உலகம்

கனேடிய பிரதமர் ட்ரூடோவின் அறிவிப்பால் கதிகலங்கிய அமெரிக்கா!

Quick Share

அமெரிக்கா, சீனாவிற்கு இடையே இருக்கும் பிரச்சனை இப்போது சர்வதேச அளவில் பெரிய பிரச்சனையாக உருமாறிக் கொண்டிருக்கிறது. கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து 2018-ம் சீனாவில் இருந்து, அமெரிக்கா இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது வரி விதித்தது அமெரிக்கா. இதனால், அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், சீனா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதையடுத்து அமெரிக்கா வரியை அதிகரிக்க, அதற்கு பதிலடியாக சீனா வரியை அதிகரிக்க என வர்த்தகப் பிரச்சனை காலப்போக்கில் ஒரு வர்த்தக போராகவே மாறிவிட்டது. இன்று வரை இதற்கு ஒரு சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், தற்போது கனடா உடன் இன்னொரு வர்த்தகப் பிரச்சனையைத் தொடங்கி இருக்கிறது அமெரிக்கா. கனடாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் கனடா நாட்டின் சில அலுமினியப் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படுவதாக தெரிவித்தார். குறித்த வரி, கனடா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யபப்டும் raw aluminum மற்றும் un-alloyed aluminum போன்றவைகளுக்கு தான் பொருந்தும் எனவும் downstream aluminum போன்றவைகளுக்கு எல்லாம் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே கனடா போராடி வரும் நிலையில், அமெரிக்காவில் திடீர் இந்த கூடுதல் வரி விதிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ, கனடாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக அமெரிக்கா தொடர்ந்து இது போல உலக நாடுகள் பலவற்றுடன் பகையை வளர்த்துக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது என அமெரிக்க அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வட அமெரிக்க பொருளாதார ஒப்பந்தத்தை மீறி டிரம்ப் அரசு செயல்படுவதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஒப்பந்தம் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இடையே போடப்பட்டது. அமெரிக்கா தன்னை அமெரிக்க நாடுகளில் பெரிய நாடாக காட்டிக்கொள்ள இவ்வாறு செய்கிறது என கனடா குற்றம் சாட்டுகிறது.

கொரோனாவிலிருந்து மீள அனைத்து நாடுகளும் ஒன்றாக போராட வேண்டும் – உலக சுகாதார அமைப்பு!

Quick Share

உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகின் பல்வேறு நாடுகள் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இது குறித்து ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில், காணொலி காட்சி மூலம் அதன் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது;-

கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் தேசியவாதத்தைக் காட்டுவது மிகவும் தவறானதாகும். அத்தகைய சுயநலத்தால் யாருக்கும் நன்மை ஏற்படாது. கொரோனா நோய்த்தொற்றின் பிடியிலிருந்து உலகம் விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். காரணம், இது உலகமய காலக்கட்டம். தற்போதெல்லாம் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது.

இத்தகைய சூழலில், உலகின் மற்ற நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவிக் கொண்டிருந்தாலும், தங்கள் நாட்டுக்கு மட்டும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற்றுவிடலாம் என்று நினைப்பது மிகவும் தவறு” என்று அவா் கூறியுள்ளார்.

உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.28 லட்சத்தை கடந்தது!

Quick Share

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.28 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.97 கோடியை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 1.27 கோடியைக் கடந்துள்ளது.

ஒரே மாதிரி தோற்றம் கொண்ட தாயும் மகளும்! மகளது கணவன் செய்த தலைகுனியவைத்த செயல்!!

Quick Share

அமெரிக்காவில் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட ஒரு தாயையும் மகளையும் வித்தியாசம் காணமுடியாமல் அவர்களது கணவர்களே திணறிப்போகிறார்களாம்.

முறையே ப்ளோரிடா மற்றும் நியூயார்க்கில் வாழும் Dawn Hubsher (60) மற்றும் Cher Hubsher (30) இருவரையும் அருகருகே பார்ப்பவர்கள், அவர்களை இரட்டையர்கள் என்றே எண்ணிவிடுகிறார்களாம்.

ஆனால், உண்மையில் அவர்கள் தாயும் மகளும்… இன்ஸ்டாகிராமில் 75,000 ரசிகர்களைக் கொண்ட இந்த அதிசய ஜோடி, சமயத்தில் குடும்பத்திலுள்ளவர்களையே குழப்பமடையச் செய்துவிடுகிறார்களாம்.

அப்படித்தான் ஒரு முறை இருவரும் ஒரே மாதிரியாக உடை உடுத்திக்கொண்டு நிற்க, Cherஇன் கணவர் Jared Gopman (30), நேராக மாமியாரிடம் சென்று அவரை தன் மனைவி என்று எண்ணி, அவரது பின் பக்கத்தை தட்டிவிட்டாராம்.

பின்னர் உண்மை தெரிந்ததும் வெட்கத்தில் தலைகுனிந்ததும் Jaredதான். ஒரு முறை, Cherஇன் தாயுடைய தோழி ஒருவர், அவரை Dawn என்று எண்ணி, அவர் பாட்டுக்கு கதை விட ஆரம்பித்துவிட்டாராம்

இப்படித்தான் அடிக்கடி குழப்பங்கள் நடந்தாலும், தாயும் மகளும் அதையும் என்ஜாய் செய்து நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

கொரோனாவுக்கு எதிராக செயல்படும் சிறந்த தடுப்பூசி – இஸ்ரேல் அறிவிப்பு!

Quick Share

கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் முழுவீச்சில் இறங்கி உள்ளன. அவற்றில் இஸ்ரேலும் ஒன்று. இஸ்ரேலில் தடுப்பூசி உருவாக்கும் திட்ட நிலவரத்தின் முன்னேற்றம் குறித்து கேட்டு அறிவதற்காக ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ், அங்கு தனது அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘ஐஐபிஆர்’ என அழைக்கப்படுகிற இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நேற்று சென்றார். அதன் இயக்குனர் பேராசிரியர் ஷபிராவை அவர் சந்தித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து பேராசிரியர் ஷபிரா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், “கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது. குறிப்பிட்ட கால அட்டவணையின் அடிப்படையில் தடுப்பூசி கடந்து செல்ல வேண்டிய ஒழுங்குமுறை செயல்முறைகள் உள்ளன. இலையுதிர் கால விடுமுறைக்கு பின்னர் நாங்கள் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளை தொடங்குவோம்” என கூறி உள்ளார்.

இது தொடர்பாக ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ் கூறும்போது, “ இஸ்ரேலில் ஐ.ஐ.பி.ஆர். உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனை, இலையுதிர் கால விடுமுறைக்கு பின்னர் தொடங்கும்” என தெரிவித்தார்.

எச்சரிக்கை விடுத்த பில்கேட்ஸ்…! கொரோனாவை விட பேராபத்தை சந்திக்க போகிறோம்…

Quick Share

உலகம் முழுவதும் கொரோனாவால் பல நாடுகளும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் பல பொருளாதரம் பாதித்து பல மக்களும் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில், 2015-ஆம் ஆண்டு உலகளாவிய தொற்றுநோயால் ஏற்படக்கூடிய பேரழிவுக் குறித்து, பில்கேட்ஸ் எச்சரிக்கை செய்திருந்தார்.

அதில் காஸ்மட்டிக்ஸ் தயாரிப்பில் பல பில்லியன் செலவிடும் நிறுவனங்கள் இனி பரவ போகும் நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்புகளுக்கு செலவழிக்கலாம் என கூறினார். அதுபோலவே இன்று வரை கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது.

தற்போது, மீண்டும் காலநிலை மாற்றம் குறித்து எச்சரித்துள்ளார். தனது இணையதளத்தில் ‘தொற்று நோயைப் உள்ளிட்டே காலநிலை மாற்றமும் பாரதூரமாக இருக்கலாம்’ என்று கூறியிருக்கிறார்.

அதில் கூறியதாவது, இந்த கொரோனா நோய் தொற்று போலவே மீண்டும் மிக மாபெரும் மக்கள் அழிவை நாம் சந்திக்க நேரிடும், அதற்கு மக்களாகிய நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது ஏற்படும் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை அதிகரித்து சுமார் 1,00,000-த்திற்கும் மேற்பட்டோர் கூட இறக்க நேரிடும்’ எனக் கூறியுள்ளார்.

‘உலகம் இயற்கையை கவனிக்காமல் இப்படியே சென்றால் இது அடுத்து 40 ஆண்டுகளில் இது நடக்க கூடும்’ என மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

மனைவி நடத்தையில் சந்தேகம்.., மூக்கு அறுக்கப்பட்ட தவித்த பெண்ணுக்கு டாக்டர் செய்த உதவி !!

Quick Share

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலைநகர் காபூலில் இருந்து 250 கி.லோ மீட்டர் தொலைவுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் சார்கா(28). ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவரை சிறுவயதிலேயே, இவருடைய உறவினர் ஒருவர் ஏமாற்றி திருமணம் செய்து உள்ளார்.

28 வயதாகும் சார்காவிற்கு 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். கணவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சார்காவை அடிப்பதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருந்திருக்கிறார். இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத சார்கா தனது தகப்பனார் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் சார்காவின் தந்தை வீட்டிற்கு சென்று அழைத்து வந்து ஏன் என்னிடம் சொல்லாமல் போனாய், எனக்கு அவமானமாகிவிட்டது என்று துன்புறுத்தியிருக்கிறார். வீட்டிற்கு பின்புறம் கூட்டிச்சென்று திடீரென சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து சார்காவின் மூக்கையும் அறுத்து எரிந்துள்ளார்.

சார்கா ரத்தம் சொட்ட சொட்ட நின்றிருந்த சார்காவை அங்கேயே விட்டுவிட்டு சென்றதகாகவும் தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தக் கிராமத்தில் சரியான சிகிச்சை வசதிகள் இல்லாம் உள்ளூர் தலைவர்கள் பல முறை போராடி அனுமதி பெற்று சிகிச்சைக்காக பல நாட்கள் கழித்து காபூலுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

சிகிச்சை சரியில்லாததால் முக அமைப்பே மாறியிருந்தது. முதலில் காயத்தின் மீதிருந்த செப்டிக்கை அகற்றவே பல நாட்கள் பிடித்தது என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த Dr.சால்மாய் குறிப்பிட்டு இருக்கிறார். இஸ்லாமிய சட்டத்தின் படி முகமாற்று அறுவை சிகிச்சை செய்வது பாவம் எனக் கருதப்படுகிறது. ஆப்கனில் இதற்கு வசதி குறைவு என்பதும் குறிப்பிடத்தகக்து.

சார்காவின் நிலைமையை பத்திரிக்கை வழியாக தெரிந்து கொண்ட மருத்துவர் Dr.சால்மாய் தானாக முன்வந்து இவருக்கு சிகிச்சை அளித்து இருக்கிறார். Dr.சால்மாய் செயலை பாராட்டியுள்ளனர்.

62 வயது கோடீஸ்வரரை மணந்து கொண்ட 22 வயது இளம்பெண்! வாழ்க்கை எப்படி இருக்கிறது?

Quick Share

அமெரிக்காவில் 62 வயதான பெரும் கோடீஸ்வரரை 22 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட நிலையில் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கோடீஸ்வர தொழிலதிபரான Bill Hutchinson (62) டெக்ஸாஸில் உள்ள உணவகம் ஒன்றில் Ramirez (22) என்ற அழகிய இளம்பெண்ணை சந்தித்தார்.

இருவரும் நட்பான நிலையில் பின்னர் காதலர்களாகி தற்போது தம்பதிகளாக மாறியுள்ளனர்.

Hutchinson-ஐ சந்தித்த போது அவர் ஒரு கோடீஸ்வரர் என்பதை Ramirez உணர்ந்திருக்கவில்லை.

இருவருக்கும் 40 வயது வித்தியாசம் உள்ள நிலையில் தங்கள் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பேசியுள்ளனர்.

Hutchinson கூறுகையில், பெண்கள் ஆண்களை விட முதிர்ச்சியுள்ளவர்கள் என்று நான் நினைக்கிறேன், என் வயதிற்கு நான் மிகவும் முதிர்ச்சியற்றவன் என்றே கருதுகிறேன்.

எனக்கும் Ramirez-க்கும் இடையில் நல்ல புரிதல் உள்ளது, நாங்கள் இருவரும் மிகவும் அரிதாகவே வாக்குவாதம் செய்வோம்.

எங்களின் உறவு உண்மையானது, என்னுடைய இரண்டு திருமணங்கள் தோல்வியில் முடிந்தது, ஆனால் Ramirez உடனனான திருமணம் அப்படியில்லை என கூறியுள்ளார்.

Ramirez கூறுகையில், என் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது.

என் கணவரின் பிள்ளைகளுக்கு நான் வளர்ப்பு தாயாக இருக்கிறேன். தாய்மைப் பாத்திரத்தை நிரப்ப இது அனுமதிக்கிறது.

அவர்களுக்கு ஒரு தாய் இருக்கிறார், ஆனாலும் நான் தாய் ஸ்தானத்தில் இருப்பது திருபதியளிக்கிறது என கூறியுள்ளார்.

சீனாவில் பரவும் மற்றொரு வைரஸ்…வெளிவந்த தகவல்

Quick Share

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவிய வைரஸ், உலகையே ஆட்டி படைத்து வருகிறது. இந்நிலையில், ஒரு புதிய வைரஸால் பாதிக்கப்பட்ட ஜியாங்சுவின் தலைநகரான நாஞ்சிங்கைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன.

தொற்று பாதிப்பு ஏற்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலின் உள்ளே லுகோசைட் அதாவது ரத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், மற்றும்  ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கை குறந்துள்ளதை கண்டறிந்தனர். ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

Tick-borne virus எனப்படும் இந்த வைரஸால் பரவும் ஒரு புதிய தொற்று நோயினால்,  சீனாவில் ஏழு பேர் இறந்து விட்டனர். இதுவரை 60 பேருக்கு இந்த தொற்று பரவியுள்ளது என சீனாவில் உள்ள அதிகாரப்பூர்வ ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. இது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் Severe Fever with Thrombocytopenia Syndrome Bunyavirus அல்லது SFTSV  என அடையாளம் காணப்பட்டுள்ளது.  அதாவது கடுமையான காய்ச்சலுடன், ரத்தத்தின்  வெள்ளை அணுக்கள் மற்றும் உயிரணுக்கள் மிகவும் குறைவாக உள்ள நிலை ஆகும்.

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்க்சு மாகாணத்தில் 37 பேருக்கும், அன்ஹுயீ மாகாணத்தில் 23 பேருக்கும் இந்த தொற்று பரவியுள்ளதாக, சீனாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

SFTS வைரஸ் ஒரு புதிய வைரஸ் அல்ல. 2011 ஆம் ஆண்டிலேயே சீனா வைரஸின் நோய்க்கிருமியை கண்டறிந்துள்ளது.

வைரஸ் வல்லுநர்கள் இந்த நோய்த்தொற்று மனிதர்களுக்கு உண்ணி மூலம் பரவி இருக்கலாம் என்றும் வைரஸ் மனிதர்கள் இடகிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடும் என்றும் எச்சரிக்கிறது.

இந்த புதிய வைரஸ் பாதிப்பு உள்ள நோயாளிகளின் இரத்தம் அல்லது சளி மூலமாக மற்றவர்களுக்கு இந்த வைரஸ் பரவலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் வரை, இதுபோன்ற வைரஸ் தொற்று குறித்து பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கல் கூறியுள்ளனர்.

சீனாவில் பூச்சிகள் மூலம் பரவும் புதிய வைரஸ் 7 பேர் உயிரிழப்பு !

Quick Share

கொரோனா வைரஸிலிருந்து இன்னும் மீள முடியாத நிலையில் தற்போது பூச்சிகள் மூலம் புதிய வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பூச்சிகள் மூலம் பரவும் வைரஸால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சு மாநிலத்தில் இதுவரை 37-க்கும் மேற்பட்டோரும், அன்ஹூ மாநிலத்தில் 23 பேரும் எஸ்எப்டிஎஸ் எனும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த ஒரு பெண் இந்த எஸ்எப்டிஎஸ் வைரஸால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல், இருமலுடன் சிகிச்சை பெற்றார். இது தவிர கிழக்கு சீனாவில் உள்ள ஹிஜியாங் மாகாணம் மற்றும் அன்ஹூ மாகாணத்தில் இதுவரை 7 பேர் இந்த எஸ்எப்டிஎஸ் வைரஸால் உயிரிழந்துள்ளனர். எஸ்எப்டிஎஸ் வைரஸ் சீனாவுக்கு புதிதானது இல்லை. கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து சீனாவில் இருக்கும் இந்த வைரஸ் பன்யா வைரஸ் பிரிவைச் சேர்ந்ததாகும். அதாவது உண்ணி, நச்சு ஈ, வண்டுகளில் இருந்து அது மனிதர்களைக் கடித்தல் மூலம் பரவும் வைரஸாகும்.

ஹிஜியாங் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் ஹெங் ஜி பாங் கூறுகையில் ‘எஸ்எப்டிஎஸ் வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. ஒரு நோயாளியின் உடலில் ரத்தம், சளி மூலம் மற்றவருக்கு பரவும் தன்மை உடையது. ஆதலால், மக்கள் பூச்சிக் கடிகள் மூலம் கவனமாக இருத்தல் வேண்டும், மற்றவகையில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை’ எனத் தெரிவித்துள்ளார். இந்த வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு தீவிரமான காய்ச்சல், ரத்த சிவப்பு அணுக்கள் குறைதல், வெள்ளை அணுக்கள் குறைதல், வயிறு தொடர்பான சிக்கல்கள், உடல்தசை வலி, நரம்பு ரீதியான பிரச்சனைகள் போன்றவை வரலாம்.

கொரோனாவிலிருந்து மீண்டவர்களில் 100 பேரில் 90 பேருக்கு நுரையீரல் சேதம்!

Quick Share

சீனாவின் மத்திய நகரமான உகானில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று வெளிப்பட்டது. அங்கு கொரோனாவில் இருந்து மீண்டுள்ள 100 பேரை உகான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் ஆஸ்பத்திரி கடந்த ஏப்ரல் மாதம் முதல் கண்காணித்து வந்தது. இவர்களின் சராசரி வயது 59. ஜூலையுடன் முடிந்த முதல் கட்ட முடிவில், இந்த 100 பேரில் 90 பேர் நுரையீரல் சேதம் அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது இவர்களின் நுரையீரல் காற்றோட்டம், வாயு பரிமாற்ற செயல்பாடுகள், ஆரோக்கியமான மற்றவர்களின் நிலைக்கு மீள வில்லை. டாக்டர் பெங் ஜியோங் தலைமையிலான குழுவினர்தான் இந்த ஆய்வை நடத்தி உள்ளனர்.

கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகும் ஆக்சிஜன் எந்திரங்களை நம்ப வேண்டியதிருக்கிறது என பீஜிங் பல்கலைக்கழகத்தின் டோங்ஸிமென் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர் லியாங் டெங்ஸியாவ் கூறி உள்ளார். மேலும் கொரோனா பாதித்து மீண்ட 65 வயதுக்குட்பட்டோரில் 10 சதவீதம்பேரின் உடலில் நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடி) மறைந்து விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

19 கிலோ வயிற்றுடன் அல்லாடும் பெண்: பரிசோதனையில் அதிர்ந்த மருத்துவர்கள்!

Quick Share

சீனாவில் உள்ள ஒரு பெண்ணின் வயிறானது பெரிய அளவில் வீங்கியதால் அவர் தூங்கக்கூட முடியாமல் வேதனை அடைந்துள்ளார். சீனாவைச் சேர்ந்தவர் ஹுவாங் குவாக்சியன். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது வயிறு தற்போது வரை வீங்கிக் கொண்டு சென்றிருக்கிறது. இவரது எடை தற்போது 121 பவுண்டாக இருக்கிறது. இதில் அவரது வயிறு மட்டுமே 44 பவுண்ட் (19 கிலோ) எடைக்கொண்டதாக இருக்கிறது. இவர் கடந்த இரண்டு வருடமாக இந்தப் பிரச்னையை சந்தித்து வருகிறார். வயிறு பெரிதாகி வலி ஏற்பட்டவுடன் ஹுவாங் மருத்துவ உதவியை நாடியுள்ளார். மருத்துவர்கள் வலியை குறைப்பதற்கு மருந்துகளை தந்துள்ளனர்.

மருந்துகளின் மூலம் வயிறு வலி குறைந்த போதிலும், அவரது வயிசீனாவில் உள்ள பெண் ஒருவரின் வயிறு பெரிய அளவில் வீங்கியதால் அவர் தூங்கக்கூட முடியாமல் வேதனை அடைந்துள்ளார். சீனாவைச் சேர்ந்தவர் ஹுவாங் குவாக்சியன். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது வயிறு தற்போது வரை வீங்கிக் கொண்டு தற்போது இவரது இஎடை 121 பவுண்டாக சென்று கொண்டிருக்கின்றனர். இவரது வயிற்றின் எடை மட்டும் 19 கிலோ எடையும் காணப்படுகின்றது. கடந்த இரண்டு வருடமாக இந்தப் பிரச்னையை சந்தித்து வரும் இப்பெண், தற்போது வயிறு பெரிதாகி வலி ஏற்பட்டவுடன் ஹுவாங் மருத்துவ உதவியை நாடியுள்ளார்.

குறித்த பெண் மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்த்தும் வலியும், வீக்கமும் அதிகமாகிக்கொண்டே இருந்துள்ளது. பின்பு அவரது உடல்நிலையை ஆராய்ந்த மருத்துவர்கள் அவருக்கு கல்லீரல் நோய், கருப்பை புற்றுநோய், உடலில் கட்டி உருவாகுதல், அடிவயிறு மற்றும் மார்பு ஆகியவற்றில் தேவையற்ற திரவம் உருவாகுதல் உள்ளிட்டவை இருப்பதைக் கண்டறிந்தனர். ஆனால், அவர்களால் வயிறு ஏன் பெரிதாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. இது குறித்து ஹுவாங் கூறும்போது, “எனது வயிறு இப்படி வீங்கி இருப்பதால் என்னால் நிம்மதியாக தூங்கக் கூட முடியவில்லை. எனது இரு குழந்தைகளை கவனிப்பதென்பது பெரும் சிரமமாக உள்ளது.

நான் தெருவில் நடந்து செல்லும் போது என்னை மக்கள் கர்ப்பிணியாக பார்க்கிறார்கள் குழந்தைகளை அவரது தாத்தாவும் பாட்டியும் கவனித்துக் கொள்கிறார்கள். நான் சீக்கிரம் இந்த நோயிலிருந்து வெளிவந்து விடுவேன் என்று நம்புகிறேன்” என்றார். ஹுவாங் குவாக்சியன் அண்மையில் சமூக வலைதளங்களில் தனது நிலைமையை வெளிப்படுத்திச் சிகிச்சைக்காக பண உதவி ஈட்டியது குறிப்பிடத்தக்கது.றானது வீங்கிக் கொண்டே சென்றுள்ளது.

அவரது உடல்நிலையை ஸ்கேன் செய்து ஆராய்ந்த மருத்துவர்கள், அவருக்கு கல்லீரல் நோய், கருப்பை புற்றுநோய், உடலில் கட்டி உருவாகுதல், அடிவயிறு மற்றும் மார்பு ஆகியவற்றில் தேவையற்ற திரவம் உருவாகுதல் உள்ளிட்டவை இருப்பதைக் கண்டறிந்தனர். ஆனால், அவர்களால் வயிறு ஏன் பெரிதாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. இது குறித்து ஹுவாங் கூறும்போது, “எனது வயிறு இப்படி வீங்கி இருப்பதால் என்னால் நிம்மதியாக தூங்கக் கூட முடியவில்லை. எனது இரு குழந்தைகளை கவனிப்பதென்பது பெரும் சிரமமாக உள்ளது.

நான் தெருவில் நடந்துச் செல்லும் போது என்னை மக்கள் கர்ப்பிணியாக பார்க்கிறார்கள் குழந்தைகளை அவரது தாத்தாவும் பாட்டியும் கவனித்துக் கொள்கிறார்கள். நான் சீக்கிரம் இந்த நோயிலிருந்து வெளிவந்து விடுவேன் என்று நம்புகிறேன்” என்றார். ஹுவாங் குவாக்சியன் அண்மையில் சமூக வலைதளங்களில் தனது நிலைமையை வெளிப்படுத்திச் சிகிச்சைக்காக பண உதவி ஈட்டியது குறிப்பிடத்தக்கது




You cannot copy content of this Website