உலகம்

3 மாதம் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் பெய்ததால் நிலைகுலைந்த நகரம் !!

Quick Share

பருவநிலை மற்றம் காரணமாக உலகின் பல்வேறு இடங்களை அளவுக்கு அதிகமான மழை பெய்துவருகிறது. சமீபத்தில் சீனாவில் பெய்த மழையால் பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அணைகள் உடையும் அளவுக்கு வெள்ளம் அடித்து சென்றது.

கடந்த செவ்வாய் கிழமை ஸ்பெயின் நாட்டில் கிழமை சில மாகாணங்களில் பெய்த கனமழையால் தற்போது ஒட்டுமொத்த நாடுமே நிலைகுலைந்து போயுள்ளது. அதிலும் செவில் என்ற மாகாணத்தில் 3 மாதங்கள் பெய்யவேண்டிய மழை வெறுமனே 20 நிமிடத்தில் கொட்டித்தீர்த்துள்ளது. செவில் மாகாணத்தில் உள்ள ஏமொட் வானிலை நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமை அன்று செவில் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்து இருந்ததாகக் கூறப்படுகிறது.

கனமழை காரணமானாக வெள்ளத்தில் வீடுகள், கார் என சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்ட காட்சி பார்ப்போரை பதைபதைக்க வைத்திருக்கிறது. 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, செவில் பகுதியில் வெறுமனே 20 நிமிடங்களில் கொட்டித் தீர்த்ததாகக் கூறப்படுகிறது. எஸ்டெபா என்ற பகுதியல் இடி மற்றும் மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் பல வீடுகள் சேதம் அடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கும் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் அதிரடி…! இன்னும் அப்ரூவல் வாங்கல…’ மொதல்ல நாங்க டெஸ்ட் பண்ணனும்…

Quick Share

ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா வைரஸிற்கான முதல் தடுப்பு மருந்தை ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் இதுநாள் வரை குறைந்த பாடில்லை. இந்நிலையில் தற்போது ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிந்துள்ளதாக செய்தியை வெளியிட்டது. மேலும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், தனது மகள்களுக்கு ஸ்புட்னிக்-5 என்று பெயரிடப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி, அதில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக அறிவித்திருந்தார். மேலும் வரும் அக்டோபர் மாதம் முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவரை இந்த ஸ்புட்னிக்-5 மருந்து உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் இன்று (13.08.2020) அறிவித்துள்ள செய்தி குறிப்பில் கொரோனா வைரஸிற்கு ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக கூறும் ஸ்புட்னிக்-5 மருந்தை ஆய்வு செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலோ, ஆய்வு முடிவுகளோ இல்லாமல் எவ்வாறு மக்களுக்கு செலுத்த முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய அரசு, உலக சுகாதார நிறுவனம் ஸ்புட்னிக்-5 மருந்தை ஆய்வு செய்து பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளதை வரவேற்றுள்ளது.

மேலும் உலக நாடுகள் அனைத்தும் உலக சுகாதார நிறுவனம் அதிகாரபூர்வமாக ஒப்புதலுக்காக காத்துக்கொண்டுள்ளனர் என கூறலாம்.

தனது கண்ணாடியை ஏலம் விட்ட மியா காலிஃபா- அதிர்ச்சி காரணம்

Quick Share

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் சுமார் 200 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டடத்தைச் சுற்றி 10 கி.மீ வரை இருந்த அனைத்து கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன. வெடிவிபத்துக்கு அரசின் அலட்சியமே காரணம் என மக்கள் வீதியில் திரள, ஒட்டுமொத்த அரசும் ராஜிமானா செய்தது.

லெபனானை பூர்வீகமாக கொண்ட ஆபாசப்பட முன்னாள் நடிகை மியா காலிஃபா, வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக தனது அடையாளங்களில் ஒன்றாக கண் கண்ணாடியை ஏலத்தில் விட்டுள்ளார்.

தற்போது வரை கண்ணாடியை வாங்குவதற்கான தொகை ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. “Anything for my country?” என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக, இந்திய தமிழ் வம்சாவளி பெண் கமலா..

Quick Share

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக, இந்திய தமிழ் வம்சாவளி பெண் கமலா ஹாரீஸை அறிவித்ததற்கு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வரவேற்றுள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி டிரம்ப்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடனும் களத்தில் உள்ளனர். இந்த அதிபர் தேர்தலின் துவக்கத்தில், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரீஸும் போட்டியில் இருந்தார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர். கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரால பதவி வகித்த கமலா ஹாரீஸ் 2016-ல் அம்மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கும் தேர்வானார்.

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் எதிர்கால தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுவர் கமலா ஹாரீஸ். கமலா ஹாரீஸ், ஜோ பிடன் , பெர்னி சாண்டெர்ஸ் ஆகியோர்தான் ஜனநாயக கட்சியில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களாக போட்டியில் இருந்தனர். பின்னர் கமலா ஹாரீஸ், நிதி சிக்கலை முன்வைத்து போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன் களத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் ஜோ பிடன், தாம் அமெரிக்க ஜனாதிபதி ஆனால் கமலா ஹாரீஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பேன் என அறிவித்தார். இது இப்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, ஒவ்வொரு ஜனாதிபதிக்கும் முதல் முக்கிய வேலையே, தங்களது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதுதான். நீங்கள் ஜனாதிபதியாக பணியாற்றும்போது, பல கடினமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்போது, அதுதொடர்பாக எடுக்கப்படும் முடிவு மக்களை நேரடியாக சென்றடையும் என்பதை மறக்கக் கூடாது.

அப்போது நீங்கள் எடுக்கும் முடிவு இந்த ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் சம்பந்தப்பட்டதாகும். அந்த சமயத்தில் உங்களுக்கு சரியான ஆலோசனையை சொல்ல ஒருவர் தேவை. அவர்தான் துணை ஜனாதிபதி. தன்னலம் கருதாமல் பிற உயிர்களையும் கருத்தில் கொள்ளும்படியான ஒருவர்தான் வேண்டும். அந்த வகையில் ஜோ பிடனின் தேர்வு சரியானது. கமலாவை அடுத்த துணை ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவித்ததன் மூலம் ஜோபிடன் போன்ற ஒருவரை அவரே அடையாளம் காட்டியுள்ளார்.

ஜோபிடனுக்கு உதவ சிறந்தவர் கிடைத்துவிட்டார். அவர் மூலம் அமெரிக்காவில் தற்போது இருக்கும் பிரச்சினைகள், ஆண்டாண்டாக இருந்து வரும் பிரச்சினைகள் ஆகியவற்றை சமாளிப்பதில் உதவுவார். செனட்டராக இருக்கும் ஹாரீஸை எனக்கு நீண்ட காலமாக தெரியும். கொடுத்த பணியை எதிர்பார்ப்புக்கு மேல் பூர்த்தி செய்யக் கூடியவர். அரசியலமைப்பை பாதுகாக்கவும் அனைவரின் உரிமைகளுக்காக போராடுவதிலும் அவர் தனது பணியை செய்துள்ளார். அவரது சொந்த வாழ்க்கை என்பது நான் மற்றும் பலர் சந்தித்ததை போன்றதுதான். எனவே ஒருவர் எங்கிருந்து துணை அதிபர் பதவிக்கு வந்தார் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இது உண்மையில் நம் நாட்டுக்கு நல்ல காலம். நாம் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.

எச் 1 பி விசாதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

Quick Share

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.

அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கு என்று முழங்கி வரும் அதிபர் டிரம்ப், எச் 1 பி விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். இதனால், எச் 1 பி விசாதாரர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

இந்த நிலையில், எச் 1 பி விசா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எச் 1 பி விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

தனது அத்தையை கொன்றுவிட்டு தப்பியோடிய கொலையாளியை அழகில் மயக்கி சிக்கவைத்த பெண்!

Quick Share

தனது அத்தையை கொலை செய்துவிட்டு பொலிசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த நபரை ஆசை காட்டி வெளியே வரச்செய்து, தனது அத்தையின் நினைவு நாள் அன்றே பொலிசில் சிக்கவைத்துள்ளார் ஒரு பெண். 2014ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 30ஆம் திகதி, தென்னாப்பிரிக்காவில் தான் நடத்தி வந்த லாட்ஜில் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார் Christine Robinson (59). உடற்கூறு ஆய்வில், அவர் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, முதலில் கழுத்து நெறித்து கொல்ல முயன்று, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

அவரது அறையிலிருந்த பணம் முதலான விலையுயர்ந்த பொருட்களைக் காணாததோடு, அந்த லாட்ஜில் தோட்டக்காரராக பணியாற்றிய Andrew Ndlovu (24) என்ற நபரும் மாயமாகியிருந்தான். CCTV கமெரா காட்சிகளில் அவன் கார் ஒன்றில் செல்வது பதிவாகியிருக்க, பொலிசார் அவனை மொபைலில் தொடர்புகொண்டனர். தனது தாய்நாடான ஜிம்பாபேக்கு செல்வதாக தெரிவித்த Ndlovu, அடுத்த நாள் பொலிஸ் விசாரணைக்கு வருவதாக ஒப்புக்கொண்டான். ஆனால், அதற்குப்பிறகு அவன் எங்கிருக்கிறான் என்ன ஆனான் என்பதே யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில், பிரித்தானியாவின் கென்டில் வாழும் Christineஇன் நெருங்கிய உறவினரான Lehanne Sergison (49)க்கு அத்தையின் மரணம் குறித்து தகவல் வந்துள்ளது. தான் பிறக்கும்போது ஒரு பதின்மவயது பெண்ணாக இருந்த Christineஉடன், மிகவும் நெருக்கமாக இருந்தவர் Lehanne. அப்படிப்பட்ட தனது அத்தை கொலை செய்யப்பட்ட தகவல் Lehanneஐ அதிர்ச்சியில் ஆழ்த்த, அதை விட முக்கியமாக குற்றவாளி தலைமறைவாகிவிட்ட செய்தி அவரை கோபமடையச் செய்துள்ளது. குற்றவாளியை கண்டுபிடிக்கும்படி பிரித்தானிய அரசியல்வாதிகள் முதல் யாரையெல்லாமோ அணுகியும் குற்றவாளி சிக்கவில்லை.

அத்தை இறந்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஆறு மாதங்களுக்கு முன் தானே தன் அத்தையைக் கொன்றவனை சிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினார் Lehanne. கணவர் மற்றும் உறவினர்களின் பிள்ளைகள் உதவியுடன் Missy Falcao என்ற பெயரில் போலியாக ஒரு பேஸ்புக் கணக்கை துவக்கினார் Lehanne. Ndlovu தென்னாப்பிரிக்காவில் இருப்பதால், தானும் தென்னாப்பிரிக்காவில் இருப்பது போலவே காட்டிக்கொண்டு தன்னை ஒரு அழகிய இளம் விமான பணிப்பெண்ணாக காட்டிக்கொண்டு Ndlovuவின் நண்பர்களுக்கு முதலில் பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து நண்பர்களாக்கிக்கொண்டு பின்னர் மெதுவாக Ndlovuவின் படங்களுக்கு லைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் Lehanne.

முதலில் Lehanneஐக் கண்டுகொள்ளாத Ndlovu, பின்னர் அவர் போட்டிருந்த புகைப்படத்திலுள்ள பெண்ணின் அழகில் மயங்கி அவருடன் பழக ஆரம்பித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு தன்னை சந்திக்க விரும்புவதாக Ndlovu கூற, பொலிசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார் Lehanne. ஆனால், குறிப்பிட்ட நாளில் தங்களால் வர இயலாது என்று கூறி பொலிசார் சொதப்பிவிட, அந்த வாய்ப்பு கைநழுவிப்போயிருக்கிறது. Ndlovuம் பேஸ்புக்கில் Lehanneக்கு பதிலளிப்பதை நிறுத்திவிட, அடுத்த கட்டமாக அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் அவர்.

ஜூலை 30ஆம் திகதி, தன் அத்தையின் நினைவு நாளான அன்று, தன் அத்தைக்கு ஒரு இரங்கல் அஞ்சலியை பேஸ்புக்கில் வெளியிட்டு, அத்துடன் Ndlovuவின் படத்தை போட்டு, ஆறு ஆண்டுகளுக்குமுன் இந்த நபர்தான் தனது அத்தையை வன்புணர்ந்து கொலை செய்துவிட்டதாக தான் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார். அந்த செய்தியை தென்னாப்பிரிக்க மனித உரிமைகள் அமைப்பு ஒன்று பகிர, சில மணி நேரங்களுக்குள் அந்த செய்தி 70,000 முறை பகிரப்பட்டிருக்கிறது.

சிறிது நேரத்தில் ஒரு பெண், தனக்கு Ndlovuவை தெரியும் என்றும் தங்கள் பண்ணையில் அவன் வேலை செய்வதாகவும் தெரிவித்ததோடு, இந்த செய்தியை அவனிடம் காட்டியதாகவும், அவன் அழுகையுடன் அது தான் இல்லை என்று கூறியதாகவும் Lehanneக்கு தகவலளித்துள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் Ndlovu கைது செய்யப்பட்டிருக்கிறான். ஆகத்து மாதம் 3ஆம் திகதி அவன் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். பொலிசார் செய்ய முடியாத ஒன்றை, அதன் அத்தையின் மீதான ஆளவுகடந்த அன்பினால் செய்து காட்டியிருக்கிறார் Lehanne.

அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு நற்செய்தி.., ஹெச்-1பி விசா பற்றிய முக்கிய அறிவி...

Quick Share

உலக நாடுகள் அனைத்தும் கொரோனவால் அதிகம் பாதிப்படைந்துள்ளது. இந்த பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் உள்நாட்டினருக்கே வேலை இல்லாதபோது வெளிநாட்டினருக்கு எப்படி வேலை தருவது என அதிபர் ட்ரம்ப் கடந்த ஜூன் மாதம் ஹெச்-1பி மற்றும் ஹெச்-4 விசாக்களை இந்தாண்டு இறுதிவரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

அரசு ஒப்பந்த பணிகளில் வெளிநாட்டினரை பணியில் அமர்த்தவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த விசா தளர்வு குறித்த அறிவிப்பை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “கடந்த ஜூன் 22ஆம் ஆண்டு ஹெச்-1பி விசாவுக்கு 2020 இறுதிவரை தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஏற்கனவே வேலை பார்த்தவர்கள் ஹெச்-1பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம். மேலும் அவர்கள் தாங்கள் வகித்த வேலையில் சேர்ந்து மீண்டும் பணியாற்றுவதாக இருந்தால் மட்டுமே அமெரிக்கா திரும்பலாம். ஹெச்-1பி விசா ஊழியர்கள் தங்களது மனைவி, குழந்தைகளையும் அழைத்து வரலாம்” என அறிக்கையில் குறிப்பட்டுள்ளது.

இதன் மூலம் பல இந்தியர்கள் மீண்டும் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எங்களையே மிரட்டுரியா.., பாக்கிஸ்தான் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்த சவூதி அரேபியா

Quick Share

பாகிஸ்தானின் மற்றும் சவூதி அரேபியா இடையே நல்ல நட்புறவு நீடித்து வருகிறது. 2018-ஆம் ஆண்டு பாகிஸ்தான் வந்த சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நட்பின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு பல்வேறு கடனுதவிகளையும், கச்சா எண்ணெய் கடனாகவும் வழங்கவும் ஒப்புதல் அளித்தார். பாகிஸ்தான் இதுவரை 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு பாகிஸ்தான் கடனுதவி பெற்றுள்ளது.

கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி சவுதியை எச்சரிக்கை கொடுக்கும் விதமாக, ‘காஷ்மீர் விவகாரத்தில் சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு இந்தியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்காவிட்டால் காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவாக உள்ள இஸ்லாமிய நாடுகளுடன் கூட்டத்தை நடத்த பிரதமர் இம்ரான்கானுக்கு நான் வேண்டுகோள் விடுப்பேன்.’ என கூறியுள்ளார்.

இந்நிலையில் காஷ்மீர் எல்லை பிரச்சனையில் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவை பெற பாகிஸ்தான் முயற்சி செய்தது. ஆனால் சவூதி அரேபியா அதற்கு செவி சாய்க்கும் நிலையில் இல்லை. தற்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி செய்தி நிகழ்ச்சியில் பேசிய பேச்சினால் கடுப்பாகிய சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் கடனாக வழங்கும் திட்டத்தை நிறுத்திக்கொண்டுள்ளது.

இந்த பேட்டி குறித்து அறிந்த சவுதி அரேபியா அரசு வெளியுறவுத்துறை அமைச்சரின் பேச்சு மிரட்டும் தொனியில் இருப்பதால் பாக்கிஸ்தான் உடனான உறவை துண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதனால் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 6.2 பில்லியன் டாலர்கள் கடனுதவியை சவுதி அரேபியா ரத்து செய்துள்ளது.

2018-ஆம் ஆண்டு அறிவிப்பின்படி 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த தொகையை உடனடியாக திரும்பித்தரும்படியும் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக இருக்கும் என பல அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இலங்கையில் முக்கிய அமைச்சர் பதவியை குடும்பத்தாருக்கு பங்கு போடு கொடுத்த மகிந்த ராஜபக்சே !!

Quick Share

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை மக்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றதிலிருந்து பல அதிரடி மாற்றங்களை செய்துவருகிறார். தற்போது அவர் தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றது.

கடந்த ஞாயிறன்று மகிந்த ராஜபக்சே பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், 28 கேபினட் அமைச்சர்கள், 40 இணை அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது.

ராணுவத் அமைச்சகத்தை கோத்தபயா வைத்துக் கொண்டார். நிதி உள்பட மூன்று முக்கிய துறைகள், மகிந்த ராஜபக்சேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்சேவின் மற்றொரு சகோதரர் சமல் ராஜபக்சே அவரின் மகன் சஹீந்திர ராஜபக்சே, மகிந்தவின் மகன் நமல் ராஜபக்சே ஆகியோரும் அமைச்சர்களாகி உள்ளனர்.

கண்டியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இவர்களுக்கு அதிபர் கோத்தபய பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி, சதாசிவம் வியாழேந்திரன், ஜீவன் தொண்டமான் ஆகிய 4 தமிழர்கள் இடம்பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10 வயது சிறுவனால் கர்ப்பமான 13 வயது பள்ளி மாணவி!

Quick Share

ரஷ்யாவில் 10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறிவரும் பாடசாலை மாணவி, தமக்கு சிகிச்சை அளிக்க மூன்று மகப்பேறு மருத்துவமனைகள் மறுத்ததாக கவலை தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் தமது 10 வயது காதலனால் கர்ப்பமானதாக கூறிவரும் 13 வயதான பாடசாலை மாணவி தாரியா சுட்னிஷ்னிகோவா தற்போது மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாம் குடியிருக்கும் நகரில் மூன்று மகப்பேறு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததை அடுத்து, இன்னொரு நகரில் அமைந்துள்ள மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் கவனத்தை ஈர்த்த குறித்த சிறுமி, தமக்கு சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பிருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், தேவை ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சிறுமியின் தாயார் மருத்துவமனையில் ஒப்புதல் அளித்துள்ளார். தாம் குடியிருக்கும் நகரில் இருந்து 40 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் நகரில் உள்ள மூன்று மகப்பேறு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளதை கவலையுடன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் தாம் பரவலாக அறியப்படுவதால் அந்த மறுத்துவமனை நிர்வாகங்கள் மறுத்தனவா அல்லது மகப்பேறில் ஏதேனும் சிக்கல் ஏற்படலாம் என அஞ்சியதாலா என தெரியவில்லை என்கிறார் அவர். ஆனால் தமக்கு இப்போதிருக்கும் கவலை என்பது, தற்போது தாம் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் மகப்பேறுக்கு உதவ பயிற்சி மருத்துவர்களை களமிறக்கியுள்ளனர்.

அந்த மருத்துவமனை நிர்வாகம் இங்கு பயிற்சி மருத்துவர்களைப் பயன்படுத்துவதை நான் கேள்விப்பட்டதால் நான் இங்கு மகப்பேறு சிகிச்சை எடுக்க விரும்பவில்லை என தமது சமூக ஊடக பக்கத்தில் சிறுமி தாரியா குறிப்பிட்டுள்ளார். ஆனால் இப்போது சிறப்பு மருத்துவர்களே மகப்பேறு சிகிச்சையை முன்னெடுக்க உள்ளதாக அறிந்ததில் நிம்மதியாக உள்ளது என தெரிவித்துள்ளார். தமது காதலன் ஈவன் 16 வயது நிரம்பிய பின்னரே தந்தை ஸ்தானம் ஏற்பார் எனவும், தம்முடன் அவர் இல்லை எனவும், சில நாட்களில் மட்டும் தம்முடன் தங்கிச் செல்வார் எனவும் தாரியா குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து!

Quick Share

கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே உலகமே அஞ்சி நடுங்குகிறது. இந்த வைரசின் பிடியில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கி தவிக்கின்றன. கொரோனாவுக்கு முடிவு கட்ட தடுப்பூசி ஒன்றுதான் ஆயுதமாக இருக்கும் என கருதப்படுகிறது. அதனால்தான் இதுவரை வேறு எந்த தொற்று நோய்க்கும் இல்லாத அளவில், கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இவற்றில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ உள்ளிட்ட 6 தடுப்பூசிகள் மட்டும் பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் ரஷியாவில் அந்த நாட்டின் ராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் சேர்ந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசி பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ள நிலையில், விரைவில் பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, அந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தயாராகி நேற்று பதிவு செய்யப்பட்டுவிட்டது.

இந்தத் தகவலை வெளியிட்ட ரஷ்ய அதிபர் புதின், கொரோனா தடுப்பூசிக்கு ’ஸ்புட்னிக் -வி’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் திறம்பட செயல்படுகிறது . இது ஒரு நிலையான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இந்த தடுப்பூசியானது, தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்டது. இந்த தடுப்பூசி ஆற்றல் மிக்கது என்பது சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது எனவும் தெரிய வந்துள்ளது” என்றார்.

இந்த நிலையில், ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பு “ பாதுகாப்பு ஆய்வுகளை மிகக் கடுமையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தரிக் ஜசரேவிக் ஜெனீவாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “ ரஷ்யாவின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். தடுப்பூசிக்கு முன் தகுதி அளிப்பது குறித்த நடை முறைகள் பற்றிய ஆலோசனை நடைபெறுகிறது. எந்த ஒரு தடுப்பூசிக்கும் முன் தகுதி அளிப்பது என்பது தேவையான பாதுகாப்பு மற்றும் திறன் அம்சங்களை கடுமையாக மதிப்பாய்வு செய்த பின்னரே இருக்கும்” என்றார்.

கோவிட்-19 தடுப்பூசி மீது குவியும் சந்தேகம்: பாதுகாப்பானதுதான் என ரஷ்யர்கள் நிரூபிப்பார்...

Quick Share

அமெரிக்காவின் சிறந்த தொற்று நோய்கள் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபாசி, ரஷ்யாவின் தடுப்பூசி குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்க ரஷ்யாவின் விரைவான முயற்சி மீதான சந்தேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் உள்ள மூத்த சுகாதார அதிகாரிகள் ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுப்புகின்றனர்.

உலகளவில் கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட முதல் தடுப்பூசி இது என புடின் கூறினார், ஆனால் அமெரிக்க சுகாதார செயலாளர் அலெக்ஸ் அசார் ரஷ்யாவின் கூற்றுக்களைக் கேவலப்படுத்தினார். தடுப்பூசி உருவாக்கப்படுவது ஒரு போட்டி அல்ல என்றும், வேகத்தை விட பாதுகாப்பும் செயல்திறனும் மிக முக்கியமானது என்றும் அலெக்ஸ் அசார் கூறினார்.

இதற்கிடையில், அமெரிக்காவின் சிறந்த தொற்று நோய்கள் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபாசி, ரஷ்யாவின் தடுப்பூசி குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை ரஷ்யர்கள் உண்மையில் நிரூபிப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

ரஷ்யாவின் நடவடிக்கை குறித்து விமர்சனங்களும் ஐரோப்பாவிலிருந்து வந்துள்ளன. ஜேர்மனிய சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், தடுப்பூசி போதுமான அளவு பரிசோதிக்கப்படாவிட்டால் மில்லியன் கணக்கானவர்களுக்கு தடுப்பூசி போடுவது ஆபத்தானது என்று எச்சரித்தார்.




You cannot copy content of this Website