வெளிச்சத்துக்கு வரவிருக்கும் விஷால், காயத்ரி ரகுராமின் அந்தரங்க விஷயங்கள்!

June 9, 2021 at 8:39 am
pc

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர் காயத்ரி ரகுராம். இவர் கதாநாயகியாக சினிமாவில் வெற்றி பெற்றதை விட நடன இயக்குனராக பல படங்களில் பணியாற்றி வெற்றி பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த காயத்ரி ரகுராம் அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராமல் சற்று ஒதுங்கி இருந்தார். ஆனால் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி அவரை அழைத்துவர மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து தற்போது தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி வருகிறார்.

சென்னையில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரத்தில் பலரும் பல்வேறு கருத்துக்களைக் கூறிவருகின்றனர். பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட விஷயம் காட்டுத் தீ போல் பரவ அந்த பள்ளி ஆசிரியரை கைது செய்தனர்.

ஆனால் பலரும் கேவலமான செயலில் ஈடுபட்ட அந்த ஆசிரியர் மீது வைத்திருந்த கோபத்தை விட அந்த பள்ளியின் மீது தான் பலரும் கோபம் வைத்திருந்தனர். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை ஒருவேளை தற்போது பிரபலங்களாக இருக்கும் பலர் அந்த பள்ளியில் நிராகரித்துள்ளனர் என்பதால்தான் அந்த பள்ளி மீதுபிரபலங்களுக்கு இவ்வளவு கோபம் என ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் விஷால் பள்ளியை இழுத்து மூட வேண்டும் என கொந்தளித்திருந்தார். அதற்கு காயத்ரி ரகுராம் விஷாலால் பல நடிகைகள் சீரழிந்ததாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். அதன் பிறகு விஷால் வாயை திறக்கவில்லை. இந்நிலையில் மூத்த பத்திரிகையாளரான பிஸ்மி வலைதள பேச்சு ஒன்றில் விஷாலை எதற்காக காயத்ரி ரகுராம் திட்டினார் என கேட்டனர். அதற்கு பிஸ்மி காயத்ரி ரகுராம் மற்றும் YG மகேந்திரன் உறவுக்காரர்கள் உற்று நோக்கினால் அவர்களது உறவு முறை கூட உங்களுக்கு புரியும் என நாசுக்காக பதில் கூறினார். அதனால் தான் அந்த பள்ளிக்கு ஆதரவாக பேசினார் எனவும் தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் திரையுலக பிரபலங்கள் பற்றி தெலுங்கு சினிமா நடிகை ஸ்ரீரெட்டி பல அந்தரங்க விஷயங்களை வெளியிட்டார். அப்போது ஏன் காயத்ரி ரகுராம் மற்றும் விஷால் போன்றவர்கள் பேசவில்லை என கேட்டனர். அதற்கு பிஸ்மி தமிழ் திரையுலக பிரபலங்களின் அந்தரங்க விஷயங்கள் முழுவதும் ஸ்ரீரெட்டி தெரியும். அப்போது வாய் திறந்திருந்தால் காயத்ரி ரகுரம் மற்றும் விஷால் சம்பந்தப்பட்ட அந்தரங்க விஷயங்களை வெளியாகியிருக்கும் என்பதால்தான் அவர்கள் பேசி இருக்க மாட்டார் என கிண்டலடித்தபடி கூறினார்.

இதனை பார்த்த ஒரு சிலர் பிஸ்மி ஒரு பத்திரிக்கையாளர் என்பதால் தனது மனதில் பட்டதை எல்லாம் கூறுகிறார். ஆனால் அது உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை என கூறிவருகின்றனர். அது மட்டுமில்லாமல் சினிமாவில் யாருதான் நல்லவர்களாக இருக்கிறார்கள் எனவும் பிஸ்மிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website