உலகம்

ஆழ்ந்த வருத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்’.. இதுதான் காரணமா?.

Quick Share

சீனாவில் இருந்து முதன்முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் பரவி உள்ளது. அதில் குறிப்பாக அமெரிக்காவில் அதிகளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து இதை கட்டுக்குள் கொண்டு வர, அமெரிக்க வெள்ளை மாளிகையில் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வைரஸ் பரவலை தடுப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ” கொரோனா வைரஸ் அச்சத்தால் நான் எனது முகத்தை கைகளால் தொட்டு பார்த்தே ஒருவாரம் ஆகிவிட்டது’ என்றும் இதை நான் மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் கிண்டலாக பேசியுள்ளார்.

கடலுக்கு 2000 அடிக்கு கீழ் நடந்து செல்லும் அதிசய மீன்.. வைரலாகும் வீடியோ..

Quick Share

தவளை தோற்றத்தில் இருக்கும் மீனின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2000 அடிக்கு கீழே இந்த மீன் நடந்து செல்கிறது. தவளை தோற்றத்துடன் சற்று ஒத்துப்போகும் இந்த மீன், தவளை மீன் என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த மீன் தவளையை போலவே தாவி தாவி செல்லாமல் விலங்குகளை போலவே மெதுவாக நடந்து செல்கிறது.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மகளிர் தினம் : கைகள் இல்லாத சிறுமிக்கு செயற்கைக் கை அளித்த நடிகர்

Quick Share

கைகள் இல்லாத சிறுமிக்கு செயற்கைக் கை அளித்த நடிகர் கைகள் இல்லாமல் பிறந்த சிறுமி ஒருவருக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ஹாமில் கைகளை பரிசளித்துள்ளார்.பெல்லா டட்லாக் என்ற சிறுமி பிறக்கையிலேயே வலது கையில் நான்கு விரல்கள் மற்றும் இடது கை வலது கையை விட உயரம் குறைவானதாக இருந்தது.

இந்நிலையில்,டட்லாக் சிறுமி என்பதால், தானும் மற்ற சிறுமிகள் மாதிரி விளையாட வேண்டும் என ஆசை கொண்டு, செயற்கைக் கை வேண்டுமென ஓபன் பயோனிக் நிறுவனத்தில் விண்ணப்பித்திருந்தார். அந்த செயற்கை கை விலை உயர்ந்ததாக இருந்ததால், தனக்க்கு கை வேண்டுமென்பதற்காக டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.டட்லாக்கின் பதிவைப் பார்த்த ஹாலிவுட் நடிகர், மார்க் ஹாமில் ( இஅவர் ஸ்டார் வார்ஸ் என்ற படத்தில் ஸ்கை வாக்கர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்).அந்தப் பதிவை அவர் பார்த்துடன் பகிர்ந்து சிறுமிக்கு உதவ வேண்டுமென கேட்டுள்ளார்.இதனையடுத்து மக்கள் பலர் உதவி செய்தனர். அதன்படி 14 ஆயிரம் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் 10 லட்சம் டாலர்கள் நிதி அளித்திருந்தனர்.தற்போது, சிறுமிக்கு ஸ்டார் வார்ஸ் படத்தில் வருவது போன்ற செயற்கை கை பொருத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தொட்டது !!

Quick Share

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,552 மற்றும் பலியானோரின் எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுதும் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை எட்டியுள்ளது.

சீனாவுக்கு வெளியே இருக்கும் நாடுகளில் கரோனா தொற்று அபாயம் 17% அதிகரித்துள்ளதாக WHO உலகச் சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.

புதியதாக கொரோனா பாதிக்கப்பட்ட 143 பேரில் 30 பலியாகினர் 29 பேர் ஹூபேய் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஒருவர் ஹனான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தது. சீனாவில் மட்டும் சுமார் 53,276 கரோனா தொற்று நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

வீடுகளில் குவியல்..! குவியலாக.!! ‘கிடைக்கும் கொரோனா பிணங்கள்’…! பீதியில் மக்கள்..”

Quick Share

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் மட்டும் சுமார் ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் , பேர் இறந்துள்ளனர். இதனால் சீனா மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் கடும் அவதி பட்டு வருகிறார்கள்.

அதன் எதிரொலியாக இந்தியாவில் பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கொரோன வைரஸ் பரவால்ல தடுக்க மத்திய அரசு பல்லவேறு முயற்சிகள் செய்துவருகிறார்கள்.


அதன் முன்னோட்டமாக பொது இடங்களில் மக்கள் கூடுவதை முற்றிலும் தடுத்து வருகிறார்கள். மேலும் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணி நாய்க்கு கொரோனா பரவி உள்ளது என்று மக்கள் பதற்றம் அடைந்து வருகிறார்கள்.

தற்போது சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் ஒவ்வொரு குடும்பத்திலும் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் அந்த அந்த வீடுகளில் குவியல் குவியலாக காணப்படுகிறது. இதனை கண்ட மக்களை மேலும் மரண பீதியில் உள்ளனர்.

கொரானா பீதியால் வெறிச்சோடிக் காணப்படும் இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா.

Quick Share

கொரானா கிருமி தாக்குதல் எதிரொலியாக இஸ்லாமியர்களின் புனித நகரமாக மெக்கா வருவதற்கு விதிக்கப்பட்ட தடையால் அங்குள்ள காபா வெறிச்சோடிக் காணப்படுகிறது.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா தாக்குதலைத் தொடர்ந்து மெக்காவில் உள்ள காபாவுக்கு உம்ரா எனப்படும் புனிதப் பயணம் மேற்கொள்ள சவுதி அரசு தடை விதித்தது. இதனால் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் காபா பகுதி தற்போது யாருமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தற்போது அங்கு மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களும் நோய் தொற்று வராமல் தடுக்கும் வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 385.

Quick Share

 சீனாவின் வூகான் நகரில் இருந்த கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தனது கொடூரக் கரங்களால் உலகின் 89 நாடுகளில் உள்ள மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சீனாவில் மட்டும் 3 ஆயிரத்து 42 பேரைக் காவு வாங்கிய இந்த வைரஸ் அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 148 பேரையும், ஈரானில் 108 பேரையும் பலிவாங்கி உள்ளது. இந்த நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தலா 3 ஆயிரத்துக்கு மேல் இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கத்தினால் பெரும்பாலும் வயதானவர்களே உயிரிழந்தது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. 60 முதல் 80 வயதிற்கு மேற்பட்டவர்களின் உயிரிழப்பு 21 புள்ளி 9 விழுக்காடாகவும், 50 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2 விழுக்காடாகவும், அந்த வயதிற்கு கீழ் உள்ளவர்கள் புள்ளி 2 முதல் ஒன்று புள்ளி 3 விழுக்காடு வரை உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

அமெரிக்காவில் கொரோனா தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உள்ள நிலையில் 221 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. விஷக்கிருமியின் தாக்கத்தினால் அமெரிக்க பங்குச் சந்தை சுமார் ஆயிரம் புள்ளிகள் குறைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா முன்னேற்பாட்டுப் பணிகளுக்காக சுமார் 8 புள்ளி 3 பில்லியன் டாலரை செலவிட செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் பிரான்சில் கொரானாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 423 ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் தற்போது கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட ஒருவர் உயிரிழந்திருப்பது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் தற்போது 17 பேருக்கு கொரோனாவின் தாக்கம் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் கொரோனா கிருமி தாக்குதல் காரணமாக கடந்த மாதத்தில் 7 ஆயிரம் விமான சேவைகளை நிறுத்தியுள்ளதாக லுப்தான்ஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரானா வைரசால் ஒருவர் 2ஆவது முறையும் பாதிக்கப்பட வாய்ப்பு.

Quick Share

கொரானா வைரசிற்காக தற்போது கொடுக்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலாற்றினாலும், அது நீண்டகாலம் நீடிக்க வாய்ப்பில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,

கொரானா வைரஸ் தொடர்பாக உலக மக்களிடையே அச்சத்துடன் பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன. இதில் முக்கியமாக ஏற்கனவே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டவர்களுக்கு, மீண்டும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற சந்தேகம் அதிகளவில் எழுந்துள்ளது.

இந்நிலையில், சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்தவர்களுக்கும் மீண்டும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக, சீனாவின் தேசிய சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

நாய்களுக்கும் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் – பீதியில் மக்கள்

Quick Share

னாவின் ஹாங்காங் நகரில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவருகிறது. இந்த நிலையில் நாய் ஒன்றுக்கு இந்த
வைரஸ் அறிகுறி உள்ளது என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் பல ஆயிரம் மக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர். சீனாவில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படித்துள்ளார். 3000 பேர் இறந்தும், 6000 தீவிர சிகிச்சையிலும் உள்ளனர். மேலும் இந்தியா போன்ற பல்வேறு உலக நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த ஒரு சூழலில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசும் பல்வேறு நடவடிகைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு நாய்க்கு கூட இந்த கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளது. என ஹாங்காங் விவசாயம் மற்றும் மீன்வள துறை அறிவித்துள்ளனர். அந்த நாயின் உரிமையாளருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் அதன் காரணமாக பரவி இருக்கலாம் என கூறியுள்ளனர்.
60 வயது பெண்மையின் ஒருவருக்கு குறைந்த அளவில் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அவரது செல்லப்பிராணிக்கும் பொமரேனியனின் நாய்க்கும் மருத்துவர்கள் சோதனை செய்து உள்ளனர்.

இதன் பிறகு இந்த நாயை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டுஉள்ளார்களாம்.இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் இதுவரை எந்த செல்லப்பிராணிக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பின் மீண்டும்..கலமிறங்கும் ஜான் சீனா..

Quick Share

அமெரிக்காவில் நடைபெற்று வரும் குத்து சண்டை WWE இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் WWE என்று அழைக்கப்படுகிறார்கள் இந்த நிகழ்ச்சிக்கு அமெரிக்காவை விட இந்தியாவில் தான் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். இந்த குத்து சண்டையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

இந்த WWE-குத்து சண்டையில் பங்கு பெரும் வீரர்களுக்கு தனித்தனியே ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதில் அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள வீரர் ‘ஜான் சீனா’ தான்.

இந்த WWE போட்டியில் கடந்த 2002ம் ஆண்டு முதல் பங்குபெற்று வருகிறார். இதில் இதுவரை 16 முறை உலக சாம்பியன் பட்டத்தையும், அமெரிக்க டைட்டில்களையும், மற்றும் டேக் டீம் சாம்பியன்ஷிப் டைட்டிலும் வேண்டு காட்டியுள்ளார்.

இந்தநிலையில் ஜான் சீனா கடந்த 2019ம் ஆண்டு WWE போட்டியில் இருந்து நான் ஓய்வு பெற போகிறேன் என்று கூறினார். மேலும் ஹாலிவுட் படமான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் சீசன்-9 ல் நடிக்க ஒப்பந்தமாக்கினார்.

தற்போது வரவிற்கும் ரஸ்ஸில்மேனியா 36-ல் மீண்டும் பங்கு பெறப்போகிறேன் என்று கூறினார் அத்துடன் அந்த செய்தியை தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஆரவாரத்தில் கொண்டாடி வருகிறார்கள்

கொரோனா அறிகுறிகளை இ ப்படி கண்டுபிடிக்கலாம்!

Quick Share

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு, இந்த ஆ பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தேவையான வழிமுறைகளை எடுக்கப்பட்டுள்ளதுடன், பொது மக்கள் க வனமாக இ ருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, அடிக்கடி கைகளை சவர்காரமிட்டு கழுவிக் கொள்ளுதல், பொது இடங்களில் கைகளினால் முகத்தை தொ டுதலை த விர்த்தல், து ம்மலின் போது ரிசு அல்லது கைக்குட்டையை பயன்படுத்தல் என்பன அத்தியாவசியமாகும்.

காய்ச்சல், தடுமல், மூச்சு எடுப்பதில் சிரமம் போன்ற அ றிகுறிகள் ஏற்படுமாயின் பொதுமக்கள் நடமாடும் இடங்களிலிருந்து விலகி இ ருந்தல் கட்டாயமாகும்.

கடந்த 14 நாட்களுக்குள் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தால் அது தொடர்பில் வைத்தியர் ஒருவரிடம் சென்று ப ரிசோதிப்பது முக்கியமாகும் 

கொரோனா பாதிப்பால் இத்தாலி, தென்கொரிய உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விசா ரத்து மத்திய அரசு அதிர...

Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தால் இன்று மத்திய அரசு இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே சீனர்களுக்கான விசா ரத்து செய்யப்பட்டதும் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்தது.

உலகம் முழுவதும் 50கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் தொற்றியுள்ளது. பல நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் பல நாடுகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தென்கொரியா, இத்தாலி, ஈரான் மற்றும் ஜப்பான் நாடுகளில் முக்கிய அதிகாரிகள் இந்தியா வர விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரேனும் இந்தியா வர விரும்பினால் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும், அதேநேரத்தில் போதுமான மருத்துவ பரிசோதனை செய்த பின்பே அனுமதிக்கப்படுவர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து யாரும் இந்தியா வர வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் கேட்டுக்கொண்டுள்ளது.
You cannot copy content of this Website