உலகம்

பாபா வாங்காவின் கணிப்பு! இந்த ஆண்டுஇந்தியாவில் ‘வெட்டுக்கிளி தாக்குதல்’ ஆபத...

Quick Share

பாபா வாங்காவின் இந்த ஆண்டிற்கானஇந்தியாவில் இந்த ஆண்டு ‘வெட்டுக்கிளி தாக்குதல்’ ஆபத்து.!இந்த ஆண்டிற்கான இந்தியா குறித்த கணிப்பு தற்போது பேசு பொருளாகியுள்ளது. இந்த ஆண்டு உலகில் வெப்பநிலை குறைவதால் வெட்டுக்கிளி தாக்குதல் அதிகரிக்கும் என்றும் இது இந்தியாவில் பயிர்களைத் தாக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். இதனால் பஞ்சம் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. பாபாவின் கணிப்புகள் குறித்து இணையத்தில் அதிகளவில் மக்கள் விவாதம் செய்து வருகின்றனர். ஏற்கனவே பாபா வாங்கா 2022 ஆம் ஆண்டிற்கான கணிப்பில் சில நாடுகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதே போல் இத்தாலியும் மிக மோசமான வறட்சியை சந்தித்தது.

பிரான்ஸை எதிரியாக்கிக்கொண்ட பிரதமர் லிஸ் டிரஸ்!

Quick Share

பிரித்தானியாவுக்கான பிரதமர் போட்டியில் சரசரவென முன்னேறி வந்தார் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக்.கடைசியில், அவரது தோலின் நிறத்தாலேயே அவரை ஓரங்கட்டிவிட்டார்கள் கன்சர்வேட்டிவ் கட்சியினர். அப்படித்தான் இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. லிஸ் ட்ரஸ்ஸின்(Liz Truss) கொள்கைகள் பிரித்தானியாவை வீழ்ச்சியின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என எச்சரித்த ரிஷியை(Rishi Sunak) அலட்சியம் செய்து, லிஸ் ட்ரஸ்ஸை(Liz Truss) பிரதமராக்கினார்கள் அவரது கட்சியினர்.

ஆனால், ரிஷி(Rishi Sunak) எச்சரித்ததுபோலவே, 10 ஆண்டுகளில் இல்லாதவகையில், பிரித்தானிய கரன்சியின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.இப்போது, தவறு செய்துவிட்டோம், ரிஷிதான் பிரதமர் பதவிக்கான சரியான ஆள், ஆனால், அவரது தோலின் நிறம் காரணமாக அவர் தோற்கடிக்கப்பட்டுவிட்டார் என்கிறார்கள் மக்கள்.

பிரித்தானியாவின் புதிய பிரதமர் எடுத்து வைத்த முதல் அடியே சறுக்கலாகியிருக்கிறது, அவருக்கு மட்டும் அல்ல, மொத்த பிரித்தானியாவுக்கும், இதற்கிடையில், தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல, தேவையில்லாமல் வாயை விட்டு பிரான்சுடனான உறவையும் கெடுத்துக்கொண்டுள்ளார் லிஸ் ட்ரஸ்.(Liz Truss)

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும்(Boris Johnson), உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேலும் நான்கு ஆண்டுகள் திட்டமிட்டு சட்ட விரோத அகதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுடன் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார்கள்.ஆனால், அதை ஒரே வார்த்தையில் குலைத்துவிட்டார் லிஸ் ட்ரஸ்.(Liz Truss)

பிரித்தானியாவில் பிரதருக்கான போட்டி மும்முரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி, நண்பரா எதிரியா என்ற கேள்வி லிஸ் ட்ரஸ்ஸிடம்(Liz Truss) கேட்கப்பட்டது.

அப்போது, மேக்ரான் நண்பரா அல்லது எதிரியா என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று பதிலளித்திருந்தார் லிஸ் ட்ரஸ். அந்த வார்த்தை பிரான்ஸ் தரப்பில் பெரும் எரிச்சலையூட்டியது.

இந்தப் பெண் லிஸ் ட்ரஸ்(Liz Truss) தன்னை யார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாள், இப்படி பேசியதற்கு அவள் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றே ஒருவர் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், மேக்ரான் குறித்த லிஸ் ட்ரஸ்ஸின் (Liz Truss)விமர்சனம் இப்போது வேலையைக் காட்டத்துவங்கியுள்ளது.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியாவுடன் செய்ய இருந்த ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டுவிட்டது பிரான்ஸ்.பிரான்சுடனான ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், ஏற்கனவே பொருளாதாரத்துடன் போராடிக்கொண்டிருக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கும், புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்துறைச் செயலருக்கும் மற்றொரு புதிய சவால் தயாராகியுள்ளது, சட்ட விரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதுதான் அது’ என தெரியவந்துள்ளது.

தலைமுடியை வெட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கனேடிய பெண்கள்!

Quick Share

ஈரானில் பொலிஸ் வன்முறைக்கு பலியான இளம்பெண்ணிற்கு ஆதரவாக கனடாவிலும் பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈரானில் பொலிஸ் தாக்குதலுக்கு பலியான Mahsa Amini பெயரில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், அவரது பெயரை குறிப்பிட்டே ஈரானிய பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி வீசினர்.

ஓராண்டுக்கு முன்னர் ஈரானில் இருந்து கனடாவின் ஒட்டாவா பகுதிக்கு குடியேறிய Rezaeian தெரிவிக்கையில், ஈரானில் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் Mahsa Amini என்பவருக்காக மட்டுமல்ல, ஈரானிய கொடுங்கோல் நிர்வாகத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் அனைத்து பெண்களுக்கானது என Rezaeian தெரிவித்துள்ளார்.

மேலும், போராட்டக்களத்தில் உள்ள அனைத்து பெண்களும் தற்போது Mahsa Amini தான் எனவும் Rezaeian தெரிவித்துள்ளார். ஈரானில் ஹிஜாப் உடை சரிவர அணியாததன் பெயரில் கைது செய்யப்பட்ட Mahsa Amini கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மூன்றாவது நாள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பற்றிக்கொள்ள, தற்போது 80கும் மேற்பட்ட நகரங்களில் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும், தங்கள் ஹிஜாப் உடைகளை பொதுவெளியில் தீயிட்டு கொளுத்தியும் தலைமுடியை வெட்டி வீசியும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

கைதியாக சிக்கிய உக்ரைன் வீரரின் அதிர்ச்சி தரும் புகைப்படங்கள் வெளியீடு

Quick Share

ரஷியாவால் உக்ரைன் வீரர் சிறை கைதியாக பிடிபடுவதற்கு முன் மற்றும் பின்பு உள்ள அதிர்ச்சி தரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய படையினரால் உக்ரைன் வீரர்கள் பலர் சிறை கைதிகளாக பிடிபடுகின்றனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். சிலரது நிலைமை என்னவென சரிவர தெரியவரவில்லை. 

இந்த நிலையில், ரஷியாவிடம் சிறை கைதியாக பிடிபடுவதற்கு முன் மற்றும் பின்னர் உக்ரைன் வீரர் மிக்கைலோ டையனோவ் எப்படி காணப்படுகிறார் என்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. கைதிகளான 205 பேரில் இவரும் ஒருவர். அதில், உக்ரைன் வீரரின் புகைப்படங்கள் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளன. 

இதுபற்றி உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், உக்ரைன் வீரர் மிக்கைலோ டையனோவ் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்களில் ஒருவர். ரஷியாவின் கைதியாக பிடிபட்டவர்களில் மற்றவர்களின் நிலைக்கு மாற்றாக, இவர் உயிர் பிழைத்து உள்ளார். இதுவே, ஜெனீவா ஒப்பந்தத்தின்படி ரஷியா எப்படி நடந்து கொள்கிறது என்பது தெளிவாக காட்டப்பட்டு உள்ளது.

வெட்கக்கேடான நாசிச மரபுகளை ரஷியா எப்படி தொடர்ந்து பின்பற்றி வருகிறது என்பதற்கும் இது எடுத்துக்காட்டு என தெரிவித்து உள்ளது. கைதியாவதற்கு முன் போர் வீரராக துப்பாக்கியை ஏந்தி காட்சி தரும் டையனோவ், சிறை பிடித்த பின்னர், தேகம் மெலிந்து, கண்கள் அமைந்த பகுதியில் வீங்கி, விகார தோற்றத்துடன் காணப்பட்டார். 

அவரது கைகள் மற்றும் முகம் ஆகியவற்றில் தழும்புகள், காயங்கள் ஆகியவை காணப்படுகின்றன. கீவ் ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவர் வைக்கப்பட்டு உள்ளார் என அவரது சகோதரி அலோனா லாவ்ருஷ்கோ கூறியுள்ளார். 

எனினும், மனரீதியாக டையனோவ் வலிமையுடன் காணப்படுகிறார். அவர் திரும்பி வந்ததற்காக மகிழ்ச்சி அடைந்து உள்ளார். நான் நடக்கிறேன். தூய காற்றை சுவாசிக்கிறேன் என்று டையனோவ் கூறினார் என அவரது சகோதரி கூறியுள்ளார். அவரது சிகிச்சைக்காக நிதி உதவி திரட்டும் முயற்சியில் சகோதரி மற்றும் அவரது மகள் ஈடுபட்டு உள்ளனர்

மருத்துவ உலகில் புதிய புரட்சி : புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்து.

Quick Share

இன்று உலகில் இந்தியா உட்பட வளரும் நாடுகளில் தீர்க்க முடியாத பிரச்சினையாக உள்ள நோய் புற்று நோய் ,ஒருவருக்கு புற்று நோய் ஏற்பட்டால் மேலும் வளராமல் தடுக்க முடியுமே தவிர குணப்படுத்த இயாலாது என்பதுதான் தற்போதைய மருத்துவத்துறையின் நிலையாக உள்ளது.

புற்று நோயினை குணமாக்கும் மருந்து:
புற்று நோயினை குணப்படுத்தவே முடியாது என்ற நிலையில் அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் மருத்துவ ஆரய்ய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்று நோய் 100 சதவீதம் குணப்படுத்தகூடிய டோஸ்டார்லிமாப் ( dostarlimap)என்ற மருந்தினை குடல் புற்று நோயாளிகளுக்கு கீமோ தெரபி மருத்துவ சிகிச்சை கொடுக்காமல் டோஸ்டார்லிமாப் மருந்து கொடுத்தே குணப்படுத்தியுள்ளனர்.

மருத்துவ சோதனையில் 18 நோயாளிகள்:
இந்த மருந்தானது மொத்தம் 18 நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கப்பட்டது , இதன் பிறகு எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்று அனைத்து சோதனையிலும் கேன்சர் உடலில் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது.

மருத்துவ உலகில் புதிய புரட்சி : புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்து

இந்த நோயாளிகள் சிலர் ஏற்கனவே பல்வேறு சிகிச்சைகள் எடுத்து புற்று நோய் குணமாகத நிலையில், டோஸ்டர்லிமாப் என்று மருந்து கொடுக்கப்பட்டு அவர்கள் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக அவர்களின் உடலில் எந்த விதமான சிகிச்சையும் செய்யவில்லை என்பதுதான் முக்கியமானது.

குணமான புற்றுநோய்:
பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுக்கும் நபர்களுக்கு, சிகிச்சைக்கு பின் பக்க விளைவுகள் இருக்கும்.ஆனால் இவர்களுக்கு அந்த மாதிரியான பக்க விளைவுகள் எதுவும் இல்லை. அதேபோல் சிகிச்சை அளிக்கப்பட்டு 25 மாதங்கள் கழிந்தும் அவர்களுக்கு மீண்டும் கேன்சர் செல்கள் எதுவும் தோன்றவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்திய மதிப்பில் இதன் சிகிச்சைக்கு இப்போதே ரூ. 9 லட்சத்தை தாண்டும் என கூறப்படுகிறது.

மருத்துவ உலகில் புதிய புரட்சி : புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்து

அதே சமயம் , இந்த மருந்து விற்பனைக்கு வரும் போது இதை விட கூடுதலாக இருக்கும் என கூறப்படுகிறது. அதே சமயம் இந்த மருந்தினை மற்ற மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதன் பிறகே இதனை உறுதிபடுத்த முடியும், மேலும் இந்த மருந்தானது மருத்துவ உலகில் வியபாரமாகும் போது சாமானியர்களுக்கும் பயன்படுத்தும் வகையில் இருக்குமா ? என்பது போன்ற கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ உலகில் புதிய புரட்சி : புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்து

இந்த நிலையில் எத்தனை காலத்தில் நோயாளிகளை குணமாக்கும் என்பதிலும் சில சந்தேகம் உள்ளதால் அதை பற்றி கூடுதல் ஆய்வுகளும் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மருத்துவ உலகில் அழிக்க முடியாத அரக்கனாக இருந்த புற்று நோயினை அழிக்கும் முதல் விதையாக இந்த ஆராய்ச்சி அமைந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அமெரிக்காவில் 47 குழந்தைகளுக்கு தந்தையான 30 வயது இளைஞன்!

Quick Share

அமெரிக்காவில் 30 வயதான இளைஞர் ஒருவர் இதுவரை 47 குழந்தைகளுக்கு தந்தையாக மாறியுள்ளார்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த கைல் கோர்டி (30) இவர் தற்போது 47 குழந்தைகளுக்கு தந்தையாகி விட்டார். இன்னும் 10 குழந்தைகளுக்கு தந்தையாக மாறவும் உள்ளார்.

இந்த குழந்தைகள் எல்லாம் அவர் விந்து தானம் செய்ததன் மூலம் பிறந்தவை ஆகும். உயிரணுக்களை தானம் செய்வதற்கான தனது விருப்பத்திற்கு வருத்தப்படவில்லை என்றாலும், அவரது முடிவு தனக்கு துணையை கண்டுபிடிப்பதை கடினமாக்கி உள்ளது என்று கைல் கூறுகிறார்.

அவருக்கு நீண்ட கால உறவுகள் யாரும் இல்லை. ஆனால் இப்போது அவரை நிறைய பெண்கள் அணுகுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக மட்டுமே வருகிறார்கள்.

அவர் கூறுகையில், பெரும்பாலான பெண்கள் என்னுடன் டேட்டிங் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. என் டேட்டிங் வாழ்க்கை பெரியளவு இல்லை, அதாவது நீண்டகால உறவுமுறை என்பது எனக்கு இல்லை.

என்னை புரிந்து கொண்டு ஏற்று கொள்ள ஒருவர் தேவை. நான் தற்போது உயிரணுக்கள் தானம் செய்யும் உலகச் சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன், என் குழந்தைகளை வெளிப்படையாகச் சந்திக்கிறேன். இதைச் செய்வதன் மூலம் நான் பெறும் மகிழ்ச்சி உலகின் மிகச் சிறந்த உணர்வு என கூறியுள்ளார்.

கனடாவில் 22 நிமிடங்களுக்கு ஒரு தடவை மரணிக்கும் பெண்கள்: வெளிவந்த அதிர்ச்சி காரணம்.

Quick Share

கனடவில் ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கு ஒரு தடவை பெண் ஒருவருக்கு மாரடைப்பினால் மரணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான பல மரணங்கள் தடுக்கப்படக்கூடியவை எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தேவையற்ற வகையில் மரணிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகில் மிகச் சிறந்த மருத்து சேவையைக் கொண்ட கனடாவில் பெண்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என இருதய நோய் நிபுணர் டொக்டர் பவுலா ஹார்வீ (Dr. Paula Harvey)தெரிவிக்கின்றார்.

டொக்டர் பவுலா றொரன்டோ மகளிர் மருத்துவ கல்லூரியின் பிரிவுத் தலைவர் என்பது குறிப்பிடத்த்ககது.

கனடாவில் பெண்கள் அதிகளவில் மரணிப்பதற்கு இருதய நோய்களே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

அதிக எண்ணிக்கையிலான இளம் பெண்கள் இருதய நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமண் போன்ற பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களுடன் ஒப்பீடு செய்யும் போது தற்பொழுது நாற்பதுகளைக் கொண்ட பெண்களுக்கு அதிகளவில் இரத்த அழுத்தம் ஏற்படுகின்றது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்களுக்கு ஏற்படக்கூடிய இருதய நோய்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும் என மருத்துவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இத்தாலி வரலாற்றை மாற்றி அமைக்கவிருக்கும் பெண்!

Quick Share

இத்தாலியின் வலது சாரி கட்சியை சேர்ந்த ஜியார்ஜியா மெலோனி பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பொருளாதார நிலை மோசமடைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இத்தாலியில் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மரியோ டிராகி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்ததைத் தொடர்ந்து பொதுத் தேர்தல் நடத்த முடிவானது. இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், இதுவரை எண்ணப்பட்ட 63 சதவீத வாக்குகளில் பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சி 26 சதவீதம் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.

கூட்டணி கட்சிகளான லீக் கட்சி 9 சதவீதமும், போர்ஜா இத்தாலியா கட்சி 8 சதவீதமும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் சார்பில் போட்டியிட்ட பெண் அரசியல்வாதியான ஜார்ஜியா மெலோனி பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜார்ஜியா மெலோனி இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மிகவும் வலதுசாரி அரசாங்கத்தின் தலைவராக நாட்டின் முதல் பெண் பிரதமராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். எனினும் இறுதி தேர்தல் முடிவுகள் இன்றிரவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானில் வலுக்கும் ஹிஜாப் போராட்டம்: இளம்பெண்ணை கொடூரமாக சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படைய...

Quick Share

ஈரானில் நாடு முழுவதும் பெண்களின் உரிமைகளுக்கு எதிராக ஆவேசமான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் பாதுகாப்புப் படையினரால் 20 வயது பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் . ஹதீஸ் நஜாஃபி (Hadis Najafi, 20) தனது நாட்டின் கடுமையான ஹிஜாப் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க தெருக்களில் இறங்கினார்.

கராஜியில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளத் தயாரானபோது, ​​அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, இதில் ​​ஆறு முறை தோட்டாக்களால் துளைக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.

டிக்டோக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் இளம் பெண் ஹதீஸ் நஜாஃபி, பாதுகாப்பு அதிகாரிகளால் கண்மூடித்தனமாக சுட்ட தோட்டாக்களால் மார்பு, முகம், கை மற்றும் கழுத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு வீடியோவில் ஹதீஸ் தனது பொன்னிற முடியை மீண்டும் போனிடெயிலில் கட்டி போராட்டத்தில் சேரத் தயாராகிறார். அதில் அவர் ஹிஜாப் அணியவில்லை மற்றும் ஆயுதங்கள் அல்லது சுவரொட்டிகளை ஏந்தவில்லை.

நாடு தழுவிய போராட்டங்கள் மீது ஈரான் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் கொடூரமான அடக்குமுறைகளை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிசூட்டுக்கு பின் ஹதீஸ் Ghaem மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து அவரது மருத்துவ பதிவுகள் ஹேக் செய்யப்பட்டபோது, ​​​​மூளை வீக்கத்தால் பாதிக்கப்பட்டு அவர் இறந்தார் என்பதை உறுதிப்படுத்தியது.

ஈரானின் கடுமையான ஹிஜாப் சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, நாட்டின் அறநெறிப் பொலிசாரால் அடித்துக் கொல்லப்பட்ட 22 வயதான மஹ்சா அமினியின் ( Mahsa Amini) மரணம் எதிர்ப்புக்களைத் தூண்டியது.

தெஹ்ரானில் ஈரானின் அறநெறிப் பொலிஸாரால் மஹ்சா கைது செய்யப்பட்டார் மற்றும் கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு அவர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்தார்.

ஈரானிய அதிகாரிகள் பின்னர் அவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறினர், அதை அவரது குடும்பத்தினர் கடுமையாக மறுத்தனர்.

மஹ்சாவின் மரணம் ஈரான் முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்களுடன் சர்வதேச எதிர்ப்பைத் தூண்டியது.

இந்த வெகுஜன போராட்டங்களின் போது குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் கிட்டத்தட்ட 2,000 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.

தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், பெண்களுக்கான கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரத் தடைகளால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் மஹ்சாவின் மரணம் ஈரானில் கோபத்தை ஏற்படுத்தியது.

பெண்கள் தங்கள் ஹிஜாப்களை அசைத்தும் தீயிலிட்டு எரித்தும் போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

ரஷ்ய பள்ளியில் பயங்கர துப்பாக்கி சூடு: 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி

Quick Share

ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் துப்பாக்கி சூடு.

ஐந்து குழந்தைகள் உட்பட 13 பேர் துப்பாக்கி சுட்டு பரிதாபமாக உயிரிழப்பு.

ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிழக்கே 600 மைல் தொலைவில் இஷெவ்ஸ்க்(Izhevsk) நகரம் உள்ளது, 6,00,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்த நகரத்தின் பள்ளி ஒன்றில் இன்று பயங்கர துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதில் ஏழு குழந்தைகள் உட்பட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு பாதுகாவலர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருப்பதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த தாக்குதலில் 20 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும், துப்பாக்கிதாரியின் உடல் சம்பவ இடத்தில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கம் இதுவரை தெளிவாகத் தெரிய வராத நிலையில், உட்முர்டியா பிராந்தியத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் ப்ரெச்சலோவ் பள்ளி எண் 88க்கு வந்து இருப்பதாக டெலிகிராம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீப வருடங்களில் ரஷ்யாவின் பல பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது,கடந்த மே 2021 இல், கசான் நகரில் டீனேஜ் துப்பாக்கிதாரி ஒருவர் ஏழு குழந்தைகளையும் இரண்டு பெரியவர்களையும் கொலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் வெடித்துள்ள போராட்டம்: தலைமறைவான புடின்!

Quick Share

உக்ரைன் தொடர்பில் ரஷ்யா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரகசிய மாளிகையில் விடுமுறையை கொண்டாட சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் போராட புதிதாக அணித்திரட்டும் ரஷ்ய ஜனாதிபதியின் திட்டம் பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் போர் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் சுமார் 300,000 மக்களை திரட்டும் பணியை புடின் முன்னெடுத்தார்.

மட்டுமின்றி, வீடு வீடாக சென்று ஆட்களை திரட்டும் பணிகளும் அதிகாரிகள் தரப்பில் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், இந்த படை திரட்டும் பணியானது எழைகள், சிறுபான்மையினரை குறிவைக்கும் திட்டமாக மாற வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனால், முக்கிய நகரங்களில் அதிகமாக போராட்டங்கள் ஏற்பட வாய்ப்பிருக்காது என புடின் நிர்வாகம் நம்பலாம் எனவும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையிலேயே, விளாடிமிர் புடின் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வனப்பகுதியில் அமைந்துள்ள தமது இரகசிய மாளிகைக்கு புடின் விடுமுறையை கொண்டாட சென்றிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. மேலும், அவரது படை திரட்டல் அறிவிப்பால் ஏற்பட்ட குழப்பத்தில் இருந்து தன்னை பாதுகாப்பான தூரத்தில் நிறுத்திக் கொள்ள புடின் விரும்புகிறார் என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த படை திரட்டும் உத்தரவால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், நாட்டைவிட்டு பெருந்திரளாக வெளியேறி வருகின்றனர். பொதுவாக மாஸ்கோவில் இருந்து துபாய் மாகாணம் வரை செல்லும் விமான கட்டணம் 181 பவுண்டுகள் என இருந்த நிலையில், தற்போது 8,000 பவுண்டுகள் என உச்சம் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

450 ஆண்டுகளுக்கு முன்னரே ராணியார் மரணத்தை கணித்த பிரெஞ்சு மேதை!

Quick Share

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் மரணத்தை 450 வருடங்களுக்கு முன்னரே பிரெஞ்சு மேதையான நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக புதிய புத்தகம் ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ராணியாரின் மறைவு தொடர்பில் ஒரு கவிதை வடிவில் பிரெஞ்சு மேதையான நாஸ்ட்ராடாமஸ் பதிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. லண்டன் நகரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து, ஹிட்லரின் எழுச்சி, இரண்டு உலக யுத்தங்கள், அதனால் ஐரோப்பாவுக்கு ஏற்படும் பேரழிவு என அவர் மொத்தமும் கணித்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், அவரது கணிப்புகளை ஆராய்ந்துள்ள Mario Reading என்ற புத்தக ஆசிரியரே, ராணியாரின் மறைவு தொடர்பில் நாஸ்ட்ராடாமஸ் 450 வருடங்களுக்கு முன்னரே கணித்துள்ளதை வெளிக்கொண்டுவந்துள்ளார்.

குறித்த தகவலை ராணியார் காலமான அன்று சமூக ஊடகங்களில் Mario Reading வெளியிட, அதுவரை வெறும் 8 புத்தகங்களே விற்பனையாகியிருந்த நிலையில், செப்டம்பர் 17ம் திகதி வரையில் 8,000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2006ல் முதன்முதலில் வெளியான இவரது புத்தகத்தில், ராணியாரின் மறைவு 2022ல் அவரது 96வது வயதில் நடக்கும் என நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், உக்ரைன் தொடர்பிலும், அதனால் பிரான்ஸ் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக Mario Reading தமது புத்தகத்தில் விளக்கமளித்துள்ளார்.

பிரெஞ்சு மேதையான நாஸ்ட்ராடாமஸ் 1566ல் இறக்கும் வரையில் மொத்தம் 6,338 கணிப்புகளை பதிவு செய்துள்ளார். அவரது பல கணிப்புகள் துல்லியமானவை என விளக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் உலக யுத்தம், செப்டம்பர் 11 தீவிரவாத தாக்குதல், பிரெஞ்சு புரட்சி, அணு ஆயுதம் உள்ளிட்டவை அவரால் கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை 70% கணிப்புகள் நிஜமானதாகவே அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி, இன்னும் சில ஆண்டுகளில் மக்கள் இன்னொரு உலக யுத்தத்தை எதிர்கொள்வார்கள் என அவர் கணித்துள்ளதாக நம்பப்படுகிறது.
You cannot copy content of this Website