கைவிட்ட பிள்ளைகள்.., கவனிக்க ஆளில்லாமல் பரிதாபமாக இறந்த நடிகை

January 12, 2021 at 10:35 pm
pc

மலையாளம் மற்றும் தமிழில் 100 திரைப்படங்களில் நடித்துள்ளவர் பழம்பெரும் நடிகை பால தங்கம். பன்முகத்தன்மை கொண்ட இவர் பாடகியாகவும் டப்பிங் கலைஞர் ஆக இருந்துள்ளார். ராதாமணி என்ற இயற்பெயரை கொண்டவராக இருந்த அவர் சினிமாவுக்கு வந்த பின்னர் பால தங்கம் என பெயரை மாற்றி கொண்டார்.

பால தங்கமின் கணவரான காவல் துறை அதிகாரி ஸ்ரீதரன் ஏற்கனவே விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மகள் அம்பிலி ஏற்கனவே இறந்துவிட்டார். பின்னர் இரண்டு மகன்களும் தங்கத்தை கைவிட்ட நிலையில் முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தங்கம் நேற்று உயிரிழந்தார்.அவர் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website