய அதிகாரிகள் பயணப்பட்டுள்ளதாகவும், ஹமாஸ் படைகளுக்கு பயிற்சி அளிக்க உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உக்ரைன் மீதான படையெடுப்பின் துவக்க நாட்களில் பலமுறை கொலை முயற்சி முன்னெடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவை அனைத்தும் கொரோனா தொற்று பாதிப்பு போல என்றார். குறைந்தது 6 முறையேனும் தம்மீது கொலை முயற்சிகள் நடத்தப்பட்டது என்றார்.

பிரித்தானியாவில் மாயமான பதின்ம வயது நண்பர்கள் சடலமாக மீட்பு!

Quick Share

பிரித்தானியாவின் ஸ்னோடோனியா பகுதியில் முகாம் அமைத்து தங்கச் சென்ற பதின்ம வயதினர் நால்வர் மாயமாகியிருந்த நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஓரளவு நீரில் மூழ்கிய காரில் இருந்து அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் நான்கு நண்பர்களின் மறைவு குடும்பத்தினர் சுற்றத்தார் என அனைவரையும் உலுக்கியுள்ளது.

கடைசியாக நால்வரையும் ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளி நிற ஃபோர்டு ஃபீஸ்டாவில் ஏறிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். இந்த நிலையில் நார்த் வேல்ஸ் பொலிசார் தெரிவிக்கையில், ஓரளவு தண்ணீரில் மூழ்கிய காரை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியிட்டனர்.இதனையடுத்து நால்வரின் சடலமும் அந்த வாகனத்தில் காணப்பட்டதாக பொலிசார் உறுதி செய்துள்ளனர். நால்வரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் வந்து அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.மேலும், நண்பர்கல் நால்வரும் ஹார்லெக் மற்றும் போர்த்மாடோக் ஆகிய வெல்ஷ் கடற்கரைப் பகுதிகளிலிருந்து பயணம் செய்துள்ளனர் என்றும், இவர்கள் ஸ்னோடோனியா பகுதியில் அமைந்துள்ள Eryri தேசிய பூங்காவிற்கு செல்வதாக திட்டமிட்டிருந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.நால்வரும் திங்கட்கிழமை பகல் வீடு வந்து சேர வேண்டியவர்கள், எந்த தகவலும் இன்றி மாயமாகியுள்ளதை அடுத்து, உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையிலேயே பொலிசார், மூழ்கிய காரில் இருந்து நால்வரையும் சடலமாக மீட்டுள்ளனர்.

இஸ்ரேல் மீது லெபனான் குண்டு வீச்சு தாக்குதல்!

Quick Share

வடக்கு இஸ்ரேல் பகுதி மீது லெபனான் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை காசாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கொல்லப்பட்டும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு இஸ்ரேலிய பகுதி மீது லெபனான் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளது.ஒரு நிமிடத்திற்குள் சுமார் 25 ராக்கெட் குண்டுகளை வடக்கு இஸ்ரேலிய பகுதிகள் மீது லெபனான் வீசியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.மேலும் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் சாசா மற்றும் ஸ்தூலா குடியிருப்புகள் மீது விழுந்ததாகவும், தெற்கு லெபனானின் ஹெஸ்பொல்லா தளங்களில் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்த தாக்குதலை லெபனான் செய்து இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், இந்த தாக்குதல் தொடரும் என லெபனான் எச்சரிக்கை விடுத்து இருப்பதாகவும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

டொலர் தேசமாக மாற இருக்கும் அர்ஜென்டினா!

Quick Share

அர்ஜென்டினாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேவியர் மிலி தனது வெற்றியை குத்தாட்டம் போட்டு கொண்டாடிய வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. அர்ஜென்டினா நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வலதுசாரி லிபர்டி கட்சியை சேர்ந்த ஜேவியர் மிலி வெற்றி பெற்று நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதிகாரப்பூர்வ தகவல்படி ஜேவியர் மிலி 56 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இந்நிலையில் தனது வெற்றியை அர்ஜென்டினா நாட்டின் புதிய பிரதமர் துள்ளல் ஆட்டம் போட்டு கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ஜேவியர் மிலி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அர்ஜென்டினாவில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏனெனில் ஜேவியர் மிலி தனது தேர்தல் வாக்குறுதியில் இரண்டு முக்கிய உறுதியை வழங்கி இருந்தார், அதில் முதலாவது அர்ஜென்டினா இனி டொலர் தேசம், மற்றொன்று மத்திய வங்கி நீக்கம்.அர்ஜென்டினாவின் தற்போதைய பணவீக்கம் 142 சதவீதமாக இருக்கும் நிலையில், அர்ஜென்டினாவின் பீசோ நாணயத்தை பயன்பாட்டில் இருந்து நீக்கி விட்டு அமெரிக்க டொலரை அதிகாரப்பூர்வ பணமாக ஜேவியர் மிலி அறிவிக்கயுள்ளார்.இவை அர்ஜென்டினாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.மேலும் அர்ஜென்டினாவை டொலர் தேசமாக மாற்ற அந்த நாட்டின் மத்திய வங்கியை மூடுவதாகவும் ஜேவியர் மிலி தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரீபியன் நாடு ஒன்றை சூழ்ந்த மழை வெள்ளம்!

Quick Share

டொமினிக்கன் குடியரசு நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளில் இதுவரை 21 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கரீபியன் நாடான டொமினிக்கன் குடியரசில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

இதனால் சாலைகள் மற்றும் பிற பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது, மேலும் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் மின் இணைப்பு மற்றும் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட 13,000 மக்கள் இந்த வெள்ளத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதுகாப்பிற்காக வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் விரைந்து செயல்பட்டு இதுவரை 2,500 பேரை அவசர கால மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.இருப்பினும், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.நெடுஞ்சாலையில் சுரங்க பாதையில் உள்ள சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

விரைவு நடை போட்டியில் சாதனை படைத்த முல்லைத்தீவு பெண்மணி!

Quick Share

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (75) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

அதோடு National Masters & Seniors Athletics போட்டியில் திருமதி அகிலத்திருநாயகி ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.திருமதி அகிலத்திருநாயகி 1,500 மீற்றர் ஓட்டம் மற்றும் 5000 மீற்றர் விரைவு நடை போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.இதேவேளை, 800 மீற்றர் ஓட்டத்தில் வெங்கலப் பதக்கத்தையும் 5000 மீற்றர் ஓட்டத்தில் நான்காம் இடத்தையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You cannot copy content of this Website