மாஸ்டர் படம் பார்ப்பவர்களுக்கு மரக்கன்றுகளை

’மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பெரும்பாலான பாஸிட்டிவ் விமர்சனங்கள் ரசிகர்கள் மற்றும் நடுநிலையாளர்களிடம் இருந்து வந்துகொண்டு இருக்கின்றன என்பதால் இந்த படத்தின் வெற்றி உறுதி என்றே தெரிகிறது”
தமிழகத்தில் மட்டுமின்றி வட இந்தியாவிலும் ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகியுள்ளது என்பது தெரிந்ததே. அந்த வகையில் மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் ’மாஸ்டர்’ திரைப்படத்தை காண வந்த பொதுமக்களுக்கு சானிடைசர் மற்றும் மரக்கன்றுகளை கொடுத்து விஜய் ரசிகர்கள் வரவேற்று அசத்தியுள்ளனர்.
படம் பார்க்க வந்த பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் ’மாஸ்டர்’ படத்தை பார்த்து விட்டு கையில் மரக்கன்றுகளுடன் சென்றது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.